9/23/2012

கண் எனத் தகும் எழுத்துக்களா இவைகள் !.......


தூங்காமல் விழித்திருந்து தினமும் 
தூசி தட்டி பல நினைவுகளை 
ஏன்தான் இங்கு எழுதுகின்றார்கள்  
எல்லாமே பயன்தரும் செய்தி என்றோ !....

நாம் பாடும் பாட்டு அது ஒரு 
நால்வகைக் கூற்று பாரிதை!!!!........
கண்டதும் கேட்டதும் கற்றதும் 
உணர்ந்து நாம் பெற்றதும் 

எத்தனைக் கெத்தனை உண்மைகள் 
இத்தனை வகையாம் எழுத்தினிலே !....
நல்லதை மட்டும் நாம் நிறைப்போம் 
அதையே நலன்பெற இங்கே எடுத்துரைப்போம்!...

சொன்னவர் பெயரும் நிலைத்திடவே 
மிகு "சுகம் தரும்" செய்திகள் பகிர்ந்திடுவோம் 
இல்லையேல் துறவு நாம் பூண்டிடுவோம் 
இனியவை தொடர்ந்திட வாழ்துரைப்போம்!...

இல்லை ஓர் குறை இங்கு உலகினிலே 
இருக்கவே இருக்கிறது பல நன்னூல்கள் 
உள்ளதைச் சொன்னால்  இவை போதும் 
மனிதன் உருப்படியாக இங்கு வாழ்வதற்கு !...

என்னமோ போங்க உறவுகளே 
எமக்கும் உள்ளது  பற்றுதான் தமிழ்மீது 
இல்லையேல் ஏன் இங்கு கிறுக்குகிறோம்!...
எம்மவர் படித்துத்  திட்டிடவா !!!!.......

தொல்லைகள் நீங்கிட பாடுபடுவோம் எதிலும் 
ஒரு தோழமையோடு செய்தி பகிர்வோம் ......
நல்லதையே என்றும் நினைத்திடுவோம் 
நாம் தமிழர் என்றே தினம் வாழ்ந்திடுவோம்!....

பொல்லாப்பு இங்கு எமக்கெதற்கு!!!!.......
புவி போற்றும் நல் வாழ்வு கூட இருக்கயிலே! ..
எல்லோரும் மகிழும் நிலை வேண்டும் 
இதற்காக எழுதுங்கள் அன்பு உறவுகளே 

கண்டதைக் கேட்டதைக்  கற்றதை மற்றதை 
அற்புதம் அற்புதம் என மனம் மகிழ்ந்து 
உங்களைப்  பிறரும்  வாழ்த்திட போற்றிட எழுதுங்கள் 
எழுதிடும் எழுத்தினைக் கண் என மதித்திங்கு..........!

                                           

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:

  1. இந்த கவிதை வரிகளை படித்து யாரவது ஒருவர் திருந்தினால் கூட அது இந்த கவிதைக்கு கிடைத்த வெற்றியே!

    ReplyDelete
  2. கவிதை நன்று. கடைசி வர்கள் பதிவர்களுக்காக எழுதப்பட்டதோ?
    த.ம.2

    ReplyDelete
  3. உங்களைப் பிறரும் வாழ்த்திட போற்றிட எழுதுங்கள்
    எழுதிடும் எழுத்தினைக் கண் என மதித்திங்கு..........!
    சிறப்பான வரிகள் சிந்தையில் பதிந்தது.

    ReplyDelete
  4. பலரும் அறிய வேண்டிய கருத்துக்கள் அடங்கிய உண்மை வரிகள்...

    ReplyDelete
  5. த.ம.5

    அருமையான கருத்துள்ள இன்றைய உலகம் அறியவேண்டிய ஆழ்ந்த நன்னெறி வரிகள் இவை அம்பாளடியாள்....

    குழந்தைகள் சிறுவயதில் இருந்தே இப்படி நன்னெறி கருத்துகளும் கல்வியும் ஒழுக்கமும் கொண்டு வளரும்போது சிந்தனைகளும் நல்லவையாக பெற்றோரும் உற்றோரும் உலகமும் போற்றும் உத்தமராக இருப்பர் என்பதில் ஐயமில்லை...

    அருமையான வரிகளின் சிறப்பும், தமிழ்ப்பற்றும் அறியமுடிகிறது அம்பாளடியாள்...

    நல்லவை எங்கு கண்டாலும் யார்ச்சொல்ல கேட்டாலும் எங்காவது கற்றுக்கொள்ள நேர்ந்தாலும் அவை தன்னுடனே இருந்துவிடாமல் பிறருக்கும் பயன் தரும்படி எல்லோருக்கும் பகிருங்கள் என்று சொன்ன விதம் அருமை...

    சிந்தனைத்துளிகளின் கவிதைப்பெருக்கு மிக பிரமாதம்... அன்பு வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. எழுத்தால் ஒருவரைக் கொல்லவும் முடியும் வெல்லவும் முடியும்.அது ஒரு ஆயுதம்.பிரயோசனமாகப் பயன்படுத்துவதே எழுத்தின் வெற்றி.அருமையான சிந்தனை அம்பாள் !

    ReplyDelete

  7. “என்னமோ போங்க உறவுகளே
    எமக்கும் உள்ளது பற்றுதான் தமிழ்மீது
    இல்லையேல் ஏன் இங்கு கிறுக்குகிறோம்!...
    எம்மவர் படித்துத் திட்டிடவா !!!!.......“

    நம்முடைய ஆற்றாமையை அழகுத் தமிழில்
    தொடுத்திருக்கிறீர்கள் அம்மா.
    வாழ்த்தி வணங்குகிறேன்.

    ReplyDelete
  8. எழுத்தின் வலிமையை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........