9/07/2012

.பின்தொடர் வாழ்வு இனிக்கும்!.......


யாசிக்கும் கரங்களை நேசிக்க மறந்து
நாம் சுவாசிக்கும் காற்றிலே இங்கு
இருந்தென்ன  பயனோ !..........என
யோசிக்க வைக்கும் மனிதர்கள் இவர்கள் !...

கால் பட்ட மண்ணும் பொன்னாகும்
கை தொட்டால் துன்பம் கரைந்தோடும்
தேசத்தின் நன்மை தன் நன்மை என்றே
பெரும் தியாகத்தால் வாழ்வில் உயர்ந்தாரே!...

அறிவுக்கும் அன்புக்கும் குறைவற்ற மேதைகள்
அகங்காரம் இல்லாத ஆனந்த ஜோதிகள்  இவர்கள்
உருவத்தை மனதிலே   நிறுத்தி வைத்தாலே
உள்ளத்தில் என்றும் தெளிவு பிறக்கும் !...........

ஆங்காரம் கொண்ட சில மனிதர்களுக்கும்
வண்டின் ரீங்காரம் கூட தாங்காது என்றும்!....
நாம் வாழும் வாழ்க்கைப் பாதைகள் இங்கே
நலமாக அமைய பெரும் துணை வேண்டும் எனவே

தொடருங்கள் இனிய  நல் இதயங்களே
தூயவர் இவர்கள் பாதச் சுவடுகளை
கொடிபோல படரும் அறியாமை நீங்கும்
கொடை  வள்ளல் ஆகும் குணம் தன்னால் வளரும்!...

கண்களில் பட்ட தெய்வங்கள் இவர்கள்
கருணைக்குக் கடலென சொன்னாலும் தகும்!....
விண் போற்ற இங்கே வாழ்ந்தாலும் கூட
வீணாக புகழுக்கு கொடி ஏந்தவில்லை !!!!.....

பிறர் வாழ்த்த வாழும்
குணம் ஒன்று இருந்தால் 
பிறவிக்குப் பெருமை
தன்னாலே சேரும் !.......

மிதம் மிஞ்சும் கர்வம்
அழிவுக்கே அர்த்தம்
இதை ஏற்றுக்  கொண்டால்
வாழ்க்கை இதமாகத்  தோன்றும் !....

நிலையில்லா செல்வம்
தினந்தோறும் தேடி
அழியாது இனியும் நாம்
மனிதராய் வாழவே  இவர்களைத்தான்!!!......
                                                                
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11 comments:

  1. உன்னத மனிதர்கள்.பிறந்தால் இவர்களைப்போல பிறத்தல் வேண்டுமென ஏங்கவைத்துவிட்டு மனதில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.இவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்தான்.நினைவூட்டியமைக்கு நன்றி அம்பாள் !

    ReplyDelete
  2. மிக்க நன்றி சகோ தங்கள் இனிய கருத்திற்கு .

    ReplyDelete
  3. அறிவுக்கும் அன்புக்கும் குறைவற்ற மேதைகள்
    அகங்காரம் இல்லாத ஆனந்த ஜோதிகள் இவர்கள்//

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    இதுபோன்ற தன்னலம் மறந்த
    ஆனந்த ஜோதிகள் தானே
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நிலையில்லா செல்வம்
    தினந்தோறும் தேடி
    அழியாது இனியும் நாம்
    மனிதராய் வாழவே இவர்களைத்தான்!!!......

    அருமையான பதிவு, அர்த்தமுள்ள வாரத்தைகள்

    ReplyDelete
  5. பல கருத்துக்களை உள்ளடக்கிய சிறப்பான கவிதை... நன்றி... குறள் எண் ஐம்பது ஞாபகம் வந்தது...

    ReplyDelete
  6. //நிலையில்லா செல்வம்
    தினந்தோறும் தேடி
    அழியாது இனியும் நாம்
    மனிதராய் வாழவே இவர்களைத்தான்//

    நெற்றியடி சொற்கள் ! அருமையான கவிதை !!!

    ReplyDelete
  7. கவிதை ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  8. உன்னத மனிதர்களைப் பற்றி வந்த உன்னதமான கவிதை
    வாழ்த்துகள் சகோதரி

    ReplyDelete
  9. சிறப்பான கவிதை சகோ. வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. நிலையில்லா செல்வம் தேடி அலையாமல் மனிதராய் வாழ்வோம்! சிறப்பான வரிகள்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

    சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html

    ReplyDelete
  11. கண்களில் பட்ட தெய்வங்கள் இவர்கள்
    கருணைக்குக் கடலென சொன்னாலும் தகும்!....

    உண்மையைச் சொன்னீர்கள்.
    இவர்கள் தான் கண்கண்ட தெய்வங்கள்.

    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........