நெஞ்சைத் தொடும் இராகங்கள்
இவை கேட்டால் என்றும் மோகம்தான்
இன்னும் இன்னும் வேண்டும் என்று
இதயம் மகிழ்ந்து கேட்க்கும் இதையே!!....
தந்தாய் இன்ப வெள்ளத்தில்
தவழ்ந்தோம் நாமும் உன்னாலே
உந்தன் பாட்டே எமக்கு யீவன்
என்றால் அதுவும் மிகையாகாது !......
சின்னச் சின்ன மெட்டெடுத்து இசையில்
பெரும் சிகரம் என நிற்கும் ஐயா
உன்னைக் காணும் ஆவல் எமக்கு
உள்ளத் திரையில் தினமும் ஓடுதிங்கே....
இந்தக் கங்கை நதியின் அடையாளம்
உன் கண்ணில் பட்டால் அது யோகம்
கல்லை முள்ளைத் தாண்டி வந்தும்
உன் காலைத் தொட்டால் அது போதும்!....
சொல்லுக்கிதமாய் மெட்டெடுத்து மனம்
சொக்க வைக்கும் உன் திறனை என்றும்
வெல்ல இங்கே யாரால் முடியும் என
வியந்தே நிக்குது எம் மனமும் ஐயா!....
பையைப் பைய துயர் நீங்கும் உன்
பாட்டொலியைக் கேட்டால் இங்கே
இந்த வரம் தந்த இறைவன் அவனை
இதயம் மகிழ்ந்து வணங்குகின்றோம்.....
இன்னும் ஜென்மம் பல நூறு
இணைந்தே வாழத் தமிழிசையோடும்
அள்ளிக் கொடுப்பாய் நல் வரமிங்கே
அதுவே போதும் எம் இறைவா வா!......
உருக்கமான வரிகள் .நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
சிறப்பான வரிகள்... பெருமைக்கு பெருமை சேர்க்கிறது....
ReplyDeleteஇன்னும் ஜென்மம் பல நூறு
ReplyDeleteஇணைந்தே வாழத் தமிழிசையோடும்
அள்ளிக் கொடுப்பாய் நல் வரமிங்கே
அதுவே போதும் எம் இறைவா வா!......
ரசித்த வரிகள்
நல்ல வரிகளின் கோர்வை கொண்ட கவிதை....
ReplyDeleteஇசைஞ்ஞானிக்கு இசைவான கவிதை
இசைமேதைக்கு ஒரு இன்கவி வாழ்த்து. நல்ல ரசனை கொண்ட பாட்டுத்தலைவனுக்கு ரசனையான கவிப்பாராட்டு. உங்களோடு நானும் பாராட்டுகிறேன் அம்பாளடியாள்.
ReplyDelete