9/24/2012

விரைந்து வா நீ அது போதும் .இரவைப் பகலாக்கினாய்
பகலை இரவாக்கினாய் என்
உணர்வில் கலந்தவளே நீ இன்று
என்னை என்ன செய்யப் போகிறாய் !....

மனதைக் குடைந்து மறுபடியும்
உன்னை நான் தேட என்னுள்
உறைந்து கிடந்து கொஞ்சம்
சந்தம் தர நீ மறுக்க நான் ஏங்கவோ!....

சொல்லில் பொருளில் மேலும்
மேலும் பிழைகள் கண்டு நான்
உன்னைத் திருத்த நீ என்னைத் திருத்த
நெஞ்சம் அலை மோதும் வலி தாங்கவோ...

சொன்னால் புரியாது நான்
உன்னால் படும் பாடு !!........
பின்னால் தொடராதே என நானே சொல்லி
உன்னை நானே அழைக்கின்றேன் !!!............

தேனும் பாலும் தெவிட்டவில்லை உன்னை
எந்நாளும் அணைக்கத் துடிக்கின்றேன் !...
இந்த வானும் மண்ணும் கூட இங்கே
இதற்காக அலைவதைப் பார்க்கின்றேன்!...

இனி போதும்  என நான் அடங்க மாட்டேன்
இளம் பூவே என்னை வாட்டாதே தினம்
நீயும் நானும் சேர்ந்திருந்தால் அதில்
திரளும் இன்பம் பல கோடிபெறும் !..........

நாம்  வாழும்போதே இந்த சுகம்
வளமாய் அமைய எந்நாளும்
இங்கு காணும் காட்சி அத்தனையும்
என் கவிதைப்  பெண்ணே   நீயாக வேண்டும் !!!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6 comments:

 1. மிகவும் அருமையான வரிகள் நண்பரே...

  என் தளத்தில்
  என் காதல் க(வி)தை... 03

  ReplyDelete

 2. //தேனும் பாலும் தெவிட்டவில்லை உன்னை
  எந்நாளும் அணைக்கத் துடிக்கின்றேன் !...
  இந்த வானும் மண்ணும் கூட இங்கே
  இதற்காக அலைவதைப் பார்க்கின்றேன்!...//

  super vaalththukkal

  ReplyDelete
 3. >>>சொன்னால் புரியாது நான்
  உன்னால் படும் பாடு<<<

  காதல் என்றாலே படாதபாடுதானே! நல்ல கவிதை சகோ!

  ReplyDelete
 4. ம்ம்ம் ..அருமை சகோ

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........