உன்னோடு தான்
உறவாடினேன்
உனக்காகத்தான்
உயிர் வாழ்கிறேன்
மண்ணோடு கலந்தாலும்
மறையாத நேசம்
என் வாழ்வில் ஏன் தந்தாய்
இது போல் ஓர் ஏக்கம்
கண்ணா நான் அழைக்கின்றேன்
கவி பாடிக் களைக்கின்றேன்
சும்மா ஏன் வெறுக்கின்றாய்
சோகத்தில் குளிக்கின்றாய்
தள்ளாடித் தள்ளாடி
மனம் ஏங்குதே!
தலையணையோடு கதை பேசி
விழி வாடுதே!
உன்னோடு நான் சேர
வழியில்லையா?
உயிர் அற்ற பிணம்
வாழ முடியாதைடா
என் சீவன் உன் சீவன் என்றான பின்
இதயத்தின் ஓசைகள் வேறாகுமா?
நீ கொண்டாடும் இடம் வேறு என்றானதால்
அன்றாடம் என் வாழ்க்கை திண்டாட்டத்தில்
கண்ணாடிப் பொருள்மீது கல் பட்டாலும்
கல் மீது கண்ணாடி தான் பட்டாலும்
கண்ணாடி தான் இங்கு உடையுமடா
உன்னாலென் உயிர் போகக் கூடாதடா ....
உறவாடுகிற விஷயங்கள் இங்கு நிறையவே இருக்க கவியும் முகிய உரையாய். நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே தங்கள் வரவுக்கும் இனிய கருத்திற்கும் .
Deleteஎடுப்பு
ReplyDeleteஅம்பாள் என்தோழி! - நாளும்
அருந்தமிழ் பாடிப் பெருமையுடன் வாழி!
[அம்பாள்]
தொடுப்பு
ஒண்டமிழோ உறவாடினாய்! - தோழி
உயா்அருளோடு கவிபாடினாய்!
[அம்பாள்]
துணையொடுப்பு
தண்டமிழோடு விளையாடினாய்! - புகழைச்
சந்த இசைபாடித் தலைசூடினாய்!
[அம்பாள்]
முடிப்பு
கற்றோரைப் போற்றிக் களிப்பெய்தினாய்! - பெற்ற
பெற்றோரைப் போற்றி இனிப்பெய்தினாய்!
உற்றோரைப் போற்றி உவப்பெய்தினாய்! - நெஞ்சுள்
பொற்றமிழைப் போற்றிச் சிவப்பெய்தினாய்!
[அம்பாள்]
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
எடுப்பு ,தொடுப்பு ,துணையொடுப்பு முடிப்பு என்று
Deleteஉள்ளத்தில் எழுந்த உணர்வுகளை எண்ணக் கருத்தினை
இரசித்து ரசித்து தந்தமை குறித்து மனம் ஆனந்தக்
கூத்தாடுகின்றது ஐயா .எழுதும் போது கூட பெற்றிடாத
இன்பத்தை தங்கள் கருத்து தந்து மகிழ வைத்தது குறித்து
உங்களுக்கு எனது நன்றிகள் பல கோடி ஐயா !................
ReplyDeleteதோழி வணக்கம்!
தொடா்ந்து உங்கள் இசைப்பாடல்களைப் படித்து மகிழ்கிறேன்
இசைப்பாட்டுக்குரிய சில அடிப்படை இலக்கணத்தை
நீங்கள் அறிந்துகொண்டால் இயற்றும் பாடல் இன்னும்
சிறப்புடன் அமையும்!
நீங்கள் சுவிசு நாட்டில் இருப்பதாக அறிகின்றேன்!
தொலைபேசி எண்களை எழுதவம்!
தொலைபேசியின் வழியாகவே இசைப்பாட்டுக்குரிய
இலக்கணக் கூறுகளைத் தெரிவிக்கின்றேன்!
நட்புடன்
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
என் தொலைபேசி எண்கள் 0033 139931706
வணக்கம் ஐயா
Deleteஎன்னைப் போற்றுவதில் கூட இன்பம் காணும்
தங்களின் முன் சிரம் தாழ்த்தி நிற்கின்றேன்
இந்த வாழ்த்துக்களும் ஊக்குவிப்புக்களுமே
என் பாட்டுகளுக்கு சந்தங்களாக அமைகின்றது
என்பதே என் ஆழ்மனதில் குடிகொண்ட விடயம்
அவசியம் தொடர்பு கொண்டு உங்கள் கருத்தினையும்
உள்வாங்கிக் கொள்வேன் .மிக்க நன்றி ஐயா
உணர்வற்றுப் போகாதே
ReplyDeleteஉயிர்கொண்ட வெண்ணிலவே...
உணர்வு வற்றிப் போகுமுன்
உயிருடன் கலந்திடுவோம்...
அருமையான பாடல் சகோதரி...
மிக்க நன்றி சகோதரா வரவுக்கு இனிய நற் கருத்திற்கும் !
Deletenalla kavithai...!
ReplyDeleteமிக்க நன்றி சகோ கருத்துக்கு !
Deleteசோகம் சுகம் ஆகட்டும்...
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் !
Deleteகண்ணாடிப் பொருள்மீது கல் பட்டாலும்
ReplyDeleteகல் மீது கண்ணாடி தான் பட்டாலும்
கண்ணாடி தான் இங்கு உடையும் ஐயா
உன்னாலென் உயிர் போக வேண்டாமையா .......//
நல்ல வரிகள் சோகத்தின் சுவடுகளை அழகாக சொல்லி..........
மிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் !
Deleteகாதல் சோகம் விரைவில் மகிழ்ச்சியாகட்டும்! அருமையான படைப்பு! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் !
Deleteநல்ல பாடல்....
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே வரவுக்கு இனிய நற் கருத்திற்கும் !
Deleteஅழகான கவிதை...
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி வரவுக்கு இனிய நற் கருத்திற்கும் !
Delete