4/03/2013

கவச குண்டலங்கள்....


கவச குண்டலங்கள்
இழந்து மண்டலத்தில்
குழந்தை போலே நானுறங்க
அதில் படரும்
கொடி போல்
எனது தலைவா
காட்டு உன்றன் கைவரிசை !


உயிரில் பிரியமில்லை
என்னுடலில் எதுவுமில்லை
உணர்வில் மட்டும் நீ கலக்க
நல்ல  தருணம் இதுவே
சரணம் எனதே
காட்டு உன்றன் கைவரிசை!

மெழுகில்  திரியைப் போல
என் உயிரில் கலந்த உன்னை
ஒளியை ஏற்ற அழைக்கின்றேன்
வரும் இருளைத் தகர்த்தி
அமுதம் பொழியக்
காட்டு உன்றன் கைவரிசை!

மலரில் மணமும் உண்டு
உன் மனதில் இடமும் உண்டு
என் நினைவை மட்டும்
ஏன் மறந்தாய்?
இரு கரங்கள் தொடுத்து
வரங்கள் கொடுத்தவனே
காட்டு உன்றன் கைவரிசை

                          (கவச குண்டலங்கள்)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

22 comments:

  1. அருமை... பாட்டு வரிகளில் உங்கள் கைவரிசை மிளிர்கிறது....

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரரே !..........

    ReplyDelete
  3. படித்தும் பாடியும் ரசித்தேன்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் தங்கள் வாழ்த்திற்கும் .

      Delete
  4. நல்ல கவிதை...

    பாராட்டுகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் !

      Delete
  5. வணக்கம் உறவே

    மீனகம் திரட்டியில் உங்கள் இணையத்தை பதியவும். உங்களின் இடுகைகள் செய்தியோடை (RSS Feed) வாயிலாக எளிதாக திரட்டப்படும்...

    http://www.thiratti.meenakam.com/

    ReplyDelete
  6. அழகிய கவிதை. அருமை. வாழ்த்துக்கள் தோழி!

    கவசகுண்டலமாய் உன்
    நல்மனமும் உண்மையுங்கண்டு
    விரைந்துனை மணங்கொள்ள
    வருவான் புரவியிலொருவன்...:)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் !

      Delete
  7. பெண் மன ஏக்கத்தை எடுத்தியம்பும் அழகான பாடல் வரிகள். மெட்டோடு ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள் அம்பாளடியாள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழி தங்கள் வரவும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன் !

      Delete
  8. மெழுகில் திரியைப் போல
    என் உயிரில் கலந்த உன்னை
    ஒளியை ஏற்ற அழைக்கின்றேன்
    வரும் இருளைத் தகர்த்தி
    அமுதம் பொழியக்
    காட்டு உன்றன் கைவரிசை//

    அருமையான வரிகள்.
    கவிதை மிக நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

      Delete
  9. Replies
    1. வணக்கம் !
      மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .

      Delete
  10. நண்பரே அருமையான பதிவு, மேலும் ஒரு தகவல் . கூகுளே அட்சென்ஸ் போல. http://www.taxads.in/ தமிழ் தளங்களுக்கு விளம்பரம் தருகிறார்கள். உங்கள் தளத்தையும் பதிவு செய்து பயன் பெறுங்கள். http://www.taxads.in/

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தகவலுக்கு !

      Delete
  11. பாடிப்பார்த்தே எழுதுவீர்களா...?
    அழகான மெட்டுக் கவிதை.
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழி இது கவிதை அல்ல பாடல் .
      மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் ¨.....

      Delete

  12. வணக்கம்!

    காதல் கவியில் கமழும் கவிஞன்யான்
    மோதல் இலாமல் மொழிகின்றேன்! - மாதவமே!
    நெஞ்சம் நெகிழ்ந்துருகும் உன்நேய சொல்யாவும்
    விஞ்சும் இனிமை விளைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........