உறங்கும் போதும் உன் நாமம்
விழிக்கும் போதும் உன் நாமம்
எமக்குத் தெரிந்தது அதுவொன்றே
நாம் என்ன செய்வோம் இறைவா சொல் !..
மறக்க முயன்றால் முடியாது
மனதின் சுமைகளும் குறையாது
நாம் தொடுக்கும் காரியம் அத்தனையும்
துலங்கும் உன்றன் அருளாலே!...........
விரித்த சடை முடியோனே
நால் வேதமும் போற்றும் நாயகனே
துடிக்கும் மனமிதை அறிவாயோ
மேவிடும் துயர்களைப் போக்க வருவாயோ
சிவ சிவ சிவ என்று சிந்திப்போம்
சிந்தையில் நல்லதை நாம் நினைப்போம்
அவனருளாலே வரும் நன்மைகளை
அவனியில் என்றும் நாமடைவோம்
தேவர்கள் படும் துயர் தீர்த்தவனை
எம்மைத் தேடியே நன்மைகள் அருள்பவனை
எந்நாளும் பாடியே பரவசம் அடைந்திடுவோம்
இறை பக்தியை விட ஒன்றும் சிறந்தில்லை .....
சிவ சிவ சிவ என்று சிந்திப்பதோடு சிந்தையில் நல்லதையே நினைப்பதும் நிம்மதியான வாழ்வுக்கு ஆதாரம். அன்பே சிவம்! சிவம் போற்றும் அற்புதக் கவிதைக்குப் பாராட்டுகள் அம்பாளடியாள்.
ReplyDeleteமிக்க நன்றி தோழி முதல் வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் !
Deleteராமனின் அருள் கிடைக்கட்டும் உங்களின் மனம் குளிரட்டும் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி ஐயா வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் !
Deleteநல்ல பாடல்......
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ.
மிக்க நன்றி சகோ வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் !
Deleteஅனைவருக்கும் அருள் புரியட்டும்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோ வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் !
Deleteஅவனருளாலே அவன் தாள் வணங்கி...
ReplyDeleteஅழகிய கவிதை. வாழ்த்துக்கள் தோழி!
மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteஎந்நாளும் பாடியே பரவசம் அடைந்திடுவோம்
ReplyDeleteஇறை பக்தியை விட ஒன்றும் சிறந்தில்லை .....//
ஆம், உண்மை.
இறை பக்தியை விட ஒன்றும் சிறந்தது இல்லை.
மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
Deleteசிவனருள் வேண்டும் கவிதை! அருமை! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் பாராட்டிற்கும் .
Delete