9/21/2014

சோகம் தவிர்த்து வா சொக்க வைக்கும் கவிக்குயிலே !



வானம் வசப்பட வேண்டுமெனில் எந்நாளும்
கானம் இசைத்திடு காவியமே !- ஊனமது
பார்ப்பவர் கண்ணுக்கே! பாராதே நல்மனமே!
வார்த்துக் கொடுப்பாய்  வளம் !

சினத்தால்  அழியாத சிந்தையும் உண்டோ!
மனத்தை அடக்கு(க )  மகிழ்ந்து !-இனத்தின் 
பெருமையும் ஏற்ற புகழும்  தழைக்க
வருவதை  ஏற்கும்  விருப்பு

ஒதுங்கும் மனத்தை உணர்ந்தே தவித்தேன்!
பதுங்கிடல்  நன்றல்ல பெண்ணே !-பிதுங்கும்
விழிநீர்  தவிர்த்து வருவாய் விரைவாய்!
பழியாவும்  போக்கும்  பயன்!

கடமை உணர்ந்த கவிக்குயிலே!  இன்றே 
மடமை தவிர்ப்பாய் மகிழ்ந்து !-உடமை 
எமக்குத் தமிழாகும் இன்னுயிரே வாவா !
சுமப்போம் மகிழ்வாய்ச் சுடர்ந்து !

இன்பத் தமிழால் இனித்திடலாம் வான்நிலவே !
துன்பம் தரித்துத் துவளாமல்!- அன்பை
உணர்த்தும் கவிதை புனைந்தாலே போதும்!
கணத்தில் மறையும் கசப்பு!

கற்றோர் புகழக் கவிதந்து எந்நாளும் 
பெற்றோர் மகிழப் பெருமையுறு !-உற்றதுணை
நற்றவத்தால் வந்ததிந்த ஞானம் எனப்போற்று!
வற்றாது தங்கும்  வளம் !

(படம்: கூகுளில் பெற்றுக்கொண்டது .நன்றி !)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

17 comments:

  1. அருமையான வெண்பாக்கள்.

    அதிலும்....

    துன்பம் தரித்துத் துவளாமல்!- அன்பை
    உணர்த்தும் கவிதை புனைந்தாலே போதும்!
    கணத்தில் மறையும் கசப்பு!

    அருமை. மிக அருமை தோழி. வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      முதல் வருகைக்கும் முத்தான நல் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அன்புத் தோழியே !

      Delete
  2. ஊக்கம் கொடுக்கும்
    இன்னிசைப் பாக்கள்..
    படித்து முடித்தவுடன்
    புதுத் தெம்பும்
    புத்துணர்வும் வருகிறது...
    வாழ்த்துக்கள் .சகோதரி..

    ReplyDelete
  3. ///கற்றோர் புகழக் கவிதந்து எந்நாளும்
    பெற்றோர் மகிழப் பெருமையுறு !///
    பெருமைபெற்றுவிட்டீர்கள்
    அருமை சகோதரியாரே

    ReplyDelete
  4. வானம் வசப்பட வேண்டுமெனில் எந்நாளும்
    கானம் இசைத்திடு காவியமே

    ஆரம்பமே அமர்களமாக இருக்கிறது கவிகுயிலே..!
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அன்பை
    உணர்த்தும் கவிதை புனைந்தாலே போதும்!
    கணத்தில் மறையும் கசப்பு!//

    உண்மை. அன்பு செய்தால் பகை மறையும்.
    கவிதை அருமை அம்பாளடியாள்/
    த.ம வாக்கு- 5

    ReplyDelete
  6. வணக்கம் தோழி!

    சோகம் தவிர்த்திங்கு சொக்கும் கவிபாட
    யோகம் தரக்குயிலும் யோசியாது! - மேகம்
    பொழிமழை வெண்பா புனைந்தீரே தோழி!
    வழியும் அமுதே வரம்!

    மிக மிக அருமையான வெண்பாக்கள்!
    தரும் சுவையோ மிகச் சிறப்பு!
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி !

      மிக்க நன்றி தோழி இனிய நற் பாவினால் இட்ட நற் கருத்திற்கும்
      வாழ்த்திற்கும் !

      Delete
  7. ஆஹா! என்ன அருமை சகோதரி! இனிக்கின்றது! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  8. #துன்பம் தரித்துத் துவளாமல்!- அன்பை
    உணர்த்தும் கவிதை புனைந்தாலே போதும்!
    கணத்தில் மறையும் கசப்பு!#
    நானும் இப்படித்தான் நினைத்து பதிவை போடுகிறேன் ,மனம் லேசாகி விடுகிறது ,படிப்பவர்களுக்கு பாரம் ஏறி விடுகிறது )))))
    த ம +1

    ReplyDelete
  9. சினத்தால் அழியாத சிந்தையும் உண்டோ!
    மனத்தை அடக்கு

    நான் மிகவும் ரசித்தவை.
    அருமை சகோதரி வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........