1/04/2012

எதுக்கு இந்தக் கொலைவெறி!.....

ஆடு போட்ட புழுக்கைகூட
அரு மருந்தெனக் கொள்ளும்போது 
ஆடு வெட்டிப் பொங்கல் வைக்கும் 
அவலம் இன்னும் தீரவில்லையே !....


இது ஆடு செய்த பாவமா !...........
அடுத்தவர் இட்ட சாபமா !........
நீதி கேட்டு உயிர்கள் எல்லாம் 
நெஞ்சை நிமிர்த்தி நின்றால் இங்கே 


பாவம் மனிதன் என்ன செய்வான் 
பழகிய தோஷம் விட்டுச் செல்ல 
ஊனைத் திண்டும் உடம்பை வளர்த்தான் 
உடனே புரியுமா பிற உயிர்படும் துன்பம்!...


நாடு தீக்கு இரையானாலும் 
நல்ல மக்கள் உயிர் போனாலும் சில 
கொள்ளையடிக்கும் கூட்டத்தினருக்கும் 
குறிக்கோள் என்பது ஒன்றுதான் இருக்கும்


இங்கு நேசக் கரத்தை நீட்டினாலும் 
நேர் வழியைக் காட்டினாலும் அவை 
தூசுக்கு இணை என்றேதானாகும் 
துரோகம் படிந்த இப் புவிதனிலே!....


காதல் செய்வீர் பிற உயிகளையும் 
கள்ளம் இல்லா நல் மனங்களையும் 
ஆதரித்துப் பார் இன்பம் பொங்கும் 
அதுதானே என்றும் வாழ்வில் தங்கும்...
  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:

  1. நாடு தீக்கு இரையானாலும்
    நல்ல மக்கள் உயிர் போனாலும் சில
    கொள்ளையடிக்கும் கூட்டத்தினருக்கும்
    குறிக்கோள் என்பது ஒன்றுதான் இருக்கும்

    த.ம் 1

    ஈரோட்டு சூரியன்

    ReplyDelete
  2. ஆதலினால் காதல் செய்வீர்! உயிர்கள் அனைத்தையும் நேசித்தால் எங்கும் இன்பமே தங்கும். நல்ல கருத்துள்ள கவிதையைப் படைத்து எமக்கு ரசிக்கத் தந்த உங்களுக்கு என் நன்றி!

    ReplyDelete
  3. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்ல கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. நல்ல கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. கவிதை நல்லா இருக்குங்கோ சகோ!

    ReplyDelete
  7. பிற உயிர்களிடத்திலும் அன்பு கொள்!என்று சொல்லுறிங்க....

    ReplyDelete
  8. ஆடு போட்ட புழுக்கைகூட
    அரு மருந்தெனக் கொள்ளும்போது
    ஆடு வெட்டிப் பொங்கல் வைக்கும்
    அவலம் இன்னும் தீரவில்லையே !....//

    எங்க அம்மா வளர்க்கும் ஆடு சமையலறை வரை வந்து போகும் அதிகாரமுள்ளது.....!!!

    அருமை!!!!!

    ReplyDelete
  9. ”ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்”- வள்ளலார்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  10. ஆதலினால் காதல் செய்வீர் என்கிற
    பாரதியின் பாடலைநினைவுறுத்திப் போகும்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........