நிலை இல்லா உலகினிலே
நிலையற்ற பொருளைத் தேடி
அலைகின்ற மனத்தின் ஆசை
அறியாது அன்பின் ஆழம் ..
விலை பேசித் தோற்றுப் போகும்
வீணான முயற்சி எல்லாம்
மலை போல உயர்ந்து நிற்கும்
மாண்பு மிகு பண்பின் முன்னால் !!
சுணை கெட்ட மாட்டைப் போல
சொன்னாலும் கேட்கா திங்கே
அணை தாண்டி வருவோர்க்கெல்லாம்
அவள் தான்டி காவல் என்றும் !
துணையாக நிற்கும் தாயைத்
தொழுகின்ற மனங்கள் வாழும்
கணையாளி இழந்த கைபோல்
கவலைகள் இனியும் எதற்கு ?.
மருவத்தூர் அன்னை முகத்தை
மனதிற்குள் நிறுத்தி வைத்தால்
பருவத்தால் பெய்யும் மழை போல்
பாசத்தைப் பொழிந்து நிற்பாள்
கர்வத்தை விட்டுத் தள்ளிக்
கண்ணுக்குள் கருணையைத் தேட
உருவத்தைக் காட்டி மறைவாள்
உள்ளன்பு நிறைந்த சக்தி !!
நோய் தீர்க்கும் மருந்தும் அவளே
நோகாத மனத்தின் இன்பம்
காய் அல்ல கனியாய் மாற
காற்றாக வருவாள் எங்கும்
தாய் போல வருமா இங்கே
தான் தேடும் செல்வம் எல்லாம்?..!!
வாய் விட்டுச் சிரிக்க்கும் முன்னே
வந்தன்னை முகத்தைப் பாரு !
என்னங்க இது கொஞ்சம் ஒவரா இல்ல......உங்களை பற்றி நீங்களே இவ்வளவு அழகாக எழுதி இருக்கீங்க. சரி சரி கடைசி படத்திலே கையெடுத்து கும்பிடுறீங்க... அதனால கலாய்க்காம விட்டு விடுகிறேன்....
ReplyDeleteமதுரைத் தமிழா எங்கம்மா மருவத்தூர் தாயி அவள் அருளினால் தான் உருட்டுக் கட்டையிடம் இருந்து தப்பிக் கொள்ள முடியும் .அதனால கன்னத்தில போட்டுக் கோங்க :))))
Deleteஆத்தாளின் அன்பால் அழியும்
ReplyDeleteஅவலங்கள் யாவும் கானல்
நீர் போன்றே வாழ்வு என்றே
நினையாமல் நில்லாமல் ஓடும் மனிதம்...! இது தான் விதியோ !
அருமை தோழி ரசித்தேன் ....! தொடர வாழ்த்துக்கள்...! அசத்துங்கள்...!
மிக்க நன்றி தோழி இனியா வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் .
Deleteமருவத்தூர் அன்னை முகத்தை
ReplyDeleteமனதிற்குள் நிறுத்தி வைத்தால்
பருவத்தால் பெய்யும் மழை போல்
பாசத்தைப் பொழிந்து நிற்பாள்
சத்தியம்! அந்த நிகரற்ற அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!! தாள் பணிந்தால்!
அருமை! மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteஅந்த அம்பாள் உம்மை ரட்சிப்பாராக! எப்படி இப்படி உங்களால் அழகாகக் கலாய்க்க முடிகின்றது! (கொஞ்சம் பொறாமையோ எனக்கு!)
ReplyDeleteஇருக்கவே இருக்காது சகோதரா :))
Deleteஅருமையான விருத்தம்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி.
வணக்கம்
ReplyDeleteசக்தியின் அருள் என்றென்றும் கிடைக்கும்....பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மருவத்தூர் அன்னை, தாய் மனத்தவள். பிள்ளையாய்ச் சென்று தொழுபவர்க்கு நல்வினைஎன்னும் பாலூட்டுபவள்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
Deleteநிலையற்ற உலகில் பொருள் தேடி அலைகிறோம்
ReplyDeleteஅருமை சகோதரியாரே
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் கருத்திற்கும் .
Deleteத.ம.4
ReplyDeleteஅருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteபெண்ணின் கண்ணில் தெரியும் தீப ஒளி அழகோ அழகு !
ReplyDeleteத ம 1
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் கருத்திற்கும் .
Delete+1
ReplyDeleteஆன்மீக ஒளி அனைவரின் மேலும் வீசட்டும்.. :)
ReplyDeleteஅருமை.
ReplyDeleteநன்றி.
நிலை இல்லா உலகினிலே
ReplyDeleteநிலையற்ற பொருளைத் தேடி
அலைகின்ற மனத்தின் ஆசை//
இதற்கு ஆதி உண்டு! அந்தம் மட்டும் வருவதே இல்லை!
நல்ல பகிர்வு.....
ReplyDeleteத.ம. +1