பொன்போன்ற செந்தமிழைப் போற்றுவதே என்கடன்
வன்முறையால் இவ்வெண்ணம் வற்றாதே!- அன்றில்
பறவையான் பாடாது போனாலும் என்னுள்
உறவாடும் நீயே உயிர்!
சொல்லாமல் போனாலும் சோகத்தில் நின்றாலும்
எல்லாமும் என்வாழ்வில் இன்தமிழே!- நல்ல
கனியுண்ட நாவும்தான் காத்திருக்கும் பாரில்
இனிய தமிழுக்கே(து) ஈடு !
எண்ணம் அலைபாயும் இன்பத்தேன் நீயென்று
வண்ணம் நிறைந்திட வா..தமிழே !-வெண்பா
வகையறிந்து நான்பாட வேண்டுமிங்கே நாளும்
பகைவிரட்(டு) என்னுள் படர்ந்து !
சொல்லாட்சி மேலோங்கச் சொந்தங்கள் கூடிவரும்
நல்லாட்சி நீதருவாய் நாளுமிங்கே !-அல்லல்
இனியேது ?..வாழ்வருளும் ! இன்பத்தேன் பாயும் !
தனித்தமிழால் ஓங்கும் தரம்!
வண்டமிழால் நாம்வாழும் வாழ்வினிக்கும் செந்தேனை
உண்டதோர் ஆனந்தம் ஊடுருவும் !-அண்டம்
கடந்தெங்குச் சென்றாலும் கற்றவர்க்(கு) இன்பம்
தொடர்ந்திங்கு நல்கும் சுகம் !
எண்ணற்ற நற்பலனை எந்நாளும் பெற்றிடலாம்
வண்ணத் தமிழ்போதும் வாழ்வினிலே !-மண்ணில்
முதுமொழியாய் நின்றாளும் முத்தமிழே! என்னுள்
புதுமொழி பூப்பாள் பொலிந்து !
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
அழகான வார்த்தையால் அழகாக சொல்லிய கவியை கண்டு மகிழ்ந்தது மனம். பகிர்வுக்கு நன்றித.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் கவி கண்டு
ReplyDeleteமகிழ்கின்றேன் சகோதரியாரே
தம 2
வணக்கம் !
Deleteஉண்மைதான் சகோதரா தங்களின் அன்பான நற் கருத்தினைக் கண்டதும் நானும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .இனிய வரவுக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரா
தாய்மொழி போற்றும் அழகான கவிதையைப் படித்தேன். பாராட்டுகள்.
ReplyDeleteவணக்கம் !
Deleteமிக்க நன்றி ஐயா தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் ! .
இன்பத்தேன் பாய்கிறது அம்மா...
ReplyDeleteவணக்கம் !
Deleteவருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரா !
வண்ணத் தமிழ்போதும் வாழ்வினிலே !-மண்ணில்
ReplyDeleteமுதுமொழியாய் நின்றாளும் முத்தமிழே! //
தமிழுக்கு...பா அருமை த ம +1
வணக்கம் !
Deleteவருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி !
தமிழ் பாடும் வெண்பாக்கள் மிக அருமை.
ReplyDeleteதொடருங்கள் கவிஞரே!
த ம . தமிழ் மணத்தில் நுழைய !
நன்றி.
வணக்கம் !
Deleteமிகச் சிறந்த கவிஞர் தங்களின் பாராட்டுகள் கண்டு நானும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன் ! மிக்க நன்றி சகோதரா .
அருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
வணக்கம் !
Deleteவருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா !
//சொல்லாமல் போனாலும் சோகத்தில் நின்றாலும் எல்லாமும் என்வாழ்வில் இன்தமிழே!//
ReplyDeleteமிகவும் அருமையான அழகான பாடல் வரிகள்.
அம்பாளடியாளின் இந்தப்பதிவின் மூலமே நானும் தமிழ் மொழியின் சிறப்புக்களையும், அதன் மேங்கோ ஜூஸ் போன்ற இனிமையினையும் நன்கு உணரமுடிகிறது.
வாழ்க ! நம் செந்தமிழும் அதனைப்பரப்பிடும் நம் அம்பாளடியாளும்.
பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
வணக்கம் ஐயா !
Deleteதங்களின் வரவும் பாராட்டும் எப்போதும் என்னை மகிழ்வித்து ஊக்கமளிக்கத் தவறியதில்லை இதை எண்ணி நானும் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் ! இனிய மேங்கோ ஜூஸ் போன்ற தங்களின்பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா :)
காதில் பாய்கின்றது தமிழ்த்தேன் மழை.
ReplyDeleteவணக்கம் சகோதரா !
Deleteதங்களின் பாராட்டுக் கண்டு மகிழ்ந்தேன் !இப் பெருமைகள் யாவும் என் குருநாதர் கி .பாரதிதாசன் ஐயாவையே சேரும் !இந்த வல்லமையை எனக்களித்தவர் அவரே ! மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .
கவிதை மணக்கிறது! எங்கே காணோம் நலமா மகளே!
ReplyDeleteவணக்கம் ஐயா !
Deleteதங்களின் பாராட்டுக் கண்டு மகிழ்ந்தேன் !நான் மிக்க நலமாக உள்ளேன் ஐயா தங்களின் இந்த அன்பான விசாரிப்பு என்னை மென்மேலும் மகிழ்ச்சிப் படுத்தியது! வணங்குகின்றேன் ஐயா .
வற்றாத உங்களின் தமிழ்க் காதலை எண்ணி வியக்கின்றேன் :)
ReplyDeleteவணக்கம் !
Deleteஎப்போதும் நகைச்சுவையாகப் பேசிப் பழகும் தங்களின் வரவும் பாராட்டும் கண்டு நானும் மகிழ்ந்தேன் சகோதரா :)
தமிழ் அன்னைக்கு அருமையான பாமாலை.... பாராட்டுகள்.
ReplyDeleteவணக்கம் !
Deleteவருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரா !
பேத்தியின் அருமையான கவிதை மகிழ்ச்சி அளிக்கிறது.!
ReplyDeleteவணக்கம் !
Deleteஎன் அன்புத் தாத்தாவின் மகிழ்ச்சி கண்டு நானும் மகிழ்ந்தேன் பாராட்டுக்கு மிக்க நன்றி தாத்தா !
உயிரின் இருப்பு தங்கள் கவிதைக்குள்ளும்..
ReplyDeleteஅற்புதம் தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் !
Deleteமிக்க நன்றி ரமணி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் !
tha.ma 13
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteநலம் தானே தோழி ! பார்க்கவே முடிவதில்லையே. எல்லா நலன்களும் கிட்டட்டும் தோழி !
ReplyDeleteதேன்சிந்தும் வெண்பாக்கள் தந்தாய் வியப்பூட்ட
விண்ணும் புகழும் இனி !
வாழ்க வளமுடன் ...!
வணக்கம் !
Deleteநான் மிகவும் நலமாக உள்ளேன் தோழி !
நான்சிந்தும் வெண்பாக்கள் நாள்தோறும் ஒங்கத்தான்
தேன்சிந்தும் வாழ்த்துப்போ தும்!
உள்ளம் மகிழ்ந்தது தோழி உன்னத வாழ்த்தினைக் கண்டு !மிக்க
நன்றி தோழி .
தமிழுக்கு இனிமை சேர்க்கும் கவிதை!
ReplyDeleteதங்கள் தளத்திற்கு முதல் முறையாக வந்து இணைந்திருக்கிறேன். வரும் பதிவுகளில் தொடர்கிறேன்.
த ம 14
வணக்கம் !
Deleteமுதல் வருகைக்கும் முத்தான நற் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரா என்றும் தமிழோடு இணைந்திருப்போம் !வாழ்க தமிழ் !தொடரட்டும் தங்கள் நட்பும் !
அருமையான் தமிழ் அன்னைக்கு சூட்டப்பட்ட மாலை.....தமிழும் அமுது! இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே! அருமை!
ReplyDelete