உயிரைக் கொல்லும் நோய் பெருகி
உணர்வைத் தின்னப் பார்க்குதடா!
துயிலும் இல்லம் பலரையும் இங்கே
துரத்திப் பிடித்து மடக்குதடா !
வழமை நிலைமை மாறும் போதும்
வாழ்வில் அச்சம் மூளுதடா!
களவும் பொய்யும் சுயநலத்தால்
கட கட கடவென வளருதடா !
மலையைப் போல சுமை தாங்கி
மனதும் மரத்துப் போனதடா!
அலையும் புத்தி ஞாபகத்தை
அறவே இழந்து வாடுதடா!
இயற்கை அளித்த கொடையெங்கே!
இதயம் கேள்வி கேட்குதடா !
திரும்பிப் பார்த்தால் எம் வாழ்க்கை
திருட்டுப் போனது புரியுதடா!
பயிலும் கல்வி அறிவெல்லாம்
பகட்டாய் எண்ணத் தோன்றுதடா !
கணக்கில் புலியாய் இருந்தமனம் இன்று
கணணியை நம்பி வாழுதடா !
செயற்கை செய்த சாதனை எதுவோ அதைத்தான்
செத்தவர் பட்டியல் காட்டுதடா !
இயற்கையைப் பேணும் நல்லெண்ணம் இனி
இருந்தால் மட்டுமே உலகம் உய்யுமடா !
இயற்கை என்பது இறைவன் கொடுத்த
வரம் !
செயற்கை என்பது மனிதன் தேடிக் கொண்ட
சாபம்!
வரமா சாபமா வாழ்விற்குகந்தது ?...
சிந்திப்போம் !
வரத்தை விட்டு விட்டுச் சாபத்தை வாங்குவதா?அருமை!
ReplyDeleteசெயற்கை செய்த சாதனை எதுவோ அதைத்தான்
ReplyDeleteசெத்தவர் பட்டியல் காட்டுதடா !.............
இயற்கையைப் பேணும் நல்லெண்ணம் இனி
இருந்தால் மட்டுமே உலகம் உய்யுமடா .......!!
உண்மைவரிகள் இவை! உணருமா உலகம்!
வணக்கம்
ReplyDeleteஅம்மா
புரட்சி மிக்க வரிகள்.. அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உண்மைதான்.. அருமை.
ReplyDeleteகண்ணை விற்று DVD வாங்கும் நிலையில் மனிதன் இருக்கின்றானே ,ஏன் செய்ய (
ReplyDeleteத ம 5
செயற்கை செய்த சாதனை எதுவோ அதைத்தான்
ReplyDeleteசெத்தவர் பட்டியல் காட்டுதடா !.............
சுடும் வரிகள்
இயற்கைக்கு ஊறு விளைவித்தே ஊறு அடைகிறோம்! நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவீர மிகு சிந்தனை வரிகள் சகோதரியாரே
ReplyDeleteதம 6
ஒவ்வொரு நாளும் துயரம். என்றுதான் தீருமோ இந்த கொடுமை?
ReplyDeleteத.ம.7
சிறந்த பதிவு
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
வணக்கம் தோழி!
ReplyDeleteசெயற்கை தருவது சேதாரம்! வாழ்வில்
இயற்கையைப் பேணி இரு!
என்று உணர உரைத்தீர் கவிதனிலே!
மிக அருமை! வாழ்த்துக்கள் தோழி!
இயற்கையை அழித்து செயற்கையான வாழ்க்கை வாழ்கிறோம்....
ReplyDeleteமனதில் நிற்கும் பதிவு. நியாயமான உணர்வுகள்.
ReplyDeleteஇயற்கையை அழிக்க வந்த செயற்கை நாமே தொடங்கியது தான் நாமே தான் முடிக்க வேண்டும்.
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
தங்கை எழில்அம்பாள் தந்த கவிபடித்தேன்!
எங்கும் இயற்கை எழிலோங்கப் - பொங்கியுளார்!
இந்த உலகம் இயங்கிட வேண்டுமெனில்
தந்த தமிழினைத் தாங்கு!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
நம்மைச் சுற்றி இறைவன் தந்திருக்கும் இயற்கையை அழித்து செயற்கையை நாடிப் போய் நம்மை நாமே அழித்துக் கொள்கின்றோம். இயற்கையை அழிப்பது என்பது இறைவனை நிந்திப்பது போலத்தானே!? சகோதரி! மிக அருமையான வரிகள்! மிகவும் ரசித்தோம்!
ReplyDelete