3/31/2014

ஒரு நூறு கவிதை நூறு பாடல்



ஒரு நூறு கவிதை
நூறு பாடல்
தந்தெல்லாம் நீதானே?
எனை மாற்றியவளும்
ஏமாற்றி யவளும்
என்றும் இங்கே நீதானே?

இது முறையோ
சொல்லு தாயே?
உன்றன்  முடிவில்
என்றன்  வாழ்வோ?

                     (ஒரு நூறு கவிதை)

இரவில் வந்த
நிலவும் உன்றன்
இதயம் சொன்ன கதையும்
உதயம் ஆகும் பொழுதில் என்றன்
உயிரே வெந்து தணியும்!
எதை நான் மறப்பதோ?
உன்றன்  உறவைத் துறப்பதோ?

இதயம் தந்த
உறவே என்றன்
உணர்வை மறந்ததேன்!
பிரிவோம் என்று
அறியா நெஞ்சைப்
பிரிந்தே சென்றதேன்?

கனவில் நீயடி - என்றன்
நினைவில் நீயடி!
உறவே நீயடி! - என்றன்
உயிரே நீயடி!

சலனம் நெஞ்சில் சலனம்
என்னை மரணம் வெல்லுமோ?
இது வெறும் வார்த்தை அல்லடி
ஒரு வார்த்தை சொல்லு நீ?

உயிர் உருகும் போதும்
மௌனம் ஏனோ?
உண்மைக் காதலே........

                      (ஒரு நூறு கவிதை )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

14 comments:

  1. ///கனவில் நீயடி எந்தன்
    நினைவில் நீயடி ......
    உறவே நீயடி எந்தன்
    உயிரே நீயடி .....///
    அருமை சகோதரியாரே

    ReplyDelete
  2. //கனவில் நீயடி எந்தன்
    நினைவில் நீயடி ......
    உறவே நீயடி எந்தன்
    உயிரே நீயடி .....//

    இவ்வரிகள் பிடித்தன.....

    நல்ல கவிதை சகோ. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. இப்படி ஒரு கவிதை வர வேண்டும் என்றுதான் பிரிந்து சென்றாளோ என்னவோ!

    ReplyDelete
  4. // இரவில் வந்த
    நிலவும் உந்தன்
    இதயம் சொன்ன கதையும்
    உதயம் ஆகும் பொழுதில் எந்தன்
    உயிரே வெந்து தணியும்
    எதை நான் மறப்பதோ....? //

    மறக்க முடியுமா...?

    ReplyDelete
  5. உயிர் உருகும் போதும்
    மௌனம் ஏனோ

    மௌனத்தின் மொழி உரக்க கேட்கிறது..!

    ReplyDelete
  6. இப்படி உருகும் காதலனைக் கைப்பிடிக்க நாயகி வந்து விடுவாள் ,காதலனை மனம் தளராமல் இருக்கச் சொல்லுங்கள் !
    த ம 5

    ReplyDelete
  7. எண்ணிறைந்த காதலின் ஏக்கங்கள் கோடியிங்கே
    பெண்ணுயிரில் பூக்கின்ற பேரின்பம் - கண்ணாலே
    உண்டாலும் உள்ளுறையும் கனியமுதாய் ! என்போல
    மண்ணும் மகிழும் மலர்ந்து !

    அருமை அருமை சகோ
    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்
    6

    ReplyDelete
  8. நெகிழ்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. நூறு பாடல் தந்தவளின் மவுனம் கசப்புதான்! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
  10. இதயம் தந்த
    உறவே எந்தன்
    உணர்வை மறந்ததேன் ?..
    பிரிவோம் என்று
    அறியா நெஞ்சைப்
    பிரிந்தே சென்றதேன் ?......//

    மனதை உலுக்கி விட்டது! அருமை!

    ReplyDelete
  11. காதலில் பிறக்காத கவிதையும் உண்டோ!
    அருமை

    ReplyDelete
  12. "//இரவில் வந்த
    நிலவும் உந்தன்
    இதயம் சொன்ன கதையும்
    உதயம் ஆகும் பொழுதில் எந்தன்
    உயிரே வெந்து தணியும்
    எதை நான் மறப்பதோ....
    உந்தன் உறவைத் துறப்பதோ//"

    அருமையான காதல் வரிகள்.
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  13. மனம் உருகவைக்கும் பாடலால் காதலை அழகாக சொல்லி செல்கிறது வரிகள் தங்கை....

    த.ம.10

    ReplyDelete
  14. இதயம் தந்த
    உறவே எந்தன்
    உணர்வை மறந்ததேன் ?..
    பிரிவோம் என்று
    அறியா நெஞ்சைப்
    பிரிந்தே சென்றதேன் ?......
    மனம் நொந்து போயிற்று வரிகளால்
    தாயின் கருணை பூரணமாக கிட்டும்
    கவலைகள் யாவும் பனி போல் விலகும்...! வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........