3/11/2014

ஏலேலங் கிளியே ....அடி

                                           

ஏலேலங் கிளியே!-அடி
என் ஆசை மயிலே!
ஊர்வாழ வாழ்த்தி நிற்கும் தேவதையே!
உனக்காக ஏங்கும் மனம் சாகலியே!

பூவோடு காயும் பிஞ்சும்
புதுசாக எஞ்சும் போதும்
நான் பாடும் பாடல் மட்டும்  உனக்காக
நலம் வாழ வாழ்த்தி நிக்குது எதற்காக?

                                                      (ஏலேலங் கிளியே )

போராடும் பச்சைக் கிளி
பொல்லாங்கு சொல்லுதடி
யாரோடும் பேச மாட்டேன் நீயின்றி
என் காதல் நீயின்றி!

வானத்து நிலவே உன்னை
வைகரைகள் தேடுதிங்கே
கானத்தை இசைக்கும் வேந்தன்
கையாளும் வார்த்தைகள்  எங்கே?

                                                       (ஏலேலங் கிளியே )
                                                         
மறையாதே மறையாதே என்  பூங்கொடியே
மண்ணுக்கும் உன் வாசம் போதலியே!
நிறை நீரில் நின்றாடும் தாமரையே
நீயின்றிச் சூரியனும் தூங்கலியே!

பறை சாற்றும் உள்ளத்தின்  வேதனைகள்
பசுந் தேனே உன் நெஞ்சைத் தீண்டாதோ!
கறை பட்டுப் போன மனம் வாடுதடி
காகிதத்தில்  கப்பல் விட்டுத் தேடுதடி ...

உறை பனியும் காற்றுமிங்கே சுடுகுதடி
உள்ளூர உன் நினைப்பு வருடுதடி
சிறை மீட்டு வருவதற்கு நான் ராமானுமில்லை
சிங்கார தேவதையே மனம் நோகுதடி!

கலையாத ஓவியமாய் நானுமிங்கே
காத்திருப்பேன் காத்திருப்பேன் கண்மணியே
பிழையாவும் பொறுத்தருள்வாய் பொக்கிசமே
பிஞ்சு மனம் கெஞ்சுதடி  என்றன்  உயிரே!


                                                           (ஏலேலங் கிளியே )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

30 comments:

  1. நவீன காலத்து கைக்கிளை கவிதை அருமை !
    த ம 1

    ReplyDelete
  2. //நிறை நீரில் நிற்கின்ற தாமரையே
    நீயின்றிச் சூரியனும் தூங்கலியே! ... //

    அற்புதமான வரிகள். தமிழின் அழகு ததும்புகின்றது!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete

  3. சிறந்த பாடல் வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  4. அருமையான பாடல்! காதல் ஏக்கம் கவிதையில் வழிகிறது! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  5. அருமையான வரிகள் சகோதரி! மிஞ்சி விட்டீர்கள் இத்தனை அழகு தமிழில் கவியத வடித்து அதுவும் தினம் தினம்! தமிழ் வற்றாத ஊற்று உங்களிடம் இருக்கிறதோ!? எங்கள் எல்லோருக்கும் கொஞ்சம் அள்ளிக் கொடுங்கள் சகோதரி!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. இன்பத் தமிழை இணைந்தே சுவைக்க வாருங்கள் சகோதரா .
      அள்ள அள்ளக் குறையாது அன்பில் விழைந்த தமிழ்ப் பற்று இது !:)
      மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராடிற்கும் .

      Delete
  6. உறை பனியும் காற்றுமிங்கே சுடுகுதடி
    உள்ளூர உன் நினைப்பு வருடுதடி
    சிறை மீட்டு வருவதற்கு நான் ராமனில்லை
    சிதையும் மனம் அறிந்து நீயே ஓடி வாடி ...

    கிளிப்பாட்டு அழகு..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  7. அருமையான கவிதை வரிகள். அதற்கேற்ற மாதிரி படமும் மிக அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  8. கறை பட்டுப் போன மனம் வாடுதடி
    காகிதத்தில் கப்பல் விட்டுத் தேடுதடி ...
    அழகான படமும் அதற்கேற்ப அழகுத் தமிழில் காதல் வரிகள் வரிசையாக, நிச்சயமாக இது வரப்பிரசாதம் தான் தோழி ! அசத்திட்டீங்க! தொடர வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  9. பாடல் வரிகள் ரசிக்க வைத்தது அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  10. படமும் பாடலும் அழகோ அழகு.
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  11. அருமை
    ரசித்தேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  12. அசத்தல் வரிகளுடன் மனம் நிறைக்கும் அழகான கவிதை. பாராட்டுகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராடிற்கும் .

      Delete
  13. Replies
    1. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் கருத்திற்கும் .

      Delete
  14. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  15. பிழையாவும் பொறுத்தருள்வாய் பொக்கிசமே
    பிஞ்சு மனம் கெஞ்சுதடி எந்தன் உயிரே ....//

    பிழை பொறுத்து வந்துவிடும் கிளி.
    இன்பவானில் சிறகடித்து பறந்திடலாம் இனி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........