3/01/2014

கருணையில் சிறந்த தாயாக



கொடியநோய் உடலை வாட்ட 
கொடும்பாவிகள் மனதை வாட்ட 
மடியவே இறையைத் தேடும் 
மக்களைக் காப்பார் யாரோ ?..
விடியலும் வீணாய்ப் போச்சு
விம்மியே  அழுதும் ஆச்சு 
படியவே மறுக்கும் துயரைப் 
பறித்திட சக்தி தாரும் ?..

நடை பிணம் ஊர்வலமாய் 
நடப்பதேன் ஐநா நோக்கி 
விடை இதை அறிவாயம்மா 
விழிகளில் ஏந்தும் தீயால் 
கடைந்திடு நீதி வெல்ல 
கருணையின் மத்தை இன்றே 
படை பலம் தோற்கவேண்டும்
பணிந்திடும் மக்கள் முன்னால் 

அநீதியைத் தோற் கடிப்பாய் 
அன்பையே காத்து நிற்பாய் 
நீதியின் நிழலே போற்றி 
நின்மதி தருவாய் போற்றி 
ஆதி சிவ சங்கரியே 
அம்பெனப் பாய்வாய் போற்றி 
கோதியே உயிரைக் குடிக்கும் 
கொடும்பாவிகள் மனத்தை வெல்ல!!

வேள்விகள் பலதும் செய்தோம் 
வேண்டியே உனைநாம் தொழுதோம் 
கேள்விகள் எழு முன் வருவாய் 
கேதார கௌரி நீயும் 
ஊழ்வினை அகற்றி எங்கள் 
உயிர்களைக் காக்கும் சக்தி
ஆழ்கடல் முத்தாய் அமுதாய்
அன்பெனும் ஒளியைத் தாங்கி .

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9 comments:

  1. அருமை! விரைவில் நீதி கிடைக்கட்டும்! நன்மை நடக்கட்டும்! நன்றி!

    ReplyDelete
  2. அருமை அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நிச்சயமாகக் கருணையில் சிறந்த தாய்தான்! கண்டிப்பாகத் தங்கள் பிரார்த்தனை ஈடேரி தாய்ரட்சிப்பாள்!

    அருமையான கவிதைக்கு நன்றி!

    ReplyDelete
  4. அநீதியைத் தோற்கடிப்பாய்
    அன்பையே காத்து நிற்பாய்
    நீதியின் நிழலே போற்றி
    நிம்மதி தருவாய் போற்றி!..

    அன்னை அவளன்றி ஏது கதி!?..

    ReplyDelete
  5. பிரசித்தி பெற்ற வடமொழி ஸ்லோகம் ஒன்று: "யாதேவி ஸர்வ பூதேஷு, மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா, நமஸ் தஸ்யை- நமஸ் தஸ்யை= நமஸ் தஸ்யை- நமோ நமஹ".

    ReplyDelete
  6. #அம்பெனப் பாய்வாய் போற்றி #
    போர்க் குற்றவாளிகள் தண்டனை பெறும் காலம் நெருங்கி விட்டது !
    த ம 4

    ReplyDelete
  7. அருமையான வேண்டுதல் தோழி அநீதியை அழித்து நீதியையும் நிம்மதியையும் அளிப்பாள்.
    நன்றி வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  8. ஆழ்கடல் முத்தாய் அமுதாய்
    அன்பெனும் ஒளியைத் தாங்கி .
    ஆருமையான வரிகள்..பாராட்டுகள்..!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........