எட்டி எட்டி பார்க்கையில்
உன்னால் தானடா
வட்ட நிலாப் பொட்டு வைக்க
ஆசை இங்கு வந்ததே ....
வா வா என்றன் நெஞ்சுக் குள்ளே
வண்ணம் மின்னும் கண்ணுக்குள்ளே
தா தா இன்பம் தந்தால் போதுமே!
உயிரின் தாகம் தீருமே!
(எட்டி எட்டிப்...)
என்னுயிரை எடுத்து
உன்னுடலில் தொடுத்து
இன்னும் பல ஜென்மம்
வாழக் காத்திருப்பேன்
சந்தனமும் குங்குமமும்
சேர்த்து வைத்த நெத்தியிலே
சங்கமிக்க வேண்டும் நீயடா
உயிரோடு பகை ஏனடா!
பூவின் உள்ளம்
மென்மை என்றால்
பேசும் வார்த்தைகள்
உண்மை என்றால்
கோவில் குளங்கள்
தேவை இல்லை மன்மதா ......
நீ சூடும் பூவில்
சொர்க்கம் உள்ளது
தேடும் வார்த்தையில்
மிச்சம் உள்ளது
நான் பாடும் பாடல் நீயடா
என் வாழ்வின் தேடல் தானடா...
ஆண்...
ஆசைக் கிளியே முத்தம் தந்தது
அதனால் நூறு சத்தம் வந்தது
இந்த ஒசைக்கினியது
உலகில் ஒன்றும் இல்லையே!
நீ ஓடும் நதியில்
என்னைக் கண்டாய்
சிறு ஓடம் போலிங்கு
உன்னைக் கண்டேன்
தேடும் சுகங்கள் ஒன்றாய்ச் சேர்ந்ததே ......
என் தேவை எல்லாம் உன்னால் தீர்ந்ததே ...
பாசம் உள்ள நெஞ்சுக்குள்ளே
வாசம் வீசுமே!
உயர் தோஷம் எல்லாம் ஓடிப் போக
நேசம் மிஞ்சுமே!
இது சத்தியம் சத்தியமே
இனி நித்தமும் சித்திரையே ...
என் அத்தையின் (இ)ரத்தினமே
நான் சொன்னதும் சத்தியமே ...
சந்தனமும் குங்குமமும்
ReplyDeleteசேர்த்து வைத்த நெத்தியிலே
சங்கமிக்க வேண்டுமையா
சங்கடங்கள் ஏதுமில்லையே!..//
தமிழ் மணம்.. செந்தமிழ் மணம்!...
மிக்க நன்றி ஐயா முதல் வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
Deleteஅழகான அருமையான பாடல் வரிகள்...
ReplyDeleteரசிக்கும்படியும் முடித்துள்ளீர்கள் அம்மா...
இணைத்த படமும் அருமை... வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .
Deleteசுருக்கம் தேவை! பாடலில் சுவை கூட!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா தகவலுக்கு .
Deleteமிகவும் ரசித்தோம்! அழ்கான கவிதை!
ReplyDeleteவாழ்த்டுக்கள்!
அருமையான வரிகள்! அழகான பாடல்கள்! நன்றி!
ReplyDeleteஅழகியபாடல் அழகியபடத்துடன் ரசித்தேன்.
ReplyDeleteசந்தனமும் குங்குமமும்
ReplyDeleteசேர்த்து வைத்த நெத்தியிலே
சங்கமிக்க வேண்டுமையா
சங்கடங்கள் ஏதுமில்லையே ...
அழகான வரிகள் வாழ்த்துக்கள் தோழி.....!
வட்ட நிலா பொட்டு வைக்க
ReplyDeleteவண்ணவண்ணக் கவிதைகள்
எழிலாய் பூத்ததோ..! பாராட்டுக்கள்..!
மிக்க நன்றி தோழி வருகைக்கும் பாராட்டிற்கும் .
Delete//பூவின் உள்ளம் மென்மை என்றால்
ReplyDeleteபேசும் வார்த்தைகள் உண்மை என்றால்
கோவில் குளங்கள் தேவை இல்லை மன்மதா ..///
எனக்கு பிடித்த அழகான வரிகள். மற்ற வரிகளும் மிக அருமையே.... அந்த இரத்தினத்தின் படம் இல்லையா உங்களிடம்?
மிக்க நன்றி சகோதரா தொந்தரவே அற்ற பாராட்டிற்கு :)))
Deleteஇதயத்தில் இருக்கு நகல் எடுத்துத் தரவா ?...:))) லொள்ளு :))
ReplyDeleteமுத்துக்கள் கொண்டேயுன் மூச்சினால் பூக்கின்ற
அத்தைமகன் ஞாபகத்தின் ஆக்கமுடன் - வித்தகியாம்
உன்னுயிரில் வேர்விடும் உள்ளுணர்வும் !சத்தியமாய்
பொன்னாகும் மண்ணில் பொலிந்து !
அருமை சகோ
இனிய வாழ்த்து வாழ்க வளமுடன் 4
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா :)))
Deleteஒரு கவிதையாவது இப்படி
ReplyDeleteசரளமாய் வார்த்தைகள் வந்து விழும்படியான
கவிதை எழுத வேண்டும் எனும்
ஆசையைத் தூண்டிப்போகும் அற்புதக் கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ரமணி ஐயா !
Deleteகவிதை அருமையாக உள்ளது தோழி.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி .
Deleteபாசம் உள்ள நெஞ்சுக் குள்ளே
ReplyDeleteவாசம் வீசுமே...
உயர் தோஷம் எல்லாம் ஓடிப் போகக்
காசும் மிஞ்சுமே ...//
அன்பு கொண்ட உள்ளத்துக்கு ஆயுசு நூறு"ங்குற பாட்டுதான் மனசுல நினைவுக்கு வருது, சூப்பர் !
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .
Delete#பூவின் உள்ளம் மென்மை என்றால்
ReplyDeleteபேசும் வார்த்தைகள் உண்மை என்றால்
கோவில் குளங்கள் தேவை இல்லை #
காதல் வந்து விட்டால் நாத்திகத்தை கூட விரும்புமோ மனம் ?
த ம 6
இறைவன் அன்புருவானவன் அன்பு இங்கே இதயக் கோவிலில்
Deleteஅடைக்கலமாகி விட்டது போலும் :))) .மிக்க நன்றி சகோதரா
வருகைக்கும் கருத்திற்கும் .
சத்தியமான வார்த்தைகள். இதமான சொற்களில்.
ReplyDelete'..பூவின் உள்ளம் மென்மை என்றால்
பேசும் வார்த்தைகள் உண்மை என்றால்
கோவில் குளங்கள் தேவை இல்லை.. '
வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா .
Deleteஅருமை
ReplyDeleteஇனிமை
சகோதரியாரே
த.ம.8
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா .
Delete
ReplyDeleteஎன்னுயிரை எடுத்து
உன்னுடலில் தொடுத்து
இன்னும் பல ஜென்மம் வாழக்
காத்திருப்பேன் என் மன்மதா .... அற்புதமான வரிகள். சரளமாக வந்து விழுந்த வார்த்தைகள் மகிழ்ச்சி தோழி.
பாசம் உள்ள நெஞ்சுக் குள்ளே
ReplyDeleteவாசம் வீசுமே...//
பாசம் உள்ள நெஞ்சில் அன்பெனும் வாசம் வீசும் தான்.
அருமையான கவிதை.
பாடலுக்கான ஓவியம் மிக அருமை..... உங்கள் பாடலும் தான்!
ReplyDeleteகாலையிலேயே படித்தேன். இப்போத் கருத்துரையும் வாக்கும்!
த.ம. +1