3/30/2014

காற்றாய் என்னுள் வந்து போகிறாய்...


காற்றாய் என்னுள் வந்து போகிறாய்
காதல் கவிதைகள் தந்து போகிறாய்
நேற்றோடிந்த உறவு முடிந்ததா?
நெஞ்சே நெஞ்சைக் கேட்டுப் பாரடா!

கொட்டும் மழையில் நியிருக்கக்
குடைகள் வேண்டுமா நண்பனே?
ஒட்டுத் துணிக்கும் வழியத்து இருக்க
உயிரைக் கொடுக்க வந்த நண்பனே!

வறுமை போனது
வசதியும் வந்தது அதுவும் உன்னாலே
இன்று பொறுமை இழந்து -பொங்கி
எழுகிறேன் அதுவும் உன்னாலே

பழகித் திரிந்த காலம் உனக்கு
நினைவில் இல்லையா ?
இரு பக்கம் கொண்ட கடிதம் எழுத
வெக்கம் இல்லையா ?

உயிரைப் பிசையும் வார்த்தை ஜாலம்
உனக்குள் ஏதடா ?
உணர்வைக் கொன்று பகையை வளர்க்கும்
உயிர் நண்பா சொல்லடா ?

எருமைத் தலையன் பேச்சுக்கே தான்
தலையை ஆட்டுறாய்!
ஏனோ இந்த மாற்றம் தந்து
மனதை வாட்டுறாய்?

துயரக் கடலில் கப்பல் ஓட்டி
எங்கே செல்வேன் நான்?
துடுப்பாய் இருந்த நண்பன் இன்றித்
துலைந்தே போவேன் நான்!

மரணம் வந்து சேரும் முன்னால்
மனசை மாற்றடா ......
என் மனமே நீதானடா -அதை
 மறவேன் நான் தானடா .......

நண்பா நண்பா நண்பா நண்பா
எங்கள்  நட் பைப்  பாரடா!
அன்பாய்த் திரிந்த காலம் அழுதே
அதையேனும் கேளடா!

சொல்லும் வரைக்கும்
சொல்லிப் புட்டேன் சோகம் ஏனடா?
எனைக் கொஞ்சம் அள்ளும் வரைக்கும்
அள்ளிக் கொள்ள வா ஆசை நண்பனே ..........

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

15 comments:

  1. /// என் மனமே நீதானடா -அதை
    என்றும் மறவேன் நான் தானடா... ///

    நட்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ///நண்பா நண்பா நண்பா நண்பா -எங்கள்
    நட்பைப் பாரடா ...........
    அன்பாய்த் திரிந்த காலம் அழுகுது
    அதையேனும் கேளடா .........../////
    அருமை சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  3. துயரக் கடலில் கப்பல் ஓட்டி
    எங்கே செல்வேன் நான் ?...
    துடுப்பாய் இருந்த நண்பன் இன்றித்
    தொலைந்தே போவேன் நான் ...

    நட்பின் அர்த்தம் - பொதிந்துள்ளது.
    வாழ்க .. வளர்க ..

    ReplyDelete
  4. நட்பு கானம்
    ஆஹா! அட்டகாசம்!
    //
    கொட்டும் மழையில் நியிருக்கக்
    குடைகள் வேண்டுமா நண்பனே ?..//
    என் ப்ரோபிலை படத்தை பாருங்க
    அதைத்தானே சொல்லிருக்கேன்?!!!

    ReplyDelete
  5. "கொட்டும் மழையில் நியிருக்கக்
    குடைகள் வேண்டுமா நண்பனே ?..
    ஒட்டுத் துணிக்கும் வழியத்து இருக்க
    உயிரைக் கொடுக்க வந்த நண்பனே...." என்ற
    அடிகளில் கவித்திறம் மின்னுகிறதே!

    ReplyDelete
  6. #எருமைத் தலையன் பேச்சுக்கே தான்
    தலையை ஆட்டுறாய் ....#
    கௌண்டமணி டயலாக் மாதிரி இருக்கே !
    த ம 5

    ReplyDelete
  7. நட்புக்குக்காக அழகிய வரிகள்...

    ReplyDelete
  8. நட்பு பற்றிய கவிதை அருமை! வரிகள் நெஞ்சைச் தொட்டன!

    ReplyDelete
  9. நட்பை உணர்த்தும் வரிகள் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. திரைப்படப் பாடல் போல் உள்ளது. இசை அமைத்துப் பாடலாம்

    ReplyDelete
  11. நண்பனுக்காய் ஈன்ற நறுங்கனி போல்கவிதை
    உண்ணுகின்ற நாவில் உயிரூட்டும் - எண்ணரிய
    பண்ணெடுத்தே ஏற்றமுறும் பாட்டெழுதி ! நட்போடு
    உண்மை சுமந்த உயிர் !

    அழகு அருமை இனிமை
    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்
    11

    ReplyDelete
  12. நட்புக்காற்று அருமை.!

    ReplyDelete
  13. சொல்லும் வரைக்கும்
    சொல்லிப் புட்டேன் சோகம் ஏனடா ?..
    எனைக் கொஞ்சம் அள்ளும் வரைக்கும்
    அள்ளிக் கொள்ள வா ஆசை நண்பனே ..../சிறப்பான நட்புப்பார்வை வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  14. //துயரக் கடலில் கப்பல் ஓட்டி
    எங்கே செல்வேன் நான் ?...
    துடுப்பாய் இருந்த நண்பன் இன்றித்
    துலைந்தே போவேன் நான் ...//

    துயரத்தில் துவண்டு கிடக்கும் மனதினை மீட்க நட்பினால் மட்டுமே இயலும் என்பதை நம்பிக்கையோடு வரைந்த வரிகள் சிறப்பு தங்கை.

    த.ம.13

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........