11/26/2011

தீபங்கள் எரியட்டும் எண் திசையும்!....

கருவறை சுமந்த எங்கள் 
உயிர்களை இங்கே பல 
கல்லறை சுமந்து நிற்கிறதே!...
எரிகிற தீபம் திரும்பிடும் திசைகளில் 
எம் மாவீரர் முகங்கள் தெரிகிறதே!...


உருகிடும் இதயம் வடித்திடும் கண்ணீர் 
அது ஒளியதைத் தாங்கி நிற்கிறதே!..
இந்த இனியவர் பேசிடும் வார்த்தையைக்கேக்க 
ஒவ்வொரு உயிரும்  துடிக்கிறதே..............!!!!!!!


இங்கு மனமதை அடக்கி மௌனமாய் அழுதிடும் 
எங்கள் மக்கள் கூட்டம் கண்டாயோ .......
விடுதலை வேண்டிப் புதைகுழி சென்ற 
இந்தப் புனிதரை உலகம் அறியாதோ!......
சில தறுதலை எங்கள் வாழ்வினை அழித்த
சங்கதி இனியேனும் உலகுக்குத்  தெரியாதோ!...


குமுறிடும் உள்ளக் குமுறலை அடக்கக் 
குழந்தைகள்கூட மறுக்கிறதே..........!!!!
தெருவெளி எங்கும் பெரும் திரளென வந்து 
தீபங்கள் ஏந்தியே சென்ற உயிகளை உயிர்கள் 
மறுபடி பிறக்க வரமது கேட்டு மனம் அது உருகி நின்றனரே!..
கொடியவர் குடிகளையும் காத்திடும் இறைவா 
எங்கள் குலமது தழைக்க அருளாயோ.............
எம் மனமது கொண்ட துயரினில் நின்று 
மகிழ்ந்திட ஒரு வழி காட்டாயோ!............


இந்தக் கார்த்திகைப் பூக்களின் கண் மடல் திறந்து 
உந்தன் கருணை மழையைப் பொளியாயோ!....
நேற்றில்லை இன்றில்லை  அன்றுதொட்டு 
நேர்வழி சென்ற இனமிதனைக் 


காத்திட ஒரு வரம் கேட்டு தினம் 
ஊத்திய கண்ணீருக்கும் எல்லை இல்லை 
இதைப் பார்த்தவர் மனங்களும் உருகாதோ 
இந்தப் பார்வை குறைந்த உலகினிலே.......!!!!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

20 comments:

 1. //காத்திட ஒரு வரம் கேட்டு தினம்
  ஊத்திய கண்ணீருக்கும் எல்லை இல்லை
  இதைப் பார்த்தவர் மனங்களும் உருகாதோ
  இந்தப் பார்வை குறைந்த உலகினிலே.......!!!!//

  உலகத்தின் பார்வை எங்கள் மேல் பட்டிருந்தாள் ஏன் நமக்கு இந்த நிலை...

  நல்ல வரிகள் சகோதரி...

  ReplyDelete
 2. மாவீர்களை போற்றும் விதமாக வணங்கும் நோக்குடன் சிறப்பான ஆக்காம் பாராட்டுகளும் வணக்கங் களும் வெல்லட்டும் வெல்லட்டும் தமிழ் ஈழம் வெல்லட்டும் .

  ReplyDelete
 3. அருமையான கவிதை...

  ReplyDelete
 4. தியாகச் சுடர்களின்
  தீப்பிழம்பாம் ஒளிப் பாதையில்
  நல்ல பொழுது விடியட்டும் சகோதரி....

  அருமையான கவிக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. மாவீரர்களுக்கு கவிதை..... வரிகள் அருமை சகோ...

  ReplyDelete
 6. உருக வைக்கும் கவிதை ...

  ReplyDelete
 7. தமிழீழம் வெல்லும், விதைகள் விருட்சமாகும்....

  ReplyDelete
 8. (காத்திட ஒரு வரம் கேட்டு தினம்
  ஊத்திய கண்ணீருக்கும் எல்லை இல்லை
  இதைப் பார்த்தவர் மனங்களும் உருகாதோ
  இந்தப் பார்வை குறைந்த உலகினிலே)

  ஏக்கம் எழுத்து வடிவில்
  எழுந்து நிற்கிறது..

  ReplyDelete
 9. நெஞ்சை கனக்க செய்த கவிதை ...
  மாவீரர் தினநாள் வீர வணக்கம் ....

  ReplyDelete
 10. உள்ளக்கிடக்கைகளை உலகுக்கு அறிவிக்கும் உன்னத வரிகள்.

  ReplyDelete
 11. சகோ உங்களை எனக்குள் நான் என்ற தொடர்பதிவிட அழைத்திருக்கிறேன். விரைவில் எதிர்பார்க்கிறேன்.


  நம்ம தளத்தில்:
  எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு

  ReplyDelete
 12. கொடியவர் குடிகளையும் காத்திடும் இறைவா
  எங்கள் குலமது தழைக்க அருளாயோ.............
  எம் மனமது கொண்ட துயரினில் நின்று
  மகிழ்ந்திட ஒரு வழி காட்டாயோ!..........//

  இறைவனிடம் நெஞ்சை உருக்கும் கேள்வி, இறைவன் சிலவேளைகளில் ஏன் பாரமுகமாய் இருக்கிறார்?

  இறைவன் கூடிய சீக்கீரம் இதற்கு நல்ல முடிவு தர வேண்டும்.

  ReplyDelete
 13. அருமையாக உள்ளது சகோ ,பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 14. கொடியவர் குடிகளையும் காத்திடும் இறைவா
  எங்கள் குலமது தழைக்க அருளாயோ.............
  எம் மனமது கொண்ட துயரினில் நின்று
  மகிழ்ந்திட ஒரு வழி காட்டாயோ!...

  உருக்கமான வேண்டுதலில் எரியும் தீபம்!

  ReplyDelete
 15. வீர கவிதை... விடுதலைக்கு உயிர் தந்த அனைத்து மாவீரர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வீர வணக்கம் ...

  ReplyDelete
 16. வீரமறவர்களுக்கு வணக்கங்கள் !

  ReplyDelete
 17. வீரமாவீரர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்...

  இந்தப் பார்வை குறைந்த உலகினிலே.......!!!!//

  ஆம் சகோ! இது அநீதி நிறைந்த உலகம்... நல்லவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்... பகிர்வுக்கு நன்றி சகொ!

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........