கொட்டும் முரசொலி கொட்டும்
தமிழ் என் பாட்டுக்கும் தாளம் தட்டும்!.
கொட்டும் முரசொலி கொட்டும்
தமிழ் என் பாட்டுக்கும் தாளம் தட்டும்!....
அந்தக் காலம் வரும் நேரம்
எந்தன் யீவன் இங்கே காத்திருக்கும்.....
(கொட்டும் முரசொலி ....)
மொட்டும் மலராகும்
தேய் பிறையும் முழு நிலவாகும்
நாம் கற்கும் தமிழ் என்றும்
இன்பம் பொங்கும் தேன் மழையாகும்
விட்டுக் கொடுப்பேனோ
என் தாயே உன்னை நானும்
மட்டுப் படுத்தாமல் தினம்
மலை போல் இங்கு வளர்ப்பேனே !......
( கொட்டும் முரசொலி )
விட்டுப் பிரிந்தோமே எம்
தாயே உன் தேகம் !...........
கட்டுக்கடங்காமல் வரும்
துயர் என்றும் எம்மை வாட்டும்
முத்துத் தமிழ் மொழிபோல் இங்கு
மொழியே இல்லை என்பேன் !................
உன்னைக் கற்றுத் தருவோர் முன்
அன்பாய்க் காலில் நான் விழுவேனே
( கொட்டும் முரசொலி )
சுற்றிக் கடல் நடுவில் ஓர்
சொர்க்கம் என் தாய் நீதானே !...
உன்னைக் கட்டித் தழுவாமல்
கரு முகில் போல் ஆனேனே !.......
கொட்டும் பனி மலையில் வாடும்
சிட்டுக் குருவி என் சோகம் அது
விட்டுப் பிரியாமல் தினம்
வாட்டும் போதெல்லாம் எந்தன்
உயிரில் எழுதிடும் பாடல் கேட்டு
( கொட்டும் முரசொலி )
தாளம் போட வைக்கிறது பாடல் வரிகள்...அருமை!
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வரவுக்கும் இனிய பாராட்டுக்கும் ...
Deleteமெட்டுப் போட்டால் இன்னும் சத்தமாக கொட்டும் முரசொலி
ReplyDeleteரசித்தேன்
மிக்க நன்றி சகோ தங்கள் வரவுக்கும் இனிய பாராட்டுக்கும் ...
Deleteகொட்டும் முரசொலி கொட்டும்
ReplyDeleteதமிழ் என் பாட்டுக்கும் தாளம் தட்டும்!....
தமிழுக்கு வாழ்த்துப்பா அருமை அருமை..
மிக்க நன்றி சகோ தங்கள் வரவுக்கும் இனிய பாராட்டுக்கும் ...
Deleteஅழகான வரிகள் .. அருமையான பாடல்
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வரவுக்கும் இனிய பாராட்டுக்கும் ...
Delete
ReplyDeleteவணக்கம்!
மலா்ந்த தமிழின் மாண்புகளை
மகிழ்ந்தே அம்பாள் தந்துள்ளார்!
வளா்ந்த உலகம் அறிந்திடவும்
வடிவாய்ப் பாடல் இசைத்துள்ளார்!
உலா்ந்த பாதை செழிப்புறவும்
உலகோர் உண்டு சிறப்புறவும்
குளிர்ந்த தமிழின் நன்னெறியைக்
கூவி முரசே கொட்டிடுக!
வணக்கம் ஐயா தங்கள் வரவும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன்
Deleteமிக்க நன்றி ஐயா தங்கள் வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் !....