12/12/2012

பாரதியார் பாடல்கள் தந்த துணிவே என் கவிதைகள்



"பாரதி "என்றொரு வரி உன்
பெயரதை எழுதினால் போதும் 
மீதியை நான் உரைப்பான் ஏன்!..
ஒவ்வொரு வீதியும் உன் கதை சொல்லும்!....

நீதியை நிலை நாட்டிட எங்கும் 
நீ தீயென வலம் வந்தாய் !........
எம் ஆருயிர் உள்ள வரைக்கும் 
யார் இதை இங்கு மறப்பார் !!!!.....

சாதிகள் இரண்டென உரைத்தாய் 
அவரவர் சங்கடம் தீர்த்திட விரைந்தாய் 
உன் பாவினால் நன்மைகள் புரிந்தாய் 
எப் பாமரரும்  மனம் குளிர நீ வளர்ந்தாய்!.....

பூமகள் பாதம் பணிந்திடும் பக்தன் 
உன் ஞாபகம் ஒன்றே போதும் 
இங்கு தேன் மழை போல் சந்தம் 
எம் நாவினிலும் வந்து நின்றாடும் !....

நான் வணங்கிடும் பாரதியே ........
நீ மலர்ந்த பொன்னாள் அதனில் தான்  
வீரமும் விவேகமும் மலர்ந்தது என்று 
நான்முகன் இங்கொரு காரணம் சொல்லானோ!!.... 

பாவலர் உள்ளத்தின் படிக்கட்டு 
நீ இல்லையேல் எமக்கேது புது மெட்டு
நான் வரைந்தது கவிதை என்றால் இதையும் 
நீ கொடுத்ததன் துணிவுதான்  என்பேன் !!!!!.............

வா மகனே வா என்று உன்னை இங்கு 
வாரியே அணைத்திடத்  தமிழ்த் தாய் இன்றும் 
பூமியில் தவமாய்த் தவம் இருக்கின்றாள் 
பிறந்து வா நீயும் எம்முடன் நிரந்தரமாய் வாழ!!!!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4 comments:

  1. வா மகனே வா என்று உன்னை இங்கு
    வாரியே அணைத்திடத் தமிழ்த் தாய் இன்றும்
    பூமியில் தவமாய்த் தவம் இருக்கின்றாள்
    பிறந்து வா நீயும் எம்முடன் நிரந்தரமாய் வாழ!!!//

    நல்ல கவிதை. வரட்டும் பாரதி வந்து எல்லோருக்கும்
    தேசப்பற்றை ஊட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்.

    ReplyDelete
  2. வாழ்த்துப்பாடல் ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. பிறந்து வா நீயும் எம்முடன் நிரந்தரமாய் வாழ!!!!

    பாரதியை மீண்டும் அழைக்கும் அருமையான வரிகள்..

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........