3/17/2011

விதவையும் ஒரு பெண்ணே!.....


மனசுக்குள்ள பாரம்
மதி மயங்கும் நேரம்
உறவுகள் றொம்ப  தூரம் 
உருக்குலையுது  சதுரம்!

இது இறைவன் தந்த வரம் 
இல்லை இங்கு இன்ப சுரம் !
நாம் பட்டுப் போன மரம் 
இதனால் பேச முடியவில்லை வீரம்!

பெண்ணுக்கேது  சுதந்திரம் 
அவ பொறுமை காக்கும் இயந்திரம்! 
வந்த துயர் என்றும் நிரந்தரம் !
வாழ்நாளில் இறங்காது இந்தப் பாரம்!

பெண்மை போற்றும் சரித்திரம் 
உட்பூசல் நிறைந்த தந்திரம் 
 இயம்புகின்றார் பலசாஸ்த்திரம்
இட்ட கட்டளைக்கு அடங்குது எம் சரீரம்!

கத்தரிக்க நினைக்குது பல கரம்! 
காட்ட முடியவில்லை அதிகாரம் 
எங்கும் வேதம் ஓதிடும் மந்திரம்
அது விளங்கிக் கொள்ள  முடியாத பெரும்  சூத்திரம்!

 ஏனோ எழுதினார் எமக்கென தனியான பத்திரம் !
இதுதான்  தாங்க முடியாத பெரும் துயரம்!
இதனால் நாங்கள் கொள்ளவில்லை  ஆத்திரம்
இருந்தும் நம்மைக் காக்க எடுக்க வேண்டும் புதிய பாத்திரம்!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1 comment:

  1. தயங்காதே...தடைகள் எதுவும் தடையல்ல...வாழ்வு என்றும் நிலையல்ல..

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........