காந்தியும் கோவம் கொள்வார்
எங்கள் கண்மணிகள்படும் துயரம் கேட்டால்
ஏந்திய துப்பாக்கியைப் பின் இறக்கியும் வைக்கமாட்டார்
நீதியைக் கொன்று நெடுந்துயர் பரப்பவல்ல
சாதியை ஏற்று இங்கே சாந்தமாய் இருப்பதற்குக்
காந்தியும் ஏற்க்கமாட்டார்!
கருவறை கிழித்து ஆங்கே சிசுவையும்
பதம் பார்க்கும் அரக்கர்கள் முன்
புத்தரும் கோவம் கொள்வார்
புனித கர்த்தரும் கோவம் கொள்வார்
எம் பெண்ணினம்படும் சித்திரவதையை
நேரில் கண்டால் சித்தரும் கோவம் கொள்வார்
இராமனும் அவர் பக்தனும் கோவம் கொள்வார்
யேனோ நாம்மட்டும் கோவம்கொண்டால்
நம் தலையைக் கேட்டார் அங்கே!
