12/17/2010

முடிச்சு


கரு அறைகள் கல்லறைகளாகி
கனிவு தரும் மனம் எரிமலையாகி
பெண்ணவள் இங்கே புதுயுகம் படைத்தால் 
ஆணே உன் ஆதிக்கம் எங்கே செல்லும்?

விடுதலையின் பாதையிலே 
வேங்கையென நிற்பவளும்பெண்ணே! 
வீரம்செறிந்த மண்ணினிலே 
மானம் ஒன்றே பெரிதென எண்ணி 
உன்னிடத்தில் மாண்டு கிடப்பவளும் பெண்ணே!

அவளைத் தீண்டிப்பெற்ற இன்பம் உனக்குப் பெரிது
அவள் தேடித்தந்த செல்வம் உனக்குப் பெரிது
அதனிலும் பெரிது தூண்டிக் கெடுப்பார் உறவு என்று
மாண்டு கிடக்கும் சில ஆண்களே!

நல்லவை,கெட்டவை தெரியாத உன் வாழ்வொடு
விதிவசத்தால் மாண்டோம் என்றொரு காரணத்தால்
மனிதரல்ல மனிதநேயம் அற்றவரெல்லாம் அறிவுரைக்க
மௌனமாக மனதொடு அழும் பிறவி!

உடலாலும் மனதாலும் ஒருபோதும் கெட்டிராத
உயிரொன்று தீயோர் வார்த்தைகளால்
தீ மூட்டிக் கூத்தாட பார்த்து ரசிப்பதுதான்
நீ போட்ட அந்த மூன்று முடிச்சுக்கு அர்த்தம் என்றால்

இதுதான் திருமணம் என்னும் உனது
ஐந்தெழுத்து மந்திரத்தின் தந்திரம் என்றால்
இதற்குத்தான் பெண்ணென்ற இயந்திரம் என்றால்
காணிக்கை எதற்கு? கன்னிக்குத் துணை எதற்கு?

மானம் கெட்டுப் போவதற்கா?
மூத்தோரே! பெண்ணைத் தானம் கொடுக்கும்
இடம் அறிந்து கொடுத்துவிடு இல்லை என்றால்
உன் பிள்ளை ஊனமென எண்ணி உன்னோடு நிறுத்திவிடு!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3 comments:

 1. "...தீயோர் வார்த்தைகளால்
  தீ மூட்டிக் கூத்தாட பார்த்து இரசிப்பதுதான்
  நீ போட்ட அந்த மூன்று முடிச்சுக்கு அர்த்தம் என்றால் .."
  கருத்துச் செறிவான நல்ல கவிதை. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இடம் அறிந்து கொடுத்துவிடு இல்லை என்றால்
  உன் பிள்ளை ஊனமென எண்ணி உன்னோடு நிறுத்திவிடு!!!..

  முடுச்சுகளின் எடுப்பு கவிதையின் தொடுப்பு, நன்று !!

  ReplyDelete
 3. இருவர் கருத்துகளுக்கும் எனது மனமார்ந்த
  நன்றிகள்............

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........