12/21/2010

கோவம்

                  
காந்தியும் கோவம் கொள்வார்
எங்கள்  கண்மணிகள்படும் துயரம் கேட்டால்  
ஏந்திய துப்பாக்கியைப் பின் இறக்கியும் வைக்கமாட்டார் 
நீதியைக் கொன்று நெடுந்துயர் பரப்பவல்ல 
சாதியை  ஏற்று இங்கே சாந்தமாய் இருப்பதற்குக் 
காந்தியும் ஏற்க்கமாட்டார்!
கருவறை கிழித்து ஆங்கே சிசுவையும்
பதம் பார்க்கும் அரக்கர்கள் முன்
புத்தரும் கோவம் கொள்வார்
புனித கர்த்தரும் கோவம் கொள்வார்
எம் பெண்ணினம்படும் சித்திரவதையை
நேரில் கண்டால் சித்தரும் கோவம் கொள்வார்
இராமனும் அவர் பக்தனும் கோவம் கொள்வார் 
யேனோ நாம்மட்டும் கோவம்கொண்டால்
நம் தலையைக் கேட்டார் அங்கே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3 comments:

 1. பெண்ணினம்படும் சித்திரவதையை
  நேரில்க் கண்டால் சித்தரும் கோவம் கொள்வார்" கருத்துள்ள நல்ல படைப்பு

  ReplyDelete
 2. காந்தி என்ன ராமன் என்ன
  புத்தர் என்ன சித்தர் என்னே எல்லாரையும் விட முதலில் தாய்தான் கோவம் கொள்வாள்.
  தாயின் கோவம் சாபமாகும் அடியாளே!!

  ReplyDelete
 3. பெண்னினத்தில் நான் தாயல்லவா?..
  எமது கோவத்திற்கு சிலர் கொடுக்கும்
  பரிசு இன்றும் உலகறிந்தவை. ஆனால்
  குறித்த செயல்கண்ட்டு இவர்களும்
  கோவம்கொள்வார்கள் என்றுதான்
  சொல்லவருகின்றேன்.உங்கள் கருத்துக்கு
  மிகவும் நன்றி.....கருத்துக்கள் தொடரட்டும்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........