ஏங்கும் ஏக்கம் பார்!
உண்ணாமல் உறங்காமல்
உடல் போகும் போக்கைப் பார்!
தெருவோரம் காய்கின்ற மனித
கருவாட்டு இனத்தைப் பார்!
நினைத்தாலே நெஞ்செரியும்
நிஜமான காட்சி பார்!
அழுதாலும் தொழுதாலும் இனி
யாருண்டு எண்ணிப்பார்!
யாருண்டு எண்ணிப்பார்!
அன்றாடம் நீ சிந்தும் அநியாயச்
செலவை இன்றேனும் சிந்தித்துப் பார்!
பூப்புனித நீராட்டாம்
போடுகின்ற கூத்தைப்பார்!
இது புலம்பெயர்ந்த மண்ணினிலே
புதுமையான சினிமா பார்!
ஏட்டிக்குப் போட்டியாக
கெலிகொப்ரர்பறக்குது பார்!இந்திர லோகமே இங்கேதான் தெரியுது பார்!
வெள்ளைத்தோல் விளக்கேந்தி
வரிசையாகச் செல்வதைப் பார்!
கெலிகொப்ரர்பறக்குது பார்!இந்திர லோகமே இங்கேதான் தெரியுது பார்!
வெள்ளைத்தோல் விளக்கேந்தி
வரிசையாகச் செல்வதைப் பார்!
வீதியெல்லாம் வெண்கம்பளம் விரித்தும்
மலர்துவும் பெண்களைப் பார்!
சொன்னபடி தைத்த ஆடைகள்
சொர்க்கத்தைக் காட்டுது பார்!
சொர்க்கத்தைக் காட்டுது பார்!
கண்ணை மயக்கும் அலங்காரம்
காண்பவர் உடலிலெல்லாம் தெரியுது பார்!
மண்டப வாயிலில் வைத்த குத்துவிளக்குகள்
மணவறைவரைக்கும் தொடருது பார்!
கற்பனைக்கே எட்டாத கலைநயம் மண்டபத்தில்
கலக்குகின்ற கலக்கலைப் பார்!
இத்தனைக்கும் மத்தியிலே
என்றேனும் ஒரு நாள்
என்றேனும் ஒரு நாள்
இல்லாத ஏழைகளின் எரிகின்ற வயிற்றைப் பார்!
காதலிலே தோல்வியென்று
கண்டபடி உழறும் மனிதர்கள் முன்
கண்டபடி உழறும் மனிதர்கள் முன்
கட்டியணைக்க யாருமின்றி
கதறி அழும் மழலைகள் பார்!
கதறி அழும் மழலைகள் பார்!
செக்கலில் செல்வதற்கு
சிவன் துணை கேட்பவர் முன்
சிவன் துணை கேட்பவர் முன்
எவன் துணையும் இல்லாமல்
இடுகாட்டில்உறங்கும் மழலைகள் பார்!
கொடுப்பவனுக்கும் இவர்களுக்குக் கொடுக்கும் இடுகாட்டில்உறங்கும் மழலைகள் பார்!
ஒரு மனம் இன்னும் வரவில்லையே பார்!
"பூப்பெய்திய பெண்ணுக்காய்
ReplyDeleteபோடுகின்ற கூத்தைப்பார்.."
"இல்லாத எழைகளின் எரிகின்ற வயிற்றைப் பார்..."
மனித நேயம் மிக்க கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள்.
மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்துக்கு.
ReplyDeleteதெருவோரம் காய்கின்ற மனித
ReplyDeleteகருவாட்டு இனத்தைப் பார்!....
கண்ணை மயக்கும் அலங்காரம்
காண்பவர் உடலிலெல்லாம் தெரியுது பார்.....
தேவையையும் தெளித்தலையும்
தெளிவாகச் சொன்னீர்கள்.மிக்க நன்று!!
This comment has been removed by the author.
ReplyDelete