சித்தத்தைத் தெளியவைத்து சீர்கொடுக்கும் மாரியம்மா
சீரான வாழ்விழந்து
சினம் கொண்டோம் பாருமம்மா
உந்தன் பக்தர்க்கு யாருமின்றி
பரிதவிக்கும் காலமம்மா
பாராமல் நீயிருந்தால்
பகைவர் பலம் மெருகேறுமம்மா
காளியம்மா நீ வருவாய்
கண்ணெடுத்துப் பார்த்திடுவாய்
கலியுகத்தை மாற்றிடுவாய் தன்னாலே
வரும் கஸ்ரங்களைப் போக்கிடுவாய் முன்னாலே
அன்புநிலை காத்திடுவாய்
அகந்தைதனை அழித்திடுவாய்
அருந்துணையாய் வந்திடுவாய் அம்மா நீ
இந்த அடிமை வாழ்வை அகற்றிடுவாய் அம்மா நீ
சத்தியத்தைக் காத்துநிற்கும்
சந்ததியை வாழவைத்துப்
பொய்க்குடியை மாய்த்திடுவாய் அம்மா நீ
அந்த பெரும் பணியையாற்றிடுவாய் அம்மா நீ
அந்த பெரும் பணியையாற்றிடுவாய் அம்மா நீ
அருமையான துதிப்பாடல்.
ReplyDelete