சிங்கத்தின் பிடியில்
சிக்கிய மான்களைக்
கொம்பேறி மூக்கன்கள்
கொஞ்சி விளையாடக்
கொடிய நாகங்கள் படம்பிடிக்க
சில மந்திகள் வந்து இதைக்கண்டு
பாசம் என்று தந்தி பரப்ப
சுதந்திரப் பறவைகள் பறக்கின்றன
அவைமட்டும் அங்கே சுதந்திரமாக
மான்கள் உயிர் துடி துடிக்கிறது
மயில்கள் இதைக்கண்டு தவிக்கிறது
குயில்கள் பாட மறுக்கிறது
கோட்டைக்குள் நரிகள் நுழைகிறது
அந்தரத்தில் தொங்குது வௌவால்கள்
அதைப் பிடிக்கத் தாவுது கரடிகள்
சிந்தனை செய்யுது சிங்கங்கள்
சில சிறுத்தைகள் வரவினைக் குறித்து
இரப்பையை விரிக்குது முதளைகள்
இரத்தம் குடிக்கத் தவிக்குது கரடிகள்
ஊளையிடுகுது நரிகள்
உணவைப் பரிமாறக் கேட்குது இவைகள்
மான்கள் துடையைக் கண்டு
மண்டியிடுகுது ஓநாய்கள்
கொடிய மிருகங்கள் மத்தியிலே
மான்களைக் கொன்று குவித்தன சிங்கங்கள்
தலையொரு பாகம்
தொடையொரு பாகம்
இடையொரு பாகம்
மொத்த உடலையும்
ஒவ்வொரு பாகமாய்ப் பிரித்து
கொடிய விலங்குகள் உண்ட
இரகசிய விருந்துக் கூத்தை
பாவம் பட்டுப் பூசிகள் எங்கிருந்தோ படம் பிடித்து
பகிரங்கப் படுத்தின நாட்டுக்குள்ளே!
காட்டுக்குள்ளே நடந்த கொடிய நிகழ்வு
இங்கிருந்த ஆடுகளையும் ,மாடுகளையும்
நாய்களையும்,பூனைகளையும் அளவைத்தன.ஆனால்
வேடர்கள்மட்டும் மகிழ்ச்சியுடன்
விரைந்து சென்றனர் அன்றே காட்டுக்கு!
No comments:
Post a Comment
வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........