3/31/2011

இது யார் செய்த பாவமோ!....

நீல மேகம் குடை பிடிக்க
நிலா வந்து ஒளி கொடுக்க
நாமும் உந்தன் மடிமீது
நனைகின்றோம் தினம் விழிநீரில்

தூக்கத்தை துக்கம் முழுங்கியது
தூசி தட்டியே பல இரவுகள்
தூங்காமல் இங்கு விடிகிறது
ஏக்கத்தில் எம் மனம் தவிக்கிறது

எதிர்பார்த்த சுதந்திரமோ இங்கு
எதிரி கையில் இருக்கிறது
காக்கும் தெய்வம் உறங்குவதால்
காவலின்றி மனம் புலம்புகிறது

தீக்குளித்தே நெஞ்சுக்குள்ளே
தினம் தீயணைப்பு நிகழ்கிறது 
போர்க்களத்தில் எம் வாழ்க்கைப் 
போராட்டம் தொடர்கிறதே!!!......

இதை ஊக்குவிக்கும் பல மிருகங்களும்  
எம் உணர்வுகளை உணர மறுக்கிறதே!..... 
முட்டாள்கள் தினத்தன்று எமக்கும் 
முடி சூட்ட யார் வருவாரோ .........

பல அற்பர்களின் ஆசைக்கெல்லாம் 
அடங்கிப் போகும் எங்கள் வாழ்க்கைச் 
சக்கரத்தைச் சுழற்றிச் சுழற்றி 
சதிசெய்யும் விதியே எமை விட்டுப் போகாயோ !...

கர்ப்பம் தரிக்கும் வயதின் எல்லை
காணாத சிறிய முல்லை மொட்டு
கயமை கொண்ட வண்டினத்தால்
கருவுற்றுக் கருகிப் போகுதே காவலற்று!....

சற்றும் இரக்கம் காட்டாது
சாக்கடையில் வீழ்த்தி எம்மை
அச்சுறுத்திப் பெற்ற இன்பம்
அழிக்காதோ இவர்கள் வாழ்வை!...

இந்த முட்டாள்கள் கொள்ளும் வெறி 
முன்னேறும் பாதை எங்கும் 
 பற்றாதோ  தீயாய்   இங்கே
எம் பத்தினிகள்  விட்ட சாபம்!.......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/25/2011

உன்கனவு நினைவாகும் காலமிது!......

பாரதியே உம்மை நாம் 
வணக்குகிறோம் !......... 
பகலிரவு உன் பேச்சில்
மயங்குகிறோம்!............

நீதி சொன்ன மன்னன்
இங்கு நீயல்லவோ
நிமிர்ந்து நிற்கும்
பெண்ணினத்தின் தாயல்லவோ

சூளையில் இட்ட செங்கல்
மனையானது போல்
மனைவியை இட்டவர்
மனம் அன்றும்  கல்லானது!.........

பாரதி உன் மனமோ
இதனால் புண்ணானது
மறத் தமிழன் உன் பாட்டு 
எமக்குத் துணையானது

சாதிவெறி கொண்டவர்க்குக்
காலனாய்  நின்றாய் 
சங்கடத்தில் நின்றவர்க்கு 
சக்தியாய்  நின்றாய்

வீரமற்ர மனிதர்கள் முன்
வேங்கையாய் நின்றாய்
வியர்வை சிந்தும் உழவருக்குத்
தோழனாய் நின்றாய்........

சாத்திரங்கள் பெண்ணினத்தின்
வாழ்வை இருட்டிலே
சந்திரனாய் சூரியனாய்
வந்த  பாரதியே!..........

பாட்டிசைக்கும்  வல்லமையால்
பாரதத்தை வென்றாய்
பாவையரின் சுதந்திரப்
போர் வீரனாய் நின்றாய்

ஏட்டினிலே நீ இட்டகவி 
இறக்கவும்  இல்லை 
எம் இருதயத்தைத்  தொட்ட
வரி (கள் )நாம் மறக்கவுமில்லை

காத்திருந்து உன் கனவை
நினைவாக்குவோம்  காலம் 
வெல்லும் வெல்லும் போதும் 
என்றும் உமை வாழ்த்துவோம்....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/19/2011

வாழ்க்கையில் வெற்றிகொள்ள

உடலைக் கோவிலாக்கு உன் உள்ளத்தைத் தெய்வமாக்கு
சத்தியத்தின் வழியில் நீ நீயாகவே இரு.உன் எதிரில் வரும்
வஞ்சனைத் தீயையும்,வதந்தியையும் அன்பெனும் நீரூற்றால்
அணைத்துச் செல் முடியவில்லை எனில் அடித்துச் செல்...........
வெற்றி என்றும் உனதாகும். 
  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

தத்தித் தத்தி நடந்து வாறா

தத்தித் தத்தி நடந்து வாறா
எங்கள் தங்கப்  பாப்பா
அவ பத்து விரலையும் 
மூடிகொண்டே ஓடிப் பாப்பா.....

கலர் கலராய்ப் பொட்டுச் 
சட்டை போட்டால்  
 நல்லாய்ப் புதினம் பார்ப்பாள்
பட்டுப் பூச்சி போலவந்தும் 
தொட்டுப் பார்ப்பாள் .............

வட்ட நிலா போல வந்து
எட்டிப் பார்ப்பாள்- கட்டி 
நாங்கள் அணைப்பதர்க்குள் 
கலைந்து  செல்வாள் .......

கெட்டிக்காறக்  குட்டி இவள்
பாட்டும் பாடுவாள்-  தன்
பாட்டி சொன்ன கதைகளையும் 
வடிவாய்க் கேட்டுச் சொல்லுவாள்!.....   
   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/17/2011

பத்துத் தலை இராவணனின்

பத்துத் தலை இராவணனின்
பரம்பரை அழியவில்லை
மொத்தத்தில மக்களது
துக்கம் இன்னும் குறையவில்லை

ராமா ராமா ராமா......
ஸ்ரீ ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ......
ஸ்ரீ ராமா ராமா ராமா 

குத்தங் குறை சொன்ன மக்கள் 
குழப்பங்கள் குறையவில்லை 
மொத்தத்தில சீதை அம்பாள் 
விட்ட கண்ணீர் ஓயவில்லை 

 ராமா ராமா ராமா......
ஸ்ரீ ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ......
ஸ்ரீ ராமா ராமா ராமா

அர்த்தமற்ற வாழ்க்கையிதில்
அனர்த்தங்கள் குவிந்திருக்கு  
சத்தியத்தைக் காப்பதற்கு 
சங்கடந்தான் நிறைந்திருக்குது 

 ராமா ராமா ராமா......
ஸ்ரீ ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ......
ஸ்ரீ ராமா ராமா ராமா

புத்திகெட்ட மானிடர்க்கு
புகலிடம் எங்கிருக்கு
சத்தியத்தைக் காத்து இங்கே
சங்கடத்தைப் போக்கிடுவாய்......

ராமா ராமா ராமா......
ஸ்ரீ ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ......
ஸ்ரீ ராமா ராமா ராமா

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

நீதியின் குரல்!......

எம் கதை முடியும் நேரம்
எழுத்துக்கள் தடம் பதிக்கும்
நாம் சொல்வதை உலகம் கேட்டால்
சிறு நலன் எமக்கும் கிட்டும்.........

மன்னவர் காக்கும் குடியின்
மனநலன் குன்றாதிருக்க
நீதியை யாப்பார் எவரோ
அவர் அவ்வழி சென்றால்ப் போதும்

மேதினில்த் துயரம் குறைய
மேன்மக்கள் தொடர்வார் தம் பின்
சாதிகள்,மதங்கள் பேசா(து)
யாவரும் ஒன்றே என எண்ணி

சரிநிகர் பாசம் கொண்டால்
சண்டைகள் நீங்கும் உலகில்
சமத்துவம் அற்றுப் போனால்
சாக்கடை ஆகும் தேசம்!.......

தினம் தினம் அழிவின் பாதையைத்
தேடியே நீதியைக் கொண்றால்
பெருகிடும் பேரழிவினில் நின்று 
இப் பூமியை யார்தான் காப்பார்?....   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

விதவையும் ஒரு பெண்ணே!.....


மனசுக்குள்ள பாரம்
மதி மயங்கும் நேரம்
உறவுகள் றொம்ப  தூரம் 
உருக்குலையுது  சதுரம்.....

இது இறைவன் தந்த வரம் 
இல்லை இங்கு இன்ப சுரம் 
நாம் பட்டுப் போன மரம் 
இதனால் பேச முடியவில்லை வீரம்!....

பெண்ணுக்கேது  சுதந்திரம் 
அவ பொறுமை காக்கும் இயந்திரம் 
வந்த துயர் (என்றும்) நிரந்தரம் 
வழக்கு வெல்லும் தினம் மறு புறம்....

பெண்மை போற்றும் சரித்திரம் 
உட்பூசல் நிறைந்த தந்திரம் 
 இயம்புகின்றார் பலசாஸ்த்திரம்
இட்ட கட்டளைக்கு அடங்குது எம் சரீரம்!....

கத்தரிக்க நினைக்குது பல கரம் 
காட்ட முடியவில்லை அதிகாரம் 
எங்கும் வேதம் ஓதிடும் மந்திரம்
அது விளங்கிக் கொள்ள  முடியாத பெரும்  சூத்திரம்

 ஏனோ எழுதினார் எமக்கென தனியான பத்திரம்???...  
இதுதான்  தாங்க முடியாத பெரும் துயரம்.....
இதனால் நாங்கள் கொள்ளவில்லை  ஆத்திரம்
இருந்தும் நம்மைக் காக்க எடுக்க வேண்டும் புதிய பாத்திரம்........
 


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

கோமாதா பூஜை செய்வோம்.....

புல்லைத் தின்னும்
பசுவின் பாலை
பிள்ளை குடித்து வளருதடா!

இதில் உள்ள சத்து 
உடலைக் காத்து 
உயிரை வாழ வைக்குதடா! 

அன்னை போல 
எம்மைக் காக்கும் 
ஆவின் குணத்தை அறிந்தவர்கள் 

இன்றும் இதனை 
வணங்கி  இங்கே  
இதற்கும் பூஜை வைத்தனரே!

அன்னையர் தினம் போல்
இன்றயநாளை அனைவரும்
மகிழ்ந்து கொண்டாடி

இதன் ஆசிகள் பெற்று
ஆயுட் பலமும்
அமைதியுமுற்று வாழ்ந்தாரே!.....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/01/2011

அணையைத் தாண்டுது துயரம்

அணையைத் தாண்டுது                                                                                                   துயரம் இங்கே அம்மா வருவாளோ.......
ஆதிசக்தி ஆனவளே ஆயிரம் 
கண்கள் உடையவளே நீதி தவறிய
மனிதரை அழித்திட  நீயே 
இங்கு வருவாயோ நீதி தவறிய 
மனிதரை அழித்திட நீயே 
இங்கு வருவாயோ...............
                        (அனைத் தாண்டுது)
இதயம் சுருங்கி விரிகிறதே 
தாயே எதற்க்காக............
இன்னும் உயிர்கள் துடிக்கிறதே 
தாயே எதற்க்காக...........
நரியும் புலியும் புன்னரி நாயும் 
நம்மைத் துரத்துது  எதற்க்காக

நானிலம் காக்கும் தாயவளே 
நல்லது கெட்டது அறிந்தவளே 
விதியை சதியை மதியால் வெல்லும் 
நன்மை நமக்கு அருளாயோ........

ராமகாவியம் படைத்திடவே 
சீதையென்று அவதரித்தாய் 
மானிடர் வாழ்வின் இன்னல்கள் போக்கும் 
மார்க்கம் ஒன்று அருளாயோ.....

எரியும் நெருப்பின் நடுவினிலே 
இன்னல்கள் பெருகும் நிலையினிலும் 
தாயவள் பாதம் போற்றியே நின்றோம் 
தாயே இங்கு வருவாயோ........... 
தாயவள் பாதம் போற்றியே நின்றோம் 
தாயே இங்கு வருவாயோ.......
                              (அணையைத் தாண்டுது)      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.