6/29/2011

இது என்றும் மன்னிக்கமுடியாத தவறு......

கற்புக்கொரு பங்கம் வந்தால்
கன்னியரே தயங்காதே.............
காலத்தை வீணாக்கிப் பின்
கண்ணீரில் நீந்தாதே!!!.............

கருவறையில் உயிர் சுமந்து
மறுபிறவி எடுப்பவள் நீ........
அச்சத்தை மிச்சம் இன்றி
அன்றே துறப்பவள் நீ!........

வெக்கத்தால் தலைகுனிந்து  
வீரத்துக்குக்  கட்டுப்பட்டு 
உன்னை நீ இழந்திருந்தால் பின் 
உயிர்ப்பலியை எடுக்காதே........//

விழித்தெழுந்து போராடு
நல்லதோர் விடியலை நீ தேடு
அவமானச்  சின்னம் என்று சிசுவை
ஆற்றோடு விட்டுவிட்டால்

நீ செய்த பாவத்துக்கு என்றும்
நீங்காத துயரம் தொடரும்!.........

ஊருக்குள் உண்மை தெரிந்தால்
உன் மானம் என்னவாகும்............//
தன்மானம் போனபின்னால்
தயங்காமல் அழைப்பார் கயவர் ...

மணமாலைக்குள்  இணையும்முன்னே
மதிமயங்கிப் போகும் பெண்ணே
தவறானமுறையில் சிசுவைத்
தானாக ஏற்கும் பெண்ணே-   

உயிர்கொல்லும் பாவம் இதற்கு
ஒருபோதும் மன்னிப்பில்லை......
இதை உணராமல் தவறு செய்து 
ஒழுக்கத்தில் சிறந்த தாய்மையை
அழுக்காற்றில்  தள்ளிவிடாதே!.......

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/21/2011

அகதிகள் நம்துயரிதைக் கேளுங்கள்!....

விழித்தபடி உறங்குதடா நெஞ்சம்!...
இங்கே வீணாகாத குழப்பங்கள்
ஆயிரம் ஆயிரம் தஞ்சம்!!!!............
விலை கொடுத்து வாங்குவதற்கும்
இனி இல்லை உறக்கம்!....இந்த

வெக்கத்தை வெளியில்ச்சொன்னாலும்  துக்கம்..
எனக்குமட்டும் இல்லையடா தோழா.......
எம் இனத்துக்கே வந்ததுதான் நெடுநாளாய்
அரக்கரவர்  குலத்தை அழித்தோம்.........
அது அங்கே மீண்டும் பிறந்துவரவே

எம் இருக்கைகளை விட்டுப் பறந்தோம்
தனக்கென  இருந்த பெயரையும் மறைத்தோம்
தஞ்சம்கோரி வந்ததனால் இங்கே
அகதி என்று பெயர் எடுத்தோம்!!!!.............

வாய் பொத்தி நின்றோம் பல
மொழி தெரியாத நாட்டினிலே  
வருமானம் தேடிச்சென்று
தன்மானத்தை இழந்தோம்!.....

சொந்த வீட்டை இழந்த நாமோ
வாடகைவீட்டில் வதைக்கப்பட்டோம்......
எங்கள் துயர் அது எம்மோடிருக்க
வந்த துயரம் எம்மை வாட்டி எடுத்தது

பிள்ளைகள் பெற்றோம் இங்கே
பெரும் கனவு கண்டோம்........
சொல்லி வளர்த்தோம் இதுதான்
எங்கள் கலாச்சாரம் என்று

சொல்லக் கேட்க்கவில்லை சிலருக்கு இது சுட்டுப்போட்டாலும் வரவில்லை இதனால்
அல்லல்ப் பட்டோம் அவமானப் பட்டோம்
சட்டம் பேசும் பேச்சைக்கேட்டு அச்சத்தால் 
சங்கடத்தோடு இதுவரை ஒத்துளைத்தோம்!....

தொட்டதுக்கும் பணம் வேண்டும் இதனால் 
எம்மை தினமும் துவட்டிப் பிளிந்தோம் 
அது போதவில்லை என்செய்வோம்
வெறும் இரத்தக் கறைதான் மிஞ்சுதடா!....
இதனால் எம் கனவுகளும் தொஞ்சதடா!!!.....

இதற்குள் திருப்பி அனுப்பும் கதை கேட்டு
தீராத் துன்பம்  ஆறாய் ஓடுதடா.............
எம்மை வருத்தும் இந்த நினைப்பால் தினமும்
பெருந்துயரைக் கருந்திரையால் மூடிவைத்தோம்
இதனால்த்தான் நித்திரைபோய் இன்றும் நாம்
பெரும் சித்திரவதைப்படுகின்றோம் !!!!!......... 


                                                                                                          
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/19/2011

என் கேள்விக்குப் பதில் என்ன?.....

பரந்தகடலில் வாழ்ந்தாலும் மீன்கள்
துண்டுப் புழுவுக்கு ஆசைப்படுவதனால்
உயிர் துடி துடிக்க  மாழ்கின்றனவே  இதுதான்  அறியாமையினால் தோன்றும் காதலா !....

ஐயோ பரிதாபம் மீன்களைப்போல் நாங்களும் 
மாளும் கதை இன்றுமே மாறவில்லையே!!!.....
அந்தத் தூண்டில்க்காரன் விதிக்கும் விதியில் 
சிக்கித் தவித்தவர் உயிர் பிளைத்ததில்லையே! ..

அழையா விருந்தாளியாய் நுழைபவனே 
ஆண்டவன் கட்டளைப்படி நடப்பவனே 
உயிர் பறிக்கும் தொழில் உனக்கு                                                                அலுக்கவில்லையா!... உன்னைப் பறித்தெறிய
எமக்கும் ஒரு வழியிருந்தால்ச் சொல்லையா..

காலனே உனது முகவரி என்ன??????................
எம் கண்களை இருட்டிக் கொல்பவனே!!!..........
பந்த பாசத்தில் சிக்கவைத்து தினமும்
எம்மைப் பந்தாடி மகிழ்பவனே சொல் நீ.....
இந்த இருசெயலையும் விட்டுவிடமாட்டாயா....//

இல்லையேல் உனக்கும் இதயம் இருந்தால் சொல் 
எம் மனம்கொண்ட வலியதனை உணர்த்திடவும்
மண்ணில் உயிர்கள்  இனிப் பிளைத்திடவும்
காதல் செய்தேனும் உன்னை நாம் வெல்வதற்கு!!!...


  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/18/2011

எழுத்தாளர்கள் பெறும் பெரும்வெற்றி....

உண்டோம் உடுத்தோம்
உறங்கி எழுந்து
எம்கடன் புரிந்தோம்  என்றிலாது
நன்றே பலதேசம் நலன்பெற 
நாளும் எழுதிடு  எம்தோழா !......

நல்லது கெட்டது நாமிங்கு அறிந்தது 
இவற்றில் சொல்லத் தகுந்தது 
சொற்சுவை  பொருட்சுவை நிறைந்த 
வள்ளுவன் வகுத்த நன்நெறிபோலே
வாழ்க்கைக்குகந்த செய்திகளை

அன்போடு பண்போடு அகமகிழ்ந்து
அனைவரும் வாசித்து அறிந்திடவே
உன்னுள் இருக்கும் திறன்கொண்டு
ஊக்கத்தோடு தினமும் நீ எழுது.......

எழுத எழுத அறிவும் பெருகும்-இதனால்
பரந்த உலகமும் சுருங்கித் தெரியும்அங்கே 
இறக்கை முளைத்துப்  பறக்கும் உன்னை என்றும்
இறந்தபின்னும் பூவும் காயும் கனிகளும் அறியும்!..  

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/15/2011

எங்கே கிடைத்தது சுதந்திரம்....

நாய்க்கொரு வால் இருக்கு
நமக்கது இல்லை ஐயா........
நாம்படும்   பாட்டைக்கேட்டு
நாய்கூடச் சிரிக்குதையா!.....

வாய்விட்டுச் சிரிச்சாப்போச்சு
வயசுக்கு வந்த பொண்ணு......
ஊருக்குள் கட்டுப்பாடு
ஒருகோடி உள்ளதையா!........

விளக்கேத்தப் போனபொண்ணு                               வாழ்க்கை விடியாமல்  போனதுண்டு
தனக்கேத்த  தீனைக்கூடத்
தானாக உண்பதில்லை!..........

மனசுக்குள் வலியைவைத்து
மாறாப்பால் மறைக்கும் பெண்ணை
தினந்தோறும் சிரிக்கச்சொன்னால்
தேகம்தான் புண்ணாய்ப்போகும்!......

எதற்க்காக இந்தச் சட்டம்- இதை
அன்று எதிர்த்தானே பாரதியும்
எவர் கற்றார் அந்தப்பாடம்
இது எல்லாமே எங்கள் பாவம்..

நாம் மனம்போல வாழநினைத்தால்
தன்மானம்தான் போகும் ஐயா!......பின்
குணங்கெட்ட மனிதருக்கெல்லாம்
குப்பைவாளிகூட நாம்தானையா!.......

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/14/2011

தாயே உன்னிடம் யாசிக்கின்றேன்...

இறக்கும்முன்னே பலகவிதைகள்
என் எண்ணம்போலே                                                                                            அரங்கேற வேண்டும்........
நான் தவிக்கின்ற தவிப்பை என் 
தாய்மொழியும் உணரவேண்டும்!....

திண்டாடும் நெஞ்சுக்குள் 
தீயானது என் ஆசைகள்...
வண்டுக்குத்  தேன்மீது                                                                                         நாட்டம் இல்லையா!......
நான் வாடியபூ என்றேதான் 
விட்டுச் செல்கிறதா  ..............

காற்றிடம் கேட்டுப்பாருங்கள் 
என் கனவு மண்டலத்திலும் 
தினம் ஒலிக்கும் கவிதை வரிகளை 
இன்னும் நான் கற்றுக்கொள்ளத் 
துடிக்கின்றேன் -என் மூச்சுக்காற்று
நின்றுபோகும்முன்னே!............ 

அன்புக்கரம்கொண்டு                                                                              என்னை அணையுங்கள்
வம்பில்லாத இன்பக்கவி
கடலலைபோல் பொங்கி எழுந்துவரும்  
என் இனிய உணர்வுகளோடு உங்கள்
பாதங்களைத் தொட்டு வணங்க.......

என் கன்னித்தமிழே அன்னைமொழியே
என்னைக்காக்க மறவாதே!............
என்னிரு விழியும் தூங்கி இன்று 
பன்னிரண்டு ஆண்டுகள் ஆயாச்சே!.....//

உறவுப்பாலம் உடைந்ததனால்
உன்னைவிட்டுப் பிரிந்தேனே !....
இதை என்விதியென விட்டுச்செல்லாதே
பல சந்தக்கவிதைகள் என்
சொந்த மொழிதனில் எழுதத்துடிக்கும்
இறக்கை இழந்த சிறு பறவை நான்.....

எனக்கொரு இறக்கைகொடு
என் கவிதைகளுக்கும் நல்லதோர் 
இருக்கை கொடு யோசிக்காதே!....

    
     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/13/2011

பெண்ணடிமை விலங்கு தெறிக்க....

அடக்கி ஒடுக்கி ஆணவத்தால்
அன்பைச் சிதைக்க நினைக்காதே!....
அருவருக்கும் வார்த்தைகளை
அவளுக்கென்றுமட்டும் நீ படைக்காதே..

உன்னை நீயே இழிவுபடுத்தும்
உண்மை இதனை உணர மறுக்காதே....
நான் சொல்லப்போகும் சேதி கேட்டு
எதிராய் சூழ்ச்சிசெய்ய நினைக்காதே!...

என் அன்னையரே தந்தையரே
அன்புமிகு சகோதரரே.......
உங்களில் ஒருத்தி நான்
உள்ளதைச் சொல்லப்போகிறேன்-அதிலும்  
உண்மையைச் சொல்லப்போகிறேன்!.......

கள்ளம் கபடம் அற்ற பெண்ணை
கடைத்தெருவில் வைத்துவிக்கும்
கழிவுப்பொருளைப்போல நீயும்
ஏலம்போட்டு எடுக்காதே!!!!!............

அந்த சொர்ணரகத்தை வாங்கப்போகும்
அண்ணன் ,தம்பியே அங்கே உங்கள்
அக்கா தங்கையை மறவாதே!!...............

சொன்னபேச்சு கேளாமனைவியை
அவள் இஸ்ரம்போல விட்டுவிடாதே..
ஒரு பெண்ணுக்கெதிறாய்  விவாதம் வந்தால்
வெறும் வெட்டிப்பேச்சு பேசாதிரு நீ.......

இன்று விதைக்கும் விதையை
என்றோ ஒருநாள் அறுவடைசெய்ய
முந்தி அழைப்பார் காத்திருந்து நொந்தவர்
அன்றும் நீதான் இதற்குப் பொறுப்பாவாய்..

வட்டிக்கடையில் விட்டகாசுபோல்
குட்டிபோடுமே நீ என்றும்  விட்டபிழைகள்
இதனால் கெட்டுப்போவது யார் சொல் .....
உன்னைப் பெத்த தாயா ,கட்டியமனைவியா
அட நீ பெத்த பிள்ளையா ???..................//
இத்தனைபேரும் பெண்தானே !!!!!.............

நீ அடித்து செத்த பாம்பை இனி
ஊர் அடித்தால் தப்பென்ன !......
இந்தக் கேள்விக்கு பதில் என்ன சொல்வாயோ..
இப்போது தவறு புரிகிறதா?.........
ஒன்றைமட்டும் உணர்ந்துகொள்

"இன்றைய ஆடவன் நாளை ஓர் கணவன்
இவனே பின் தந்தையும் ஆவான்"இந்தவாசகம்  
நெஞ்சினில் நின்றால் எழும்குறைகள் எல்லாம்
ஏட்டினில் இருந்தும் இடு காட்டினில் இருந்தும்
இன்றே புறப்பட்டு சென்றுவிடுமே!!!!.....................
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/10/2011

இதுதான் இறுதி முடிவா!........

முள்வேலிக்குள் மாட்டிக்கிட்டு
அதைத்தாண்ட முடியாமல்ச்                                                                                     செத்துக்கிட்டு - தினமும் உன் பொண்ணு வாழும்                                                                                      வாழ்க்கை பாரு சின்னத்தம்பி 
இது முறைத்தான நீயும் கொஞ்சம்
சொல்லுதம்பி!!!!................

ஊருசனம் பேச்சைக்கேட்டு
உன்னோட ஆசை அதை
விட்டுப்புட்டு -பொண்ணோட
மானம் காக்க நினைக்கிறியே
சின்னத்தம்பி -இதை யாரும்
புரிஞ்சுக்கவா  போறாங்க                                                                                              சொல்லுத்தம்பி ................//

தாலிவரம் நீ கேக்க  ஒரு
தறுதலையே வந்துப்புட்டான்
வேறுவழி இல்லாமல்த்தான் 
சின்னத்தம்பி - உன்னோட வேதனையைப் 
புதைக்கிறியா சொல்லுதம்பி.........//

காசுபணம் மெத்திடிச்சு
 கண்ட நோயும் தொத்திடிச்சு எது சொன்னாலும் கேக்காத                                                                                            மொக்கயனுக்கு-இனியும் சோறு                                                        ஆக்கிப் போடுறதுதான் வாழ்க்கையின்னா
அதுக்கு  சொட்டு விஷம் போதாதா
சொல்லுதம்பி!!!!!!.................

நாம் கொடுக்கும் தண்டனையும் 
அவன் கொடுக்கும் தண்டனையும் 
ஊர்கொடுக்கும் தண்டனையும் ஒத்துக்கிட்டு 
வெறும் பெருக்காய் வாழப்போகும் 
பெண்களுக்கு -இனி வாழ்விருக்கா  
நீயும் கொஞ்சம் சொல்லுத்தம்பி!..... 


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/08/2011

சீச்சி என்ன இது வாழ்க்கை!.....

நெஞ்சைத் துளைக்கும் வேதனை
சொன்னால்ப் புரியவில்லை......
நெருப்புத்திண்ட சோதனை
சொன்னால்ப் புரியவில்லை

அஞ்சி உயிர் பிழைத்தநிலை   
சொன்னால்ப் புரியவில்லை
எம் ஆருயிரை இழந்தநிலை
சொன்னால்ப் புரியவில்லை

பட்டினிச்சாவை எட்டியநிலை
சொன்னால்ப் புரியவில்லை
பரிதவிக்கும் மக்கள் நிலை
சொன்னால்ப் புரியவில்லை

பக்கத்து வீட்டுக்காரரின்                                                                                             நகைச்சுவை சொன்னால் புரிகிறது!............
பார்த்து இரசித்த சினிமாக் கதை 
சொன்னால் புரிகிறது!.........

கற்றுக்கொண்ட பாடத்துடன்
தொழில்நுட்ப வேலை
சொன்னால் புரிகிறது!.........
காசு பொருள் சம்பாதிக்கும்வழி
சொன்னால் புரிகிறது!.........

கன்னியரின் கடைக்கண்
பார்வை மட்டும் - எப்படியோ
சொன்னாலும் சொல்லாவிட்டாலும்
புரிகிறதே.... பாளாப்போன மனிதருக்கு!!!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

மனம் உவந்து ஒரு வாழ்த்து.....

தங்கக் கலசம்
இத் திங்களின் முடிமேல்
என்றும் தங்கிட  வாழ்த்துங்கள்
இசையெனும் இன்பக் கடலில்
எங்கும் தவழ்ந்திடும் சீமான் 
இனிதே வாழ வாழ்த்துங்கள்....
தந்தை புகழையும்  இம் 
மைந்தன் காத்தான் என்றே 
நாமும் மனம் மகிழ்ந்திடும் 
எம் செந்தமிழ் கற்ற நாவினால் இவரை 
சிறப்புடன் வாழ வாழ்த்துங்கள்.......//
தித்திக்கும் குரலோசை  அதிலும்
தெளிந்த நற் தமிழோசை 
திக்கெட்டும் பரவச்செய்
சீர்காழி சிவசிதம்பரம் -என்றும்போல்
இன்றும் கலைவாணியின் அருள்பெற்று
நிலையான புகளின் உச்சியில் 
இவர் தந்தைபோல் என்றென்றும் வாழ
இன்றே வாழ்த்துங்கள்¨!......
வாழ்க வாழ்க பல்லாண்டு
நல் வளமும் ,நலனும் ,புகழும் பெற்று.....  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/06/2011

நாம் உங்கள் செல்வங்கள் !.......

அம்மா வயிற்றில்  கருவாய்  இருந்து
பாப்பா நாமும்  வந்தோமே!...............
சும்மா இருந்த முதுகில் இப்போ
சுமையைக் கொழுவி விட்டாரே!!...

பாப்பா நாமும்  பறவைகள்  போல
பறந்து திரிய நினைத்தோமே............//
பத்துப் பாடமும் மனதில்ப்  பதியப் 
பகலும் இரவும் துறந்தொமே!..........

குத்தம் குறைகள் சொல்லும் அம்மா
கோலைக் கையில் எடுத்தாலே
பச்சைப் பிள்ளைகள் எங்கள் மேனி 
பதை பதைத்துப்  போகாதா ............

பெற்றவர் அறியாப்  பிள்ளை மனதை
மற்றவர் அறிய  மாட்டாரே !..............
இந்த சித்திரவதையைப் பெற்றே  ஆயினும்
சிறப்புப் பட்டம் தர  நினைப்பான்யேன்!!!......

கற்றவர்மட்டும் வாழும் உலகினில்
இனி மற்றவர் வாழக் கூடாதா..........
சுய புத்தியை வளர்த்திடும் வாழ்க்கைக்
கல்வி சுகமாய் இருக்கக் கூடாதா.....

நித்தமும் எங்கள் கனவினில்க்கூட
புத்தகம் வருவது முறைதானா..... 
இத்தனை சிறிய வயதினில் எம்மை 
இறுக்கிப் பிடிப்பது சரிதானா !..........//

பெத்தவர் (கள்)கூட பகைவர்கள் போல
முறைத்துப் பார்ப்பது முறைதானா....
இதனால் மொத்தமாய் எங்கள்
மழலைப் பருவம் புத்தகப்பூச்சி ஆனதுவே!..

இனிக் கற்றிடும் கல்வியில் எங்கும்
கருணையும் சேரணும் இதனால்
கனிவுடன் மழலைகள் நாம் கல்விபெற
எங்கள் "பாரதி" சொன்ன பாப்பா பாடலை
பகுத்தறிந்து  நல்வழியதனில் விடுங்கள் !... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6/02/2011

கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்!...

பொருள் ஏதும் இல்லாத 
கவியும் அரங்கேறுது 
அதைப் புவிபோற்றும் 
வகை கண்டு மனம் வாடுது !..

அறிவோடு போராடி 
வென்ற கவிதை (கள்)இங்கே
ஆராதனை இன்றி நின்றதெடி
சுவையாமல் பொருள் சொல்லும்
காலம் இது -சொன்னாலும்
புரியாத வேகம் அது..............//

எதற்க்காக சமைத்தேனோ
இதை நான் என்று
ஏமாற்றம் கொண்டால்
அதுதான் எம் தவறு!......

நோய் தீர்க்கும் மூலிகைக்கு
வருத்தம் ஏனோ- இங்கே
நோயாளியே கைவிட்டுச்
சென்ற பின்னால்...........//

காற்றோடு நீ விரும்பின் 
மணம் பரப்பு .......
கற்பூர வள்ளியே அதுதான்
உன் சிறப்பு!...........


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.