9/26/2011

சிரிப்புச் சிரிப்பாய் வருகுதடா .........

அண்ணே என்னண்ணே ஒரே ஜாலியா 
இருக்குறாப்போல தெரியுது ..........
ஆமாண்ணே சொல்லுங்கண்ணே...... 
அட சொல்லுங்கண்ணே ................
அடப் போடா ....................
சிரிப்புச் சிரிப்பாய்  வருகுதடா .........
அந்த நாளதனை எண்ணிப் பாக்கயிலே 
சிரிப்புச் சிரிப்பாய்  வருகுதடா.........
சிரிப்புச் சிரிப்பாய்  வருகுதடா.........

காதலிது காதல் என்று 
காதல்க்கதை நூறு சொன்ன 
மானங்கெட்ட பொண்ணுக்கிட்ட 
மாட்டிக்கிட்ட நாளதனை எண்ணிப் பாக்கயிலே 

சிரிப்புச் சிரிப்பாய்  வருகுதடா.........
சிரிப்புச் சிரிப்பாய்  வருகுதடா.........

அப்புறம் அப்புறம் ...மேல சொல்லண்ணே¨!.......

ஐபோனில் முத்தம் இட்டு 
அழகாகத் திட்டம் இட்டு 
முகநூலில் காதலிச்சு 
முடிச்சாளே எந்தன் கதையை 
அத நினைக்கையிலே 

சிரிப்புச் சிரிப்பாய்  வருகுதடா.........
அட சிரிப்புச் சிரிப்பாய்  வருகுதடா.........

அடடே நீயுமா ..ஹி..ஹி ..ஹி ...
நிறுத்து நிறுத்து மிச்சத்த நா சொல்லுறே .....

சிங்காரப் பேட்டையில
செல்லமா நடந்துவந்த 
ஒய்யாரி மனச நம்பிக் 
கண்ணான காதலியே நம்ம 
கல்யாணம் என்று சொல்ல 
அண்ணாண்னு சொல்லிப்புட்டா 
அட இந்நாளுக் காதலிதா ............

அத நினைக்கையிலே ....உனக்கு 
சிரிப்புச் சிரிப்பாய் வருகுதடா ...
சிரிப்புச் சிரிப்பாய் வருகுதடா ...
ஹி ........ஹி .....ஹி ....ஹி ....ஹி ...
கோவிந்தா கோவிந்தா ..................

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/25/2011

அம்மாமாரே ஐயாமாரே வாழ்த்துங்க ......

கற்பூரச் செடி இவளைத் தள்ளி வைக்காதே ...
காலமெல்லாம் காக்கவந்த நாயே ................
பொறுப்புடனே புள்ளை குட்டி பெத்து நீயும் 
பொறுமையுடன் வாழ இனிதே கற்றுக்கொள் ...

இலை கண்ட இடம்தேடி ஓடி இனியும் 
இல்லாளை மறந்து எங்கும் தூங்கிவிடாதே ...
கலையாத ஓவியமாய் உன் முகத்தை
மனக் கண்ணுள்ளே நிறுத்தியவள் பாவம் என்று 

இலைபோல இவள்  மனத்தைக் கருதாமல் 
இன்புற்று இனிதே நீ என்றும் வாழ்வதற்கு 
மகிழ்வான காரியத்தை தினம் செய்து 
மற்றவர் போற்றிட இங்கு வாழ்ந்து காட்டு ...

குலைப்பதில் ஓர் இன்பம் அது போதுமென்று 
குறைக் குடமாய் வாழாமல் வீரம் கொண்டு 
அடுத்தவரையும் காக்கும் நல்ல பண்பதனால் 
நன்றி உள்ள நாயென்று பேரை வாங்கு ............

குறட்டைவிட்டுத் தூங்கும் சில கூட்டத்தோடு 
கூட்டணி சேராமல் தனித்து என்றும் உன் 
மனம்போல மணவாழ்க்கை அமையவென்று 
மனதார வாழ்த்துகின்றோம் வாழ்க வாழ்க நாய்களே !.....

 பொன் மொழி :குடி குடியைக் கெடுக்கும் ................................                                 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/24/2011

சொல்லடி சிவ சக்தி .............

என்று வருவாய் என்று வருவாய் என்று இங்கே 
தினமும் உன் மனமும் விழிகளும் காத்திருக்க 
அன்றொருநாள் உன் வயிற்றில் சிசுவாய் வந்து 
இப் புவிதனிலே அவதரித்தவன் நான் என்றால் 

உந்தன் மார்புகளை அறுத்து எறிவேனோ .......!!!!
உன் இனத்தை உயிர்ப்பலி எடுப்பேனோ .........!!!!
உருச் சிதையவைத்து உன்னை நான் படம் பிடிப்பேனோ
அப்படிச் செய்தால் நான் மனிதனா மிருகமா ...........!!!

இல்லை அம்மா இல்லை .....இல்லவே இல்லை 
இந்த ஈனச் செயலைச் செய்பவன் எவனோ 
அவனுக்கு இதயம் என்பது  இருக்கவே முடியாது..... 
அந்தப் பாவிகளைப் பெற்றவளும் ஒரு தாயா ....!!!!

எங்கள் ஆவி துடிக்குதிந்தச் செய்தி கேட்டு............
ஆண்டவா உனக்கும் கருணை இல்லையா ........!!!!
துடிக்கத் துடிக்க உயிர்களைக் கொல்பவனும்
உன் படைப்பில் இருந்துதான் வந்தானா .............!!!!¨

இந்தக் கேள்விக்குறிகளால் நிரம்புகின்றதே 
நம்பிக்கை இழந்த மனிதர்களின் வாழ்க்கை
நிட்சயம் நீ இருப்பது உண்மையானால் 
அந்த அக்கிரமக்காறர்களை அடியோடு அழித்துவிடு....

தமிழ்ச் சங்கம் வளர்த்த கவி 
சத்தியம் எதுவென அறிந்தகவி 
உந்தன்முன்னால் ஆணையிடுகின்றேன் 
உலகைக் காக்கும் இறைவா 
அந்த ஊமை விழிகளை வாழவிடு ...........

உதிரம் கொப்பளித்தோடும் அந்தப் பூமியில் மட்டுமே 
இனியேனும் உன் கவனம் திரும்ப வேண்டும் .........
மழலைகள்கூட உன்னிடத்தில் மடியேந்திப் பிச்சை கேட்க்க 
மனம் இரங்கி வாராதிருத்தலும் முறையோ ...............!!!!

இந்த அவலநிலை தொடர்ந்தால் உலகில் 
மனித இனம் நின்மதி பெறுவதெங்கே...........!!!!
ஏய் எங்கள் குறுட்டு சமுதாயமே சிந்தித்துப் பாருங்கள் 
மார்பறுத்தலும் முறையோ இது மனிதநேயத்திற்குத் தகுமோ ......
வாழ்வு இழந்தவன் வாழ்க்கைப் பாதையில் இன்று 
வழுக்கும் மனிதனால் உயிகள் துடிக்கும் நிலைமையை ....

மனிதர்களைக் கொன்று குவித்து வென்ற சுதந்திரம் 
அங்கு சண்டை முடிந்ததாய் சமாதானக் கொடி பறந்தது 
எங்கு தணிந்தது இந்த இரக்கமற்ற கொலை வெறி .....!!!
அண்டம் பிளந்தாலும் இனி நாம் அனைவரும் உட் செல்லலாம் 
அதுகூட நிகழவில்லையே நாம் என்ன பாவம் செய்தோம்!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/19/2011

நான் சொல்வது தவறா சொல்லுங்கள் ....

உலகத்தில் நீதி நூல்கள் 
ஒவ்வொன்றும் ஒன்று சொல்லும் 
அவை கலகத்தை நீக்கச்சொல்லி 
கண்ணீரில் தவம் கிடக்கும்.............

நமதுள்ளம் ஏற்றால்த்தானே
நல்லது நடக்கும் இங்கே 
தினந்தோறும் யுத்தம் செய்யும் 
தீராத நோயைத்தீர்க்க இனி 

தெய்வமே தேரேறி வந்தாலும் 
தீருமோ என்றும் தீராத இத் துன்பம் 
ஆறாக ஓடும் இரத்த வெள்ளம் 
ஆண்டுகள் பல சென்றாலும் அவை 
என்றும் அமைதியைக் கொல்லும்....

மாண்டவர்கள் துயர்போக்க 
மண்டியிடும்போதே மற்றொரு செய்தியும் 
மனதை வந்து வதைக்கும்போது 
யுத்தம் இலாத காலம் அது என்றுதான் மலரும் !....

ஒட்டறை அடிப்பதுபோல் எங்கும் 
ஓயாது ஓரினத்தை அழிப்பதுவும் 
அதைத் தப்பெனக் கூறிவிட்டால் 
அத் தலையை வெட்டிச் சாய்ப்பதுவும் 

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் 
இந்த நீதியைக் கொல்லும் அநீதி வாழும்...!!!
மொத்தத்தில் உலகமெங்கும் 
முனைப்போடு தொடரும் இச் செயலைக் 

கண்டிக்கத் தவறிவிட்டால் 
காலப்போக்கில் மனிதநேயமும் 
கடைத்தெருவில் விலைமாதர்போல்
கற்பிழந்து நிற்கக் கூடும் .................

ஒற்றுமை இன்மையை இனியேனும் 
ஒட்டுமொத்த மனித இனமும் சிந்திக்க வேண்டும் 
தாம் கற்றதைக் கேட்டதை நல்வழிப்படுத்தி 
யுத்தத்தை அடியோடு நிறுத்தவேண்டும் .......

மற்றவர் உயிரையும் மதித்திடும் பண்பினால் 
குற்றங்கள் குறைந்து குலப்புகள் செழிக்க வேண்டும் 
விட்டுக்கொடுப்பு ஒன்றேதான் வாழ்வுக்கு உகந்தது 
நல்லது நட்டக நாம் இதன்வழி ஒழுகிடல் வேண்டும் ...

அற்ப சுகத்திற்கு அடிமைப்பட்டுக் 
காட்டிக் கொடுத்தலும் 
கைகட்டி வாய்பொத்தி நிற்றலும் இனிக் 
கேவலம் என்பதை மனித இனம் உணரவேண்டும் ...

சுயநலம் நிறைந்த வாழ்க்கை முறையை 
நாம் சுகப்பட இனியேனும் தவிற்க வேண்டும் 
புத்தனும் காந்தியும் புனிதன் இயேசுவும்
கற்றுத் தந்த பாடத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் 

முற்றிலும் எங்கள் வாழ்க்கை முறை மாறினால்த்தான்
அற்புதமான இந்த உலகத்தில் அமைதியும் தழைத்திருக்கும் .

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/16/2011

ஆண்டொண்று செண்றதடா.....!!!

மின்னலாய்த் திரிந்தவனே ஓர் 
மெழுகுபோல் உருகியதென்ன ....!!!
விண்ணும் மண்ணும் அதிர உன் 
உறவுகள் அழுத குரல் கேட்டாயோ  ....

கண்ணை மூடித் தூங்குவதற்குக் 
காலம் இதுவென யாருரைத்தார்!..... 
வேலும் மயிலும் உடையவனோ ...
உனற்கு மிகவும் வேண்டியவனோ !.....

ஊரைத் தேடி உறவு சேர்த்தாய்
அந்த ஊரே உன்னைத் தேடி வந்த வேளை
நீ யாரைத் தேடிப் பறந்து சென்றாய் ......!!!

கல்யாண மாலை சூட்டிக்
காளை உன்னை அலங்கரித்து 
ஊரெல்லாம் பாட்டிசைக்க 
உறவெல்லாம் வாழ்த்துரைக்க 

ஊர்வலம் நீ வருவாய் என்று 
உள்ளத்தில்க் கனவு மலர 
மணக்கோலம் துறந்து நீயும் 
பிணக்கோலம் பூண்டதேனோ...!!!

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து 
சுற்றம் வாழ்த்த உனக்கொரு 
துணையொன்று வரும் முன்னே 
சுன்னம் இடித்து இங்கே சொர்க்கத்துக்கு 
வழியனுப்ப என்ன அவசரமோ 
இந்த சின்ன வயதினிலே.................!!!

முத்தான புன் சிரிப்பால் எங்கள் 
முழு மனதையும் கவர்ந்தவனே 
நித்தமும் உன் நினைப்பில் வாடுகின்றோம் 
நீ மீண்டும் வரவேண்டும் என்று 

ஆழ்கடலில் சங்கொலிபோல் 
அடிமனதில் வேதனையுடன் 
துடி துடிக்கக் காத்திருக்கும் 
உன் உறவுகளின் வேதனை தீர 

ஆண்டொன்று சென்றதென்று 
அயர்ந்து நீயும் எழுந்து எம் முன் 
மீண்டும் வந்து பிறந்துவிடு 
எம் மீளாத் துயரைத் தீர்த்துவிடு.....

கடந்த ஓராண்டிற்கு முன் இருபத்தைந்து வயதில் 
ஓர் சாலை விபத்தில் உயிர் நீத்த என் உடன்பிறவா 
அருமைச் சகோதரன்(முருக பக்தன்)  குமரேசன் 
நிர்மலனிற்கு இந்த ஓராண்டு நினைவஞ்சலியினைச் 
சமர்ப்பணம் செய்கின்றேன்..ஓம் சாந்தி சாந்தி சாந்தி .... 
             
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/13/2011

அச்சச்சோ மனசுக்குள்ள ........

அச்சச்சோ மனசுக்குள்ள 
ஆயிரம் கவிதைகள் வந்தாச்சு .......
அம்மம்மா நான் எழுதுற எழுத்தைப் 
பாக்குற கூட்டம் அலைமொதாதோ ........
                                 (அச்சச்சோ மனசுக்குள்ள )
வச்சுக்கோ வச்சுக்கோ ......
என் நினைப்பா வச்சுக்கோ .....
தச்சுக்கோ தச்சுக்கோ ..
உன் மனசில வச்சுத் தச்சுக்கோ ....


என் பாட்டால உலகத்த நான் 
பாழடிக்க மாட்டேனே .............
எந்தப் பாட்டுக்குள்ளும் நடக்குற நடப்ப 
எழுதாம விட மாட்டேனே .......
                                 (அச்சச்சோ மனசுக்குள்ள )
அடி டிங்கி நோனா 
டிங்கி நோனா 
டிங்கி நோனா 
என் செந்தமிழைப் 
பளிச்சவங்க நொந்தாங்களாம்!...... 
தமிழுக்குத்  தலைவணங்கு 
தலைவனுக்கு நன்றி சொல்லு
என் தாயாரே எந்தன் நெஞ்சில் 
உந்தன் விம்பம் என்றும் தங்கும்...
                                (அச்சச்சோ மனசுக்குள்ள ) 
நான் தமிழோடு விளையாடத்தான் 
இத் தரணியிலே வந்தேனாம் .............
அந்தத் தாய்ப்பாலால் வந்த ரெத்தம் 
உறையும்வரைக்கும் நான் 
எழுதாமல் விடமாட்டேன் ........
                       (அச்சச்சோ மனசுக்குள்ள ) 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/12/2011

மாமா மாமா..என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா .......மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்குக் கூச்சமா ?

மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா ?

மைனஸ் ஓட்டுப் போடுற மாமா
மனசக் கொஞ்சம் பாத்துக்கோ மாமா
மைனஸ் ஓட்டுப் போடுற மாமா
மனசக் கொஞ்சம் பாத்துக்கோ மாமா

மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்குக் கூச்சமா ?
 மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்குக் கூச்சமா ?
                                                         
ராத்திரிப் பொழுதில ராவா அடிக்கிற 
மாமா உனக்கிது புரியாது 
ராத்திரிப் பொழுதில ராவா அடிக்கிற 
மாமா உனக்கிது புரியாது 

காத்திருந்து  காத்திருந்து
கண்கள் ரெண்டும் பூத்திருந்து 
செத்துப்போன மனசுக்குள்ள 
சேந்த கதைய சொன்னா 
தப்பா ...தப்பா....தப்பா?

மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா ?
மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா ?

புத்திசாலி மாமா நீதான் 
புரிஞ்சுக்காம போயிற்ற 
குத்தம் சொன்ன மாமா உனக்கு 
அந்தப் பாட்டின் 
அர்த்தம் சொல்லத் தெரியுமா ?

மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்குக் கூச்சமா ?

மாமா மாமா
என்னப் பார்த்தால் உனக்கு கூச்சமா?

வலைத்தளம் என்பது உன் வீடோ!
எங்கள் வார்த்தைச் சுதந்திரம் 
அதைப் பறிப்பதற்கு?
கலைக்கு ஏது ஈடு இணை 
அதைக் கத்துக்கொண்டு வா மாமா 
அட கலைக்கு ஏது ஈடு இணை
அதைக் கத்துக்கொண்டு  வா மாமா
                                              (மாமா மாமா...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/10/2011

அன்பான பெற்றோரே இதை அறிந்துகொள்ளுங்கள்....

விதை ஒன்று விதைக்க அங்கே  
முளை வேறு முளைப்பதில்லை .........
அறிவோடு நற்பண்பும் என்றும் 
ஆனந்தம் நிறைந்த வீட்டில் 

வளர்வானே நற்பிள்ளை 
பிறர் வாயார வாழ்த்துரைக்க 
நமதன்பு ஒன்றேதான் அவன் 
நல்வாழ்விற்கு உரமாகும்......//

கருவுற்ற நாள்முதலாய்க் 
கனம் கொள்ள வேண்டும்
நாம்தானே நாள்தோறும் 
நன் நிழலாக நிற்கின்றோம் ...

வளமான வாழ்விற்கு வழிகாட்டி 
எம் வாழ்வும் வளமாக இருந்தால்த்தான் 
வெறுந்தாளில் நிறைகின்ற 
வீணாகா நற்க்கருத்தைப்போல் 

உருவாவான் நம்பிள்ளை 
என்றும் ஊதாரி ஆகாமல் இதை 
நினைவில்க்கொள்வோம் உறவுகளே 
நிலைதடுமாறி நாம் நிற்ப்போமானால்

எமைக் கண்டு சினம் கொண்டு 
தனக்கென்று உள்ள மனம்குளிர 
வருகின்ற நட்பை நாடி அறியாமையினால் 
வளமான வாழ்வை இழந்தானானால்

பிற்சேர்க்கை அகலாது வந்த 
பிணிஎன்றும் விட்டுத் துலையாது 
கடும்போதை முதற்கொண்டு 
விலைமாதர் நலன்கூடத் தேடும் 

உதவாத பிள்ளை எம் வீட்டில் உருவானால் 
நினைத்துப் பாருங்கள் ஊரார் மதிப்பாரா.....
எமக்குத்தான் அந்தப் பிள்ளை சொந்தமாகுமா 
துரத்திப் பிடித்து என்றும் அடைத்துவைக்க முடியுமா!...

வெளிநாட்டில் வாழ்வோருக்கே
அதிகம் பொருந்தும் இக்கருத்து 
நான் வாழ்நாள்முழுதும் கண்டிங்கே 
இதனை வாட்டம்கொண்டு  எழுதுகின்றேன் 

நண்பர்கள்போல் பிள்ளைகளிடத்தில் 
நாம் நாளும் காட்டும் அக்கறைதான் 
ஒளிவு மறைவு அற்ற வார்த்தைகளை 
உரைக்கத் தூண்டும் எம்மிடத்தில் 

வெளியில் சென்ற பிள்ளைகளிடத்தில்அன்று 
நடந்த செயல்கள்  அத்தனையையும் தாயே 
எந்நாளும் கேட்டறியும் நற் பண்பை 
நீதான் உனக்குள் என்றும் வளர்க்க வேண்டும்

பொறுப்புணர்ந்து பிள்ளைகள் வளர 
சில பொறுப்பான வேலைகளையும் 
வயசுக்குத் தக்கமுறையில் தந்தங்கே 
நாம் அவர்களை வளப்படுத்தவும்தான்  வேண்டும்,,

ஆடம்பர வாழ்க்கை அதற்கு 
அனுமதி நிறையக் கொடுத்துவிட்டு 
வீணாய்ப் போன பின்னால் நாம்
வேதனைப் படுவதால் என்னபயன்...!!!

கஸ்ரம் உணர்ந்து வளரும் பிள்ளைகள்
தப்புப்பண்ணத் தயங்குவார் என்றும்
கஸ்ரம் அறியா வாழ்க்கைமுறையை 
நீங்களே கற்றுக் கொடுப்பதை விட்டுவிடுங்கள் ...

ஓடியாடி உழைப்பவன்தான் நாளை 
இவ் உலகையும் ஆழ வல்லவன் 
காளைபோல உடம்பும் மனமும் இருந்தால்த்தானே 
அவன் ஆயுட் பலமும் அதிகரிக்கும்...........//

சேலைத் தலைப்பில் முடிந்து வைத்து 
அவன் வாழ்வு சீர்கெட்டுப்போக வைக்காமல் 
நாளும் ஒருபடி நல்வழிக்கு உயர்த்தி என்றும்
சொல்வழி கேட்க்கும் வகையில் வளர்த்துவிடுங்கள்..... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/08/2011

கடல்போல அன்பு ......கடல்போல அன்பு 
கசிந்தோடும் நெஞ்சில் 
தினம்தோறும் துன்பம் 
அது ஏனோ !....ஏனோ!......

புரியாத கேள்வி 
புதிரனா வாழ்க்கை 
இதுதானா எனக்கிங்கு 
நீ தந்தது !........................
                 (கடல்போல அன்பு )
கிழக்கும் மேற்கும் இணையாது 
என் கேள்விக்குப் பதிலும் கிடையாது 
உலக வாழ்க்கை வெறுத்து நானும் 
உயர உயரப் பறக்கின்றேன் ............//

புரியவில்லை எனக்கு 
எதுவும் புரியவில்லை
தெரியவில்லை எனக்கு
எதுவும் தெரியவில்லை
                  
வழியும் இல்லை எனக்கு
இங்கு வாழ மனமும் இல்லை
வருந்துகின்றேன் இங்கு 
நாளும் அழுது அழுது.......
                     (கடல்போல அன்பு )
கருணை இல்லை 
இங்கு உனக்கென்பேன்
கண்களில்லை அதுவும் 
எனக்கென்பேன்............... 
நீ தொடுத்த கதையை முடித்துவிடு 
என் தோல்விக்குப் பரிசைக் கொடுத்துவிடு 

அடுத்த பிறவி தேவையில்லை 
இதற்கும் மேல் ஒரு துன்பமில்லை 
உன் மனக்கணக்கு முடிந்ததிங்கே 
இனி வழக்கு எதற்கு அதையும் முடித்துவிடு
                                              (கடல்போல அன்பு )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/07/2011

கூதற்காற்று வீசுற நேரம்...........

கூதற்காற்று வீசுற நேரம் உன் 
உடம்பக் கொஞ்சம் பாத்துக்கோ மாமா ...
காரமுளகாய் கஞ்சியக் குடிச்சு 
களத்துமேட்டில சுத்துற மாமோய் .....

அட நேரம் காலம் தெரியாமல் 
நீ இருந்தா போதுமா மாமா.......
வயசு றொம்ப ஏறிப்போச்சு உனக்கு  
சுப்பொண்ணத்  தெரியுதா மாமா.....!!!

கழுத கெட்டால் குட்டிச் சுவரு 
நம்ம காளமாட்டப் பாத்துக்கோ மாமா....
அருவிவெட்டிச் சூடடிச்சு அங்க நீ
அலுத்துப்போனா என்னக் கூப்புடு மாமா.....

கடம எனக்கும் நிறையவே இருக்கு 
உன் காலக்கொஞ்சம் புடிச்சுவிடலாமா ....
தெருவில போற நாயக் கேளு நீ
திண்ட மிச்சத்த நான் திண்டதைச் சொல்லும் 

ஆசை றொம்ப முத்திப்போச்சு .........
நாம் மால மாத்தும் நாளெது மாமா?...
சின்னப் புள்ள மனசைக் கொஞ்சம்
தேத்தும் வழியதைப் பாத்துக்கோ மாமா...

நான் கண்ணசைச்சால் போதும் இங்கே 
உன்னோட களத்துமேடு தாங்காது ஆமா ....
நான் சொன்ன பேச்சைக் கேளுமாமா 
சொக்கத்தங்கம் உனக்கு நான்தான் இங்கே...

வந்த வழியில கந்தனைக் கண்டன்!...
வழக்கம்போல அவர் சேட்டையைக் கேளு
எந்தன்  இடுப்பில தன் தலையவச்சு 
இரவும் பகலும் தூங்கணும் என்றான்......!!!

முந்தாநாளு முகுந்தனைக் கண்டேன்
என் மூச்சுக் காற்றே தனதெனச் சொன்னான்!...
எந்தநாளும் உன் நினைப்பில நான்தான்
ஏங்கிக்கிட்டுக் கிடக்குறன் மாமா............//

இந்தப் பச்சப் புள்ள மனசுக்குள்ள 
பத்தி எரியுற தீயக் கொஞ்சம் நீதான் 
பக்குவமா அணைக்கணும் மாமா இன்றே 
பாக்குவெத்தல மாத்தச் சொல்லிக்கோ ஆமா...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/06/2011

இறைவா நான் என் செய்வேன்!.......

சண்டைக்காற மாமா 
நீயும் சரக்கடிக்கலாமா .....
கொண்டைக் கோழிக் குழம்போட 
கொழுத்த ஆட்டு ஈரலையும் 

அஞ்சுவகை மரக்கறியும் 
ஆசையோடு ஆக்கிவச்சு நான் 
நீ வரும்வரையும் காத்திருந்து 
நெஞ்சு பொறுக்காமல் தூங்கிவிட 

வெறும் வயிற்றில் நீயோ 
விடியும்வரைத் தண்ணி அடிச்சுக்
கருகிப்போன ஈரலுடன் 
கவலையின்றி ஊர் சுத்துறியே....!!!

உனக்கென ஓர் குடும்பம் 
ஊர்ப்பகையை வேண்டிக்கொண்டு 
ஒதுங்கி இங்கே கிடக்கிறோமே 
இதைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க மாட்டாயா...

எந்த மனக்கவலையும் உனக்கு இல்லை 
மரண பயமும் உனக்கு இல்லைஉன்போல் 
தினக்குடிகாறன் பெத்த பிள்ளைகளை 
நாளை திரும்பிப் பார்க்கவும் ஆட்களில்லை...

எதற்கு இந்த போதை உனக்கு...............
எம்மிடம் கிடைக்கும் அன்பு போதாதா....!!!
உன் பழக்கவழக்கம் சீர்கெட்டதனால்
படித்துப் படித்தும் புத்தி வரவில்லையே உனக்கு...!!!

(இவங்களத் திருத்தவே முடியாதுங்க ஹி...ஹி...ஹி..)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/05/2011

இவள்தான் தமிழ்ப் பெண்ணோ ......!!!

ஒரு கேள்வியும் இல்லைப் 
பதிலும் இல்லை இங்கே 
நம் நட்பை அவளேன் 
முறித்துச் சென்றாள்......!!!

இனியொரு தடவை அவள் 
எனக்கினி வேண்டாம் என் 
இதயம் கல்லாய் ஆனபின்னால்
 இதையே பலமுறை நினைத்தேன் 
அவளை மறந்திடத் துடித்தேன் 
பாவி அவள் நினைப்போ மறையவில்லை !...

கருகிய இதயம் காற்றினில் மிதந்து 
அவள் கண்களைத் திறக்க மாட்டாதோ ...!!!
தெருவினில் நின்று ஏங்குகின்றேன் 
தினமும்  அவளைக்காண வாடுகின்றேன் 

எனக்கென்ன என்று வாழ்ந்திடும் பெண்ணே 
என் இதயத்தை இன்றே திருப்பிக்கொடு 
உன் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை நான் 
சிந்திடும் கண்ணீரும் உனக்குத் தெரியவில்லை... 

பருவம் நிறைந்த பெண்ணே நீ என்
பக்கம் வந்தால்த் தவறென்றோ 
இதுவரைகாலமும் பழகிய நட்பை 
இத்துடன் முடிக்கப் பார்க்கின்றாய் ....!!!

இதனால் வென்றதுன் பெண்மை 
தோத்தது நம் நட்பு 
என்றதன்  கவலை இல்லாமல் 
புன்னகைப் பூக்களை வீசுகின்றாயே 
உன்னை என்னால் 
புரிந்துகொள்ளவே  முடியவில்லை ..........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

வேத்துக் கொட்டுது மாமா ....

வேத்துக்  கொட்டுது மாமா ....
எனக்கு பாட்டுவரல ஆமா ......
காத்திருந்த நான் கவிதை வடிக்கவே 
உந்தன் கண்கள் விடல ஆமா........//

ஆசையோ ஆயிரம் இருக்கு 
அயலிலே சனங்களும் இருக்கு
மீசவச்ச மாமா உன்னவச்சு 
நானும் பாட்டுப்பாடலாமா........

அட மீசவச்ச மாமா உன்னவச்சு 
நானும் பாட்டுப்பாடலாமா........

காத்தில கனவில மிதக்குறன்
ராத்திரிப் பொழுதில 
உன்ன அணைக்குன்
என் வாட்டம் தீர நானும்
உன்னவச்சுப் பாட்டுப்பாடலாமா......!!!

வெக்கம் தாழல மாமா அதனால் 
உன்முன் நானும் வெக்கி நிக்குறன் ஆமா 
சிக்கெடுக்கும் மாமா என்ன நீ 
சிக்கவைக்கலாமா ......................

நூத்தில பலதில ஒண்ணு நான் 
நுட்பமான நல்ல பொண்ணும்தான் அதனால் 
என் மனசில உள்ளத மாமா உன்போல் 
மனசத் திறந்து சொல்லலாமா ...........//

கட்டுப்பாடுதான் எக்கச்சக்கம்தான் 
அதை நானும் கடந்து செல்லலாமா .....
அப்புறம் கெட்டபேருதான் எட்டிப்பாக்குமே 
நீ என் கையைவிடு மாமா..............
அட என் கையவிடு மாமா......!!!

(அடடேய் அவ கைய விடுடா ....ஹி...ஹி....ஹி...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/02/2011

பெண்களைக் காக்கும் பொக்கிஷம் எது........

கனவுகள் சுமந்த வண்ணம்  
நாமும் கல்லூரிக்குச்  சென்றோம் 
தினமும் களைத்து விழுந்து 
நன்றாகப் படித்து வந்தோம் 
அதைப் படித்து ஏனோ முடிப்பதற்குள் 

இங்கே கையில் பணம் இருந்தும் 
மூளை இடம் கொடுக்காமல் பாதியில் 
முழுக்குப் போட்டுக்கொண்டவர் சிலர்!....
கன்னி என்றால் அவள் கற்புக்குக்
களங்கம் வரும்முன் கரைசேர்க்க வேண்டி 
பெற்றோர் செய்யும் தவறால் தன்
படிப்பை இழந்தவர் சிலர்!............

மன்மத லீலைகள் மனதை மயக்கக்
காதலில் விழுந்து காணாமல் போனவர் சிலர்!....
சொந்த சுமையை சுமக்கத் தனக்கே 
சூடுபோட்டுக்கொண்டு வீட்டில் அடைபட்டவர் சிலர்

வண்டுகள் இரையும் குப்பையில் கிடந்து அங்கே 
வகையாய்க் கல்வி கற்க முடியாமல் போனவர் சிலர்!...
கையில் பணம்மின்றிப் போகவே கனவுகள் வறண்டு 
மீண்டும் கருவாடாய்க் காய்ந்துபோனவர்  சிலர்!.........
இப்படியெல்லாம் பல ரகங்கள் 
இப் புவியினில் எங்கும் பரந்துகிடக்கப்

படிக்கும்போதே உழைத்து உழைத்து
தன் பக்குவத்தாலே இதை வென்றவரும் 
சொந்தப் புத்தி சுகம்பல கொடுக்கவே 
பட்டப் படிப்பை படித்து முடித்தவரும்
 எந்த வேலையும் கிட்டாமல்ப் போகவே 
இதயத்தில் துயரைச் சுமந்து நிற்க 


வந்த வேலையை விட்டுவிட்டு வசதியின் நிமிர்த்தம் 
பக்குவப்படாத மனநிலையோடு இங்கே 
பகட்டு வாழ்வுக்கு ஆசைப்பட்டு இன்றும் 
வெளிநாட்டுக்கு ஓடோடி வந்தவர்கள்தான்  
வீதியைக் கூட்டுகின்றனர் வேலைத்தளத்தில் 
கோப்பையைக் கழுவுகின்றனர்  பெண்போல் 
குனிந்த தலை நிமிராமல் எடுக்கின்ற கூலிக்காய் 
அஞ்சிப் பிழைத்துத் தன் வாழ்க்கையை ஓட்டுகின்றனர் 
இதற்குள் கட்டிய கணவனே தெய்வம் என்று 
கற்ற கல்வியைத் தானும் மறந்து பெண்ணோ 
கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் சேவை செய்து 
சேமிப்பின்றி வாழ்ந்து விட்டு இப்போ அவளுக்குக்
கை கொடுக்க கட்டிலும் இல்லை தொட்டிலும் இல்லை
 கையில் பணமும் இல்லை என்று வரும்போது 

இனியவள் கையேந்திப் பிச்சை எடுப்பாளா ....!!!
தன்னை வித்துப் பிளைப்பாளா ............!!!!
கறந்தபால் இனி முலைக்கு ஏறுமா  ........!!
இனிக் கண்ணீர்விட்டால் இந்த சோகம் தீருமா...
இது கவிதை அல்லவே  இதுதான் 
இன்றும் வாழ்வில் நடக்கும் உண்மை !.......

பரந்த சமூகம் இன்னும் கல்வியால் 
பலதையும் கற்றுச் சாதனை படைக்கயிலே 
இறைவன் கொடுத்த வரத்தை ஏனோ இவர்கள் 
தாமே முடக்கிவிட்டுப் பின் கண்ணீரில் மிதப்பான்....

எதுவும் கூடவே இருக்கும்போது புரியாது 
இழப்புகள் வந்தபின் மனமிதைத் தாங்காது 
மனிதனது வாழ்க்கை என்றும் நிட்சயம் அற்றது 
இதனால் நீ கற்ற கல்விக்கு மதிப்புக் கொடுத்து 
வந்தவேலையைத் தொடர்ந்து செய்தால் 
புகழோடு பெருமையும் உன்னைப் போற்றிடவே 
பல நெஞ்சங்களும் அறிவுக்குமேல் அனுபவமும் 
அதன்வழியில் உன் வாழ்வின் அத்திவாரமும் உறுதி பெறும்

எனவேதான் 
உலகத்தில் பெண்கள் கல்வியில் இன்றும்
உயர்ந்த நிலையை எட்டும்போது 
பழைய காலம் மறந்து நீயும் இங்கே
பயின்ற கல்வியை சிரத்தில்க்கொண்டு 
விரைந்து நீயும் வேலைக்குச் செல்ல வேண்டும் 
வீட்டில் உன் பணியையும் ஆற்றவேண்டும்....

வெட்டிப் பேச்சும் வீண் விரையமும் கெட்ட பேரும்
 ஏட்டுக் கல்வியைத் துறந்தவருக்குத் தரும் துயரம் 
நன்கு அறிந்த நன்மக்கள் நாம் எனில் இன்றே 
இதையும் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போமே..........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.