5/30/2012

திசை எட்டும் கை கூப்ப.....

திசை எட்டும் கை கூப்பத் 
தென்றலே நீ வாராயோ!....
அசையட்டும் பூமியிலே 
ஆனந்தமாய் உயிர்களெல்லாம்!...

தொகை பத்தும் தினம் ஓதத் 
தோகை மயிலாள் நடம் ஆட 
இறைவா உன் கருணையதால் 
நல் இதயங்களும் மகிழாதோ!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11 comments:

  1. எனது அன்பு உறவுகளுக்கு என் முதற்கண் வணக்கம்
    உங்களை மீண்டும் சந்திப்பதில் இந்த அம்பாளடியாள்
    பெரு மகிழ்வு கொள்கிறேன் உங்கள் வரவு நல்வரவாகுக!..

    ReplyDelete
  2. ஆஹா... ரொம்ப ரொம்ப நாளாச்சு பாத்து. மீண்டும் உங்களைப் பாக்கறதுல மிகமிகமிக சந்தோஷம் எனக்கு. அருமையான பக்திப் பா ஒன்றுடன் வந்திருக்கிறீர்கள். தொடர்கிறேன் உங்களை. (வலைச்சர ஆசிரியராக நான் இருந்தபோது உங்கள் கவிதை ஒன்றை அறிமுகம் செய்து, இப்போது எழுதுவதில்லையே என்று குறிப்பிட்டிருந்தேன்)

    ReplyDelete
  3. ஆஹா... ரொம்ப ரொம்ப காலம் கண்டு. மீண்டும் உங்களை கண்பதே சந்தோஷம் அருமையான கவிதையும் காட்சிப்படமும் !

    ReplyDelete
  4. வருக வருக! கடவுள் வாழ்த்தோடு கவிதை தீட்ட

    தொடர்ந்து வருக!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  5. வலை அழகாய் இருக்கு புதுப்பொழிவுடன்!

    ReplyDelete
  6. வருக வருக தோழி
    நலமா எப்படி இருக்கீங்க ரெம்ப நாள் ஆச்சு
    உங்கள் உறவுகள் எல்லாரும் நலம் என்று கருதுகிறேன்

    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    பக்தி பாடல் அருமை

    ReplyDelete
  7. வருக .. வருக .. இன்னும் பல கவிதைகள் தருக

    ReplyDelete
  8. வாங்க வாங்க அம்பாளடியாள் இவ்வளவு நாள் எங்க போனீங்க சொல்லாமகொள்ளாம. மீண்டும் வந்த்ததற்கு ரொம்ப சந்தோஷம்.

    ReplyDelete
  9. திசை எட்டும் கை கூப்பத்
    தென்றலே நீ வாராயோ!....

    வருகைக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  10. வருக வருக சகோதரி..
    வாழிய நீவீர் பல்லாண்டு...

    வருகையில் திரு முருகின்
    பாமாலையோடு வந்தமை இனிது...

    இனிய பல பதிவுகளை எதிர்நோக்கி
    காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  11. இங்கே எனது ஆக்கத்திற்கு கருத்திட்டு
    வாழ்த்துச் சொன்ன எனதன்பு உறவுகள்
    உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த
    நன்றிகள்!..உங்கள் எண்ணம்போல் இனி
    என் கவிதைகள் தொடரட்டும் உறவுகளே..

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........