5/31/2012

நான் அறிவில் கடல் என்றால் போதுமா!..

மனம் என்னும் திரையை 
மறைத்து வைத்த இறைவன் 
அறிவென்னும் திறனையும் 
ஆங்காங்கே தூவி விட்டான்!!....

இதில் தினம் தோறும் இன்பம் 
தேடும் சில வர்க்கம் இங்கே 
எதைக் கண்டும் அஞ்சாது 
ஏமாற்றிப் பிளைக்கயிலே 

இதை விதியென்று நொந்து 
வீதி எங்கும் புரண்டு தினம் 
அழுதூத்தும் பக்தர்களுக்கு 
ஆண்டவன்தான் என்ன செய்வான்!..

மண்ணாசை பொன்னாசை 
பெண்ணாசை கொண்டுழலும் 
மதிகெட்ட மனிதர்களும் வாழும் இவ் உலகினிலே 
மனிதநேயம்தான் என்ன செய்யும்......!!!

மகத்தான தத்துவத்தை ஏனோ 
மணிக்கணக்கில் கற்றவனும் 
மனம் போன போக்கினிலே உள்ளதை 
மறைத்து நீதி சொல்கையிலே


அந்த மனுநீதி தந்த சோழன் 
மனம் எங்கும் நிறைந்தானே 
எம் மனக் கண்ணில் தோன்றியவன் 
உடன் மாயமாய் மறைந்தானே!!...

உண்மைக்கு மட்டும் சாட்சியை 
இப்போது ஊரெங்கு தேடினாலும் 
அதுவும் வன்மையாய் தூங்கியே 
வழித் துணையாய் வர மறுக்கிறதே ஏன்!!...

சத்தியம் என்பதே தெய்வமடா பெரும் 
தலைக்கனம் கொண்ட மானிடனே 
நாம் நிற்பதும் நடப்பதும் அவன் செயலே 
நீ நிலை தடு மாறுவாய் இதன் எதிரினில் நின்றால்

புத்தியால் உயர்வு பெற்றாலும் 
சத்தியத்தை மதிக்காதவர் பண்பு 
உப்பு நீர் போல உயிர்களின் தாகத்தை 
எப்பொழுதுமே தீர்க்க உதவாது.
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/30/2012

திசை எட்டும் கை கூப்ப.....

திசை எட்டும் கை கூப்பத் 
தென்றலே நீ வாராயோ!....
அசையட்டும் பூமியிலே 
ஆனந்தமாய் உயிர்களெல்லாம்!...

தொகை பத்தும் தினம் ஓதத் 
தோகை மயிலாள் நடம் ஆட 
இறைவா உன் கருணையதால் 
நல் இதயங்களும் மகிழாதோ!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.