8/25/2011

மரணம் என்ற வலையில் விழுந்து.....

மரணம் என்ற வலையில் விழுந்து 
மனிதன் எரிந்து கருகும்போது 
மனதில் உள்ள துயரை என்றும் 
மறைத்து வைக்க முடியாதன்பே.!

எதிரிகூட நண்பன் ஆவான் 
இறந்தபின்னால் தெய்வம் ஆவான்
உடலைவிட்டு உயிர் பிரிந்தால் 
உயர்ந்த குணங்கள் நெஞ்சை வாட்டும்....

கருணை உள்ள தெய்வம் நீயே 
கண்ணிறைந்த கணவன் நீயே
இயமன்  அழைத்துச் சென்றபோது
எவரை நினைத்துத் துடித்தாய் அன்பே!

வரும்பகலில் பாதை மாறும் 
வாழ்க்கை என்ற ஓடம் தாழும்
பிறக்கும்போதே இறப்பின் கணக்கை 
படைத்தவன்தான் வகுத்தான் இங்கே....

வலுவிழந்த மனிதன் எல்லாம் 
மண்ணில் விழுந்து புரண்டாலும் 
அழுது அழுது கண்கள் வீங்கி 
ஆறு குளமாய் ஆனால்  

சென்ற உயிர் திரும்பாதென்று
வந்த உயிர் அறிந்த உண்மை 
உன்னை நானும் இழந்தேனே 
என்னை நானும் மறந்தேனே !

வாச முயலை வாடுதிங்கே 
வந்த  பந்தம் மாறுமா !
தேசம் விட்டுப் பறந்தாலும் 
தென்றல் இங்கே சாகுமா ?


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

39 comments:

  1. ஆண்டாண்டு காலம்
    அழுது புரண்டாலும்
    மாண்டோர் வருவதில்ல
    எனவும்
    எந்த துயர் வந்தாலும்
    ஏற்றம் காண வேண்டுமென
    அழகுபட சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி...
    நல்லா இருக்கு கவிதை.

    ReplyDelete
  2. //சென்ற உயிர் திரும்பாதென்று
    வந்த உயிர் அறிந்த உண்மை
    நன்று நாமும் வேதனையை
    மென்று துயர் கடப்பதன்றோ....//

    really its true.. arumai vaalththukkal

    ReplyDelete
  3. தமிழ்மணம் முதல் ஓட்டு

    ReplyDelete
  4. அதனால் வந்த துயர் மறந்து நீயும்
    வாழ்வில் இன்பம் காண வேண்டும் >>>

    துன்பம் நீங்கி இன்பம் எப்போதும் தேவை தான்..

    ReplyDelete
  5. அருமையான வரிகள்...
    கவிதை நல்லா இருக்கு ...

    ReplyDelete
  6. ஆண்டாண்டு காலம்
    அழுது புரண்டாலும்
    மாண்டோர் வருவதில்ல
    எனவும்
    எந்த துயர் வந்தாலும்
    ஏற்றம் காண வேண்டுமென
    அழகுபட சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி...
    நல்லா இருக்கு கவிதை.

    மிக்க நன்றி சகோ .உங்கள் வரவும்
    கருத்தும் என் மனத்தைக் குளிரவைத்தது ....

    ReplyDelete
  7. //சென்ற உயிர் திரும்பாதென்று
    வந்த உயிர் அறிந்த உண்மை
    நன்று நாமும் வேதனையை
    மென்று துயர் கடப்பதன்றோ....//

    really its true.. arumai வாழ்த்துக்கள்

    மிக்க நன்றி சகோ தங்களின்
    வரவுக்கும் வாழ்த்துக்கும் .....

    ReplyDelete
  8. தமிழ்மணம் முதல் ஓட்டு

    நன்றி சகோ .தமிழ்மணத்தில்
    ஓட்டுமட்டும் அல்ல .முதல்
    முதல் என் ஆக்கங்களைப்
    பின்தொடர்ந்தவர் என்பதும்
    தங்களைத்தான் சாரும் .மொத்தத்தில்
    என் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு
    மறக்கமுடியாத ஒன்று .....

    ReplyDelete
  9. அதனால் வந்த துயர் மறந்து நீயும்
    வாழ்வில் இன்பம் காண வேண்டும் >>>

    துன்பம் நீங்கி இன்பம் எப்போதும் தேவை தான்.

    நன்றி சகோ மிக்க நன்றி .....

    ReplyDelete
  10. அருமையான வரிகள்...
    கவிதை நல்லா இருக்கு ...

    நன்றி மிக்க நன்றி தங்கள்
    வரவுக்கும் பாராட்டுக்கும் ........

    ReplyDelete
  11. //வலுவிழந்த மனிதன் எல்லாம்
    மண்ணில் விழுந்து புரண்டாலும்
    அழுது அழுது கண்கள் வீங்கி
    ஆறு குளமாய் ஓடினாலும்

    சென்ற உயிர் திரும்பாதென்று
    வந்த உயிர் அறிந்த உண்மை //

    உண்மை
    அருமையான கவிதை

    ReplyDelete
  12. அதனால் வந்த துயர் மறந்து நீயும்
    வாழ்வில் இன்பம் காண வேண்டும்
    அட எந்த நிலை வந்தபோதும்
    ஏற்றங் கண்டு வாழவேண்டும்.//

    மாற்ற முடியாத விதியான இறப்பை ஏற்றுக்கொள்ள சொல்லிய மறுக்க முடியாத கவிதை கலக்கல்

    ReplyDelete
  13. இறப்பு என்பது உண்மை என்பதால் ஏற்றங் கண்டு வாழ்வோம்.... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. //வலுவிழந்த மனிதன் எல்லாம்
    மண்ணில் விழுந்து புரண்டாலும்
    அழுது அழுது கண்கள் வீங்கி
    ஆறு குளமாய் ஓடினாலும்

    சென்ற உயிர் திரும்பாதென்று
    வந்த உயிர் அறிந்த உண்மை //

    உண்மை
    அருமையான கவிதை

    மிக்க நன்றி சகோ உங்கள் வரவுக்கும்
    பாராட்டுக்கும் ...

    ReplyDelete
  15. சோக கீதமா ...

    ஆம் சகோ எங்கே இதனைப் பாடுகின்றீர்களா?...ஹி...ஹி....ஹி....
    நன்றி சகோ .

    ReplyDelete
  16. அதனால் வந்த துயர் மறந்து நீயும்
    வாழ்வில் இன்பம் காண வேண்டும்
    அட எந்த நிலை வந்தபோதும்
    ஏற்றங் கண்டு வாழவேண்டும்.//

    மாற்ற முடியாத விதியான இறப்பை ஏற்றுக்கொள்ள சொல்லிய மறுக்க முடியாத கவிதை கலக்கல்

    நன்றி சகோ மிக்க நன்றி ...........

    ReplyDelete
  17. தமிழ் மணம் 6

    எல்லாம் உங்களைப் போன்றவர்களால்
    வந்த புண்ணியம்தான் சகோ .......

    ReplyDelete
  18. இறப்பு என்பது உண்மை என்பதால் ஏற்றங் கண்டு வாழ்வோம்.... வாழ்த்துக்கள்

    மிக்க நன்றி சகோ உங்கள் வரவும் கருத்துக்கள் ,வாழ்த்துக்கள் எல்லாமும்
    என் மனதை இன்று குளிரவைத்தது ....

    ReplyDelete
  19. நல்லா இருக்கு கவிதை!

    ReplyDelete
  20. எதிரிகூட நண்பன் ஆவான்
    இறந்தபின்னால் தெய்வம் ஆவான்
    உடலைவிட்டு உயிர் பிரிந்தால்
    உயர்ந்த குணங்கள் நெஞ்சை வாட்டும்....



    ..... மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்.

    ReplyDelete
  21. அருமை அருமை சகோ

    வாழ்வின் யதார்த்தம் தெளிவாக அழகாக கவிதை வடிவில் தந்ததற்கு நன்றி சகோ

    தமிழ் மணம் 9

    ReplyDelete
  22. நல்ல ஆறுதல் வார்த்தைகள் !

    ReplyDelete
  23. அருமையான கவிதை தோழி பற்று இல்லாத வாழ்வு மேல் என்பேன்!

    ReplyDelete
  24. வாழ்வின் நிலைகளை உண்மையான யதார்த்தங்களை அழகாக வரிகளில் வடித்துள்ளீர்கள்...

    சோகங்கள் நீங்கி சுகங்கள் மலரட்டும்....


    வாழ்த்துகள்..

    ReplyDelete
  25. எந்த நிலை வந்தபோதும்
    ஏற்றங் கண்டு வாழவேண்டும்...........
    ஏற்றங் கண்டு வாழவேண்டும்..........

    வாழ்த்துகள்..

    ReplyDelete
  26. நல்லா இருக்கு கவிதை!

    மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்துக்கு ....

    ReplyDelete
  27. அருமை அருமை சகோ

    வாழ்வின் யதார்த்தம் தெளிவாக அழகாக கவிதை வடிவில் தந்ததற்கு நன்றி சகோ

    தமிழ் மணம் 9

    மிக்க நன்றி சகோ வரவோடு வாழ்த்தும் ஓட்டும் என் மனதை மகிழ
    வைத்தது.

    ReplyDelete
  28. நல்ல ஆறுதல் வார்த்தைகள் !

    நன்றி சகோ .உங்கள் கருத்துக்கு .....

    ReplyDelete
  29. அருமையான கவிதை தோழி பற்று இல்லாத வாழ்வு மேல் என்பேன்!

    பற்றும் வேண்டும் அதை இழக்க நேரிடும்போது தாங்கும் பக்குவமும் வேண்டும்
    சகோ.ஞானியாகிவிடாதீர்கள்......நன்றி சகோ கருத்துக்கு .

    ReplyDelete
  30. வாழ்வின் நிலைகளை உண்மையான யதார்த்தங்களை அழகாக வரிகளில் வடித்துள்ளீர்கள்...

    சோகங்கள் நீங்கி சுகங்கள் மலரட்டும்....


    வாழ்த்துகள்..

    மிக்க நன்றி சகோ .உங்கள் வரவும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் ....

    ReplyDelete
  31. எந்த நிலை வந்தபோதும்
    ஏற்றங் கண்டு வாழவேண்டும்...........
    ஏற்றங் கண்டு வாழவேண்டும்..........

    வாழ்த்துகள்..

    நன்றி சகோதரி வரவுக்கும் வாழ்த்துக்கும் ....

    ReplyDelete
  32. வணக்கமம்மா கவிதை அருமை கடைசிகாலத்தில நிக்கிற எனக்கு ஒரு ஞானியின் விளக்கம் போல கவிதை வடித்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் .. வீட்ட போய் ஒட்டு போடுறன்.. 

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  33. காயமே இது பொய்யடா. காற்றடைத்த வெறும் பையடா. என்று பட்டினத்தார் சொன்னவரிகளை என் தாயாரின் இறப்பின் போது அழகாகப் புரிந்து கொண்டேன். அதை உணர்த்துகின்றது இக்கவிதையும் வாழ்த்துகள். தொடருங்கள். வலையும் எண்ணங்களும் அழகுபடட்டும்

    ReplyDelete
  34. வணக்கமம்மா கவிதை அருமை கடைசிகாலத்தில நிக்கிற எனக்கு ஒரு ஞானியின் விளக்கம் போல கவிதை வடித்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் .. வீட்ட போய் ஒட்டு போடுறன்..

    காட்டான் குழ போட்டான்..

    வாங்க காட்டான் உங்கள் வரவால் என் கவிதைத்
    தோட்டம் செழிப்படைந்தது .மிக்க நன்றி வரவுக்கும்
    வாழ்த்துக்கும் ........

    ReplyDelete
  35. மிக்க நன்றி அம்மா விரிவாகக் கருத்திட்டுக்
    கௌரவித்தமைக்கு.....

    ReplyDelete
  36. வரிகளை படிக்கும்போதே தெரிந்துவிட்டது மனதை ஆறுதல்படுத்த முனைந்து எழுதிய வரிகளானாலும் மனதைத்தொட்ட வரிகள் அம்பாளடியாள்....

    இறைவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கட்டும்பா...

    ReplyDelete
  37. வரிகளை படிக்கும்போதே தெரிந்துவிட்டது மனதை ஆறுதல்படுத்த முனைந்து எழுதிய வரிகளானாலும் மனதைத்தொட்ட வரிகள் அம்பாளடியாள்....

    இறைவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கட்டும்பா...

    உண்மைதான் சகோதரி பல இறப்புகள் தந்த அனுபவமே எனக்கு இந்தப் பாடலை உருவாக்க வழி சமைத்தது .நன்றி சகோதரி சிறந்தமுறையில் கருத்திட்டு என் பாடலைக் கௌரவித்தமைக்கு .........

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........