12/14/2011

பேசடா என் செல்லக் கிளியே!....

அன்னையின் பாடல் கேட்டு 
பிள்ளையின் தோற்றம் பாரு 
இந்த முல்லைப்  பூ சிரிப்பழகு 
முகத்தினை மறப்பார் யாரு !....


இன்னலைப் போக்கும் விழிகள் 
இதழ்களில் தேன் துளிகள்  
மெல்ல நீ அணைத்தால் போதும் 
சில்லென இதயம் குளிரும்!...........


என்னொளி தீபம் உன்னைக்
கண்டதும் இன்பம் பொங்கும் 
உன் நெஞ்சிலே நானும் சாய்ந்தால் 
கொஞ்சிடும் கவிதை வரிகள்!......


முத்தத்தால் மழை பொழிந்து
என் மேனியை நனைப்பவனே 
என் சித்தத்துள் உன்னைத்தவிர 
சிந்திக்க வேறு என்ன உண்டு!....


கத்துத்தா மழலை மொழிகள் 
என் கண் கண்ட தெய்வம் நீயே 
பித்தத்தால் உறைந்து போனேன் உன் 
பேச்சைத்தான் கேக்க ஏங்குகின்றேன்!...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

22 comments:

 1. தேர்ந்தெடுத்துள்ள படமும்
  அதற்கென தாங்கள் படைத்துள்ள கவிதையும்
  சித்தத்தை கொள்ளை கொள்கிறது
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள் த.ம 1

  ReplyDelete
 2. நல்ல கவிதை வரிகள்..... ரசித்தேன் சகோ

  ReplyDelete
 3. இனித்திடும் மழலை மொழிகேட்க
  மனம் துடித்திடும்
  அழகிய கவிதை.
  நன்று சகோதரி.

  ReplyDelete
 4. நீங்க தான் இலக்கியத்தேனியா? இப்போதான் விருது பார்த்தேன் வாழ்த்துகள்

  ReplyDelete
 5. அழகியல் கவிதை! மழலையின் மொழி கேட்பதும், அவர்களுடன் அவர்கள் மொழியிலேயே உரையாடுவதுதான் எத்தனை இன்பமானது! மிக நன்று!

  ReplyDelete
 6. மழலைக்கும் தாய்மைக்குமான கவிதை அருமை..

  ReplyDelete
 7. அழகிய கவிதை மேடம்

  ReplyDelete
 8. புகைப்படமும் கவிதையும் மிக அருமை!!

  ReplyDelete
 9. கவிதை= மழலை.. அருமையான கவிதை..

  ReplyDelete
 10. குழந்தையின் மழலை போல் இனிக்கிறது கவிதை!

  ReplyDelete
 11. அருமையான கவிதை! மழலையின் மேன்மையை இதைவிட சிறப்பாக சித்தரிக்க முடியுமா என்ன? அருமை சகோதரி பாராட்டுக்கள்!

  ReplyDelete
 12. எப்பேர்ப்பட்ட அசாதாரண சூழலும் ஒற்றை மழலைச்சொல்லால்
  இனியதாய் மாறும்.நல்ல கவிதை!வாழ்த்துகள்!

  ReplyDelete
 13. முத்தத்தால் மழை பொழிந்து
  என் மேனியை நனைப்பவனே
  என் சித்தத்துள் உன்னைத்தவிர
  சிந்திக்க வேறு என்ன உண்டு!....
  >>
  தாய்மை சொல்ல்டும் வரிகள்

  ReplyDelete
 14. ஒரு மழலையின் அருமையை அழகா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. //என்னொளி தீபம் உன்னைக்
  கண்டதும் இன்பம் பொங்கும்
  உன் நெஞ்சிலே நானும் சாய்ந்தால்
  கொஞ்சிடும் கவிதை வரிகள்!......//


  எடுத்துக் காட்டு ஒன்று ஆனால்
  அனைத்துமே நன்று!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 16. ஃஃஃஃஇன்னலைப் போக்கும் விழிகள்
  இதழ்களில் தேன் துளிகள் ஃஃஃ

  அருமையாக உணர்ந்து எழுதியுள்ளிர்கள் நன்றி...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  வன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்திப்பு

  ReplyDelete
 17. படத்துக்கேற்ற கவிதை.எப்போதும்போல வரிகள் அற்புதம் தோழி !

  ReplyDelete
 18. //என்னொளி தீபம் உன்னைக்
  கண்டதும் இன்பம் பொங்கும்
  உன் நெஞ்சிலே நானும் சாய்ந்தால்
  கொஞ்சிடும் கவிதை வரிகள்!......//ரசித்த வரிகள்

  ReplyDelete
 19. ஆஹா! அருமை!
  பகிர்விற்கு நன்றி!
  என் வலையில்:
  "நீங்க மரமாக போறீங்க..."

  ReplyDelete
 20. அருமை..

  அழகான கவிதை..

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........