12/11/2011

நோயிலும் கொடிய நோய் இதுதான் அன்பே!...

தப்புத் தப்பாய் புரிந்துகொண்டான் 
தன் தாயைத் தானே தள்ளி வைத்தான்
நித்தம் துயரில் வாடுகின்றான் இருந்தும் 
அவன் நினைப்பை மட்டும் மாற்ற மாட்டான்!...


எத்தனை நாள் தொடரும் இந்த 
ஒளியைத் தேடா வாழ்வு என்று 
தாயவளும் உருகுகின்றாள் இன்றும் 
தன்னிலை மறந்து கருகுகின்றாள்!....


வீணாகிப் போகும் இந்த 
வெறுப்பான காலம் எல்லாம் பின் 
நாம் விரும்பிக் கேட்டால்க்கூட 
நமக்காகத் திரும்பி வருமா .........!!!


உள்ளன்பை அறியா மனமே 
உன் அறிவை ஊரார்கூடி வாழ்த்தினாலும்
என் அளவில் ஏழைதான் நீ ............
எடுத்தெறிந்துப்பார்  உன் பிடிவாதத்தை


கல்லும் உன்னைத் தொழுது நிற்கும் 
இன்பக் கவிபோல் வாழ்வு இனித்திருக்கும் 
உன் ஒரு சொல் கேட்க்க உயிர்கள் தவிக்கும் 
உலகம் உன்னைக் கண்டு மகிழும் !...........


என்னதான் கற்றார் ஆயினும் 
உண்மை அன்பை உணராதவரை 
வாழ்க்கை என்னும் அழகிய தோட்டத்தில் 
வீணாய் செழித்த அகத்தி என்பேன் ........


சிறு துரும்பும்தான் நற் பயன் தரும் 
அகக் கண்ணைக் கவர்ந்து நின்றால் 
இது அறியா உறவுகள் என்றும் நாம் 
எது சொன்னாலும் கேட்க்க மாட்டார் !...


வாத்தத்தில் தீயதிந்த வாத்தத்தால் 
நாளெல்லாம் துன்பம் சேரும் இங்கே 
இனிய நாத்தத்தை இசைக்கும்போது வரும் 
இடிபோல்த்தான் சினத்தைத் தூண்டும்!....


பார் அன்பே உந்தன் நிலையை 
வெறும் பரிகாசம் ஆகிப்போச்சு 
இந்தக் காலத்தை வெல்ல நீயும் 
எடுத்தெறிவாய் உன் பிடிவாதத்தை
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12 comments:

  1. /////என்னதான் கற்றார் ஆயினும்
    உண்மை அன்பை உணராதவரை
    வாழ்க்கை என்னும் அழகிய தோட்டத்தில்
    வீணாய் செழித்த அகத்தி என்பேன்///

    எனக்குப் பிடித்த வரிகள்..
    கற்றுணர்ந்தாலும்.. வாழ்வில் அன்பை உணர்ந்து
    அதன் வழி செல்ல்லாதவர்.
    இருந்தும் இல்லாததற்கு சமமே..

    அருமை அருமை.

    ReplyDelete
  2. என்னதான் கற்றார் ஆயினும்
    உண்மை அன்பை உணராதவரை
    வாழ்க்கை என்னும் அழகிய தோட்டத்தில்
    வீணாய் செழித்த அகத்தி என்பேன் ........

    -இந்‌த நான்கு வரிகளுமே மிகப் பிரமாதமாய் அன்பின் மகத்துவத்தைச் சொல்லிவிட்டன. முத்திரை வரிகள்! மிக ரசித்தேன். பகிர்ந்ததற்கு நன்றி!

    ReplyDelete
  3. அருமை.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அருமையான கவிவரிகள்

    ReplyDelete
  5. சிறு துரும்பும்தான் நற் பயன் தரும்
    அகக் கண்ணைக் கவர்ந்து நின்றால்
    இது அறியா உறவுகள் என்றும் நாம்
    எது சொன்னாலும் கேட்க்க மாட்டார் !...
    >>
    ஓக்கே ஓக்கே

    ReplyDelete
  6. அன்பின் கவிதை அருமை...!!!

    ReplyDelete
  7. என்னதான் கற்றார் ஆயினும்
    உண்மை அன்பை உணராதவரை
    வாழ்க்கை என்னும் அழகிய தோட்டத்தில்
    வீணாய் செழித்த அகத்தி என்பேன் ........
    ஆம் உண்மைதான்..

    ReplyDelete
  8. உண்மையான அன்பை உணர்த்தும் உன்னதமான படைப்பு தொடர்க...

    ReplyDelete
  9. வீணாகிப் போகும் இந்த
    வெறுப்பான காலம் எல்லாம் பின்
    நாம் விரும்பிக் கேட்டால்க்கூட
    நமக்காகத் திரும்பி வருமா .........!!!


    வராதே ,வேண்டினாலும் வராதே ,வெறுப்பின் உச்சத்தில் விரக்தியாய் புறந்தள்ளிய காலங்கள் திரும்ப கோடி கும்பிடு போட்டாலும் வராதே !

    தமிழ் மணம் 7 வது வாக்கு

    ReplyDelete
  10. வீணாகிப் போகும் இந்த
    வெறுப்பான காலம் எல்லாம் பின்
    நாம் விரும்பிக் கேட்டால்க்கூட
    நமக்காகத் திரும்பி வருமா .........!!!
    >>
    சரியான கேள்வி சகோதரி

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........