உன்னையே நினைந்து
உயிர் உருகி தினம் என்
உள்ளத்தில் எரிந்த அந்தப்
பெரும் நெருப்பு அதை நீ அறியாய்!.....
தன்னையே வதைத்த தாயிடத்தில்
பிள்ளை உன் கோவம் நீதியன்றோ!...
வல் வினை அதைக் கடந்து வந்து உன்னை
வாரியே அணைத்திடத் தவித்தவளை.......
புன்னுருவி என்று நினைத்தாயோ
இந்தப் பேதைமை நெஞ்சை வாட்டுதையோ!..
கண்ணினைக் காக்க இமை மறந்ததாய் உன்
கற்பனை அது மிக மிக அற்புதம் அற்புதம்!...
விண்ணவரும் போற்றிடும் தாய்மை உன்னை
நடு வீதியில் விட்டெறிந்ததெனப் புலம்பாதே!...
முன்வினைப் பயனது அறுத்தெறிந்து உயிர்
மூச்சுள்ளவரை உன்னோடு சேர்ந்திருக்கவே
இன்னல்கள் நிறைந்த இடு காட்டினிலே
இதுவரை நான் பட்ட துயர் நீ அறியமாட்டாய்...
சொல்வது இலகு எதையும் வார்த்தைகளால்
வாழ்க்கை சுகப்பட மாட்டாது தடைகள் இருப்பின்...
இது எல்லாமே விதியின் விளையாட்டு
நீ இல்லாமல் போயாச்சு என்றோ என் மூச்சு!..........
இனியும் கல்லான உன் மனம் இளகி வரும் வரை
நான் காத்திருப்பேன் உனக்காகக் கை தொழுதபடி!...
உயிர் உருகி தினம் என்
உள்ளத்தில் எரிந்த அந்தப்
பெரும் நெருப்பு அதை நீ அறியாய்!.....
தன்னையே வதைத்த தாயிடத்தில்
பிள்ளை உன் கோவம் நீதியன்றோ!...
வல் வினை அதைக் கடந்து வந்து உன்னை
வாரியே அணைத்திடத் தவித்தவளை.......
புன்னுருவி என்று நினைத்தாயோ
இந்தப் பேதைமை நெஞ்சை வாட்டுதையோ!..
கண்ணினைக் காக்க இமை மறந்ததாய் உன்
கற்பனை அது மிக மிக அற்புதம் அற்புதம்!...
விண்ணவரும் போற்றிடும் தாய்மை உன்னை
நடு வீதியில் விட்டெறிந்ததெனப் புலம்பாதே!...
முன்வினைப் பயனது அறுத்தெறிந்து உயிர்
மூச்சுள்ளவரை உன்னோடு சேர்ந்திருக்கவே
இன்னல்கள் நிறைந்த இடு காட்டினிலே
இதுவரை நான் பட்ட துயர் நீ அறியமாட்டாய்...
சொல்வது இலகு எதையும் வார்த்தைகளால்
வாழ்க்கை சுகப்பட மாட்டாது தடைகள் இருப்பின்...
இது எல்லாமே விதியின் விளையாட்டு
நீ இல்லாமல் போயாச்சு என்றோ என் மூச்சு!..........
இனியும் கல்லான உன் மனம் இளகி வரும் வரை
நான் காத்திருப்பேன் உனக்காகக் கை தொழுதபடி!...
//////இன்னல்கள் நிறைந்த இடு காட்டினிலே
ReplyDeleteஇதுவரை நான் பட்ட துயர் நீ அறியமாட்டாய்...
சொல்வது இலகு எதையும் வார்த்தைகளால்
வாழ்க்கை சுகப்பட மாட்டாது தடைகள் இருப்பின்...////
ஆயிரம் ஆயிரம் பொருள் பொதிந்த
அர்த்தமுள்ள வரிகள் சகோதரி....
இந்த வரி பிடித்திருந்தது, அந்த வரி பிடித்திருந்தது என்று பிரித்துச் சொல்ல இயலாதபடி மொத்தக் கவிதையும் ஆகர்ஷித்து விட்டது. பிரமாதம்ங்க!
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நெஞ்சை நெகிழ வைக்கும் அருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள்.
அருமையான பதிவு
ReplyDeleteசொல்லிச் செல்லும் விதம் மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
நெகிழ்ச்சியான கவிதை.
ReplyDeleteஇது எல்லாமே விதியின் விளையாட்டு
ReplyDeleteநீ இல்லாமல் போயாச்சு என்றோ என் மூச்சு!..........
இனியும் கல்லான உன் மனம் இளகி வரும் வரை
நான் காத்திருப்பேன் உனக்காகக் கை தொழுதபடி!.
அருமையான ஆக்கம் பாராட்டுக்கள்..
துயர மழையில் நனைந்த வரிகள்!
ReplyDeleteஅருமை மகளே!
த ம ஓ 4
புலவர் சா இராமாநுசம்
தங்களது எழுத்துநடை எப்பவும் எனக்குப் பிடிக்கும்..உங்களுக்கென்று ஒரு வரையறை வைத்துக்கொண்டு கவிதை வரைவது அருமை..
ReplyDeleteஅருமை சகோ
ReplyDeleteகிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் சகோ
தங்களின் இந்தக்கவிதை அருமையாக எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். vgk
ReplyDelete:)
ReplyDeleteஉயிருள்ள வரிகள்
ReplyDeleteஎழுதப்பட்ட விதமும் வார்த்தை தொடுப்பும் அருமை