வருவதும் போவதும் வாழ்வில்
என்றும் புதுமை அல்ல............
புரிதலில் வரும் சுகம் அதை
உணர்தலே புதுமை என்பேன்!....
அன்று கருவறை வந்தவன் பின்
கல்லறை செல்கிறான் இதில்
வாழ்வை சிறையறை என்றவன்
வாழும்போதே சல்லடையாகிறான்!...
ஒருவரை ஒருவர் தாங்கிடும்போது
வரும் துயர் எல்லாம் பறந்திடுமே
இருகரம் எழுப்பிடும் ஓசையின் இன்பம்
இருதயம் வரைக்கும் ஒலித்திடுமே!......
பிரிதலும் நன்றோ பகைமையை வளர்த்து
பிறவியில் இதுவே பெரும் துன்பம் !.............
நாம் அரிதெனக் கருதும் மானிட வாழ்க்கை
அகத்தினை நோக்கினால் பேரின்பம்!............
வறுமையில் செல்வம் இளமையில் கல்வி
முதுமையில் அமைதி தேடித் தினம் இங்கு
அலைபவன் மனிதன் அலைகடல் போல
அவன் அலைந்திங்கு வாழ்வில் என்ன கண்டான்!...
பணமெனும் மூட்டை படுத்துறங்குது
அது பாட்டில் பகைவரை நினைத்தே
இவன் தினம் விழிக்கின்றான்!.....
அறிவதை வளர்த்தவன் பேராசையால்
இன்று அகிலமே தலைகீழ் ஆனது பார் !....
இனி முதுமையில் அமைதியும்
முத்தான தூக்கமும் தத்துப் பிள்ளைதான் இங்கே...
பொறுமையும் பண்பும் புவிதனில் அன்பும்
எவன் அவன் தேடி அடைந்தானோ
அவனது வாழ்வே அடுத்திங்கு புதுமை
அதை என்றும் வாழ்வில் நாம் உணர்வோமே!....
‘‘எதனைக் கண்டான்? பணந்தனைப் படைத்தான்?’’ என்று கவிஞர் கேட்டது போல, பணத்தைத் துரத்தியே வாழ்க்கையின் பெரும்பகுதி ஓடி விடுகிறது. அன்பும் பண்பும் அடைந்தவன் முழுமனிதன் என்பதை அருமையாய் எடுத்தியம்பியிருக்கிறது கவிதை. நன்று. தங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete///அறிவதை வளர்த்தவன் பேராசையால்
ReplyDeleteஇன்று அகிலமே தலைகீழ் ஆனது பார் !....///
இது..இதுதான் இன்றைய மனிதநேயம்
மெல்லமெல்ல அழிந்துபோவதற்கான
சாத்தியக்கூறு.
அழகாகன கவிதை சகோதரி.
வருவதும் போவதும் வாழ்வில்
ReplyDeleteஎன்றும் புதுமை அல்ல............
புரிதலில் வரும் சுகம் அதை
உணர்தலே புதுமை என்பேன்!....
நல்லகவிதை வாழ்த்துகள்.
நாம் அரிதெனக் கருதும் மானிட வாழ்க்கை..
ReplyDeleteஆமாம்..மனிதம் அதை புரிந்து கொள்வதே இல்லை..
வாழ்த்துகள்..
#வாழ்வை சிறையறை என்றவன்
ReplyDeleteவாழும்போதே சல்லடையாகிறான்!#
ஒருவரை ஒருவர் தாங்கிடும்போது
ReplyDeleteவரும் துயர் எல்லாம் பறந்திடுமே
இருகரம் எழுப்பிடும் ஓசையின் இன்பம்
இருதயம் வரைக்கும் ஒலித்திடுமே!.....//
ஆஹா அருமை அருமை.....
////ஒருவரை ஒருவர் தாங்கிடும்போது
ReplyDeleteவரும் துயர் எல்லாம் பறந்திடுமே
இருகரம் எழுப்பிடும் ஓசையின் இன்பம்
இருதயம் வரைக்கும் ஒலித்திடுமே!......
////
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கு மேடம் படம் சிறப்பாக இருக்கு
வாழ்க்கை பதிவாய்...கவிதயாய்!
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅருமை.
ReplyDelete"காசேதான் கடவுளடா" கண்ணை மறைத்திடுகின்றதே.
புரிதலில் வரும் சுகம் அதை
ReplyDeleteஉணர்தலே புதுமை என்பேன்......அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... www.rishvan.com