6/27/2012

இருகரம் அணைத்து

இருகரம் அணைத்து இறைவனின் முன்னே
இதயத்தைத் தந்த என் உறவே -அன்று
முதன் முறை பேசிய வார்த்தையைக்கூட
முழுமையாய் மறந்ததென்ன!

நான் உனக்கெனப் பிறந்தவளோ?
உந்தன் உயிரினில் கலந்தவளோ?
இதை அடிக்கடி நினைக்கிற மனதினில்
துயரை நீதான் அறிவாயோ!

                                        ( இருகரம் அணைத்து)

வெள்ளிப் பனிமலை உருகுது என்றன்
மனமது தவிக்குது உன்றன்  இரு விழி
காண ஒரு வழி இல்லையோ?
வள்ளிக் குறத்தியின் அன்புத் தலைவனே
உந்தன் இதயத்தில் இன்று நானில்லையோ!

சின்னஞ் சிறு குயில் உள்ளம் முழுவதும்
உன்றன்  நினைவது வந்து துயர் தரவே
தன்னந் தனிமையில் நீ சொன்ன கதைகளை
எண்ணி எண்ணி நெஞ்சம் துடிக்கிறதே!.....

                              
கல்லில் முள்ளில் அன்று நடந்து வந்தேன் 
இரு கண்கள் இரண்டும் சிவந்து நின்றேன் 
அல்லும் பகலும் என்னை அணைத்த கரம் 
இன்னும் தழுவ வரவில்லையே அது 
ஏன்?......ஏன்?..ஏன்?

பெண்:

என்னை என்ன செய்ய நினைத்தாயோ?
என்றன்   உயிர்த் தலைவா நான் 
வெண்ணிலவு போல்தான் இங்கு 
உன் நினைவால் தேய்கின்றேன்!

அன்னை அவள் துணையும் இல்லை 
ஓர் அன்பு செய்ய யாரும் இல்லை 
உன்னைத் தினம் தேடுகின்றேன் 
ஒரு உமைபோல பாடுகின்றேன் 
வா வா வா என் அன்பே வா...........
                                           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

20 comments:

  1. உருகிப்பாடி எங்களையும் உருக்கிவிட்டீர்கள்.நன்று

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மிக்க நன்றி ஐயா தங்கள் வரவுக்கும்
      வாழ்த்துக்கும்!..

      Delete
  2. பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி தங்கள் வரவுக்கும்
      அன்பு கலந்த பாராட்டுக்கும்......

      Delete
  3. மிகவும் அருமையான பாடல்! உங்கள் படைப்புகள் சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா தங்கள் வரவுக்கும்
      வாழ்த்துக்கும்!........

      Delete
  4. Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை .

    எங்கள் இணையத்தின் ஓர் விட்ஜெட்டை மட்டும் உங்கள் இணையத்தில் இணைத்து விட்டால் போதும் . எந்த ஓட்டும் இல்லாமலே உங்களுக்கு எம் இணையத்தின் மூலம் டிராபிக் கிடைக்கும்


    விட்ஜெட்டை இணைப்பது பற்றி அறிய



    www.tamilpanel.com







    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தங்கள் வரவுக்கும் கருத்திற்கும் .
      தங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்
      உரித்தாகட்டும்

      Delete
  5. வள்ளிக் குறத்தியின் அன்புத் தலைவனே
    உந்தன் இதயத்தில் இன்று நானில்லையோ!....//

    வெண்ணிலவு போல்தான் இங்கு
    உன் நினைவால் தேய்கின்றேன்!........
    அன்னை அவள் துணையும் இல்லை
    ஓர் அன்பு செய்ய யாரும் இல்லை
    உன்னைத் தினம் தேடுகின்றேன்
    ஒரு உமைபோல பாடுகின்றேன்
    வா வா வா என் அன்பே வா

    .அசத்தலான வரிகள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வணக்கம் அக்கா எப்படி சுகம்?நீண்டநாளுக்கு பிறகு உங்கள் தளத்தில் சந்திக்கின்றேன்

    அழகான பாடல் மனம் உருகுது
    நான் முன்பு உங்களிடம் சொல்வது போல முயற்சிசெய்தால் நிச்சயம் நீங்கள் ஒரு பாடலாசிரியராக வரலாம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவுக்கும்
      அன்பு கலந்த பாராட்டுக்கும்..

      Delete
  7. நல்லகவிதைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா வரவுக்கும்
      வாழ்த்துக்கும் .

      Delete
  8. // நான்
    வெண்ணிலவு போல்தான் இங்கு
    உன் நினைவால் தேய்கின்றேன்!........//
    உயிரோட்டம் மிகுந்த வரிகள். அருமையாச் சொல்லிருக்கீங்க.
    மன்னிக்கவும். மீண்டு(ம்) வந்துள்ள, த்ங்கள் படைப்புகளை நீண்ட நாட்களாகக் கவனிக்கத்தவறியுள்ளேன்.

    ReplyDelete
  9. வணக்கம் உறவே..இன்று தான் தங்கள் தளத்திற்கு முதல்வருகை..சிறப்பான பாடல்.சிறந்த மேன்மையான நிலைக்கு வர சிறிய அதிசயாவின் பெரிய பாராட்டுக்கள்.தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே..!

    ReplyDelete
  10. நல்ல வரிகள் சகோதரி.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  11. ///////////////////வெள்ளிப் பனிமலை உருகுது எந்தன்
    மனமது தவிக்குது உந்தன் இரு விழி
    காண ஒரு வழி இல்லையோ!...........
    வள்ளிக் குறத்தியின் அன்புத் தலைவனே
    உந்தன் இதயத்தில் இன்று நானில்லையோ!..../////////
    அருமை..........

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........