11/23/2013

அதர்மத்தின் துணைகொண்டு தர்மத்தை அழிப்பீரோ




அதர்மத்தின் உச்சியில் நின்று
ஆணவத்தினால் மதிகெட்டு
விட்டெறியும் வார்த்தை அம்புகளுக்கு
வானவில்லும் வீழ்ந்திடுமா சொல்?

மதிகெட்டவர்கள்
மனதில் உறுதியற்றவர்கள்
கொலைக் களத்தையே விரும்பும்
கொள்ளிவாய்ப்  பேய்கள்

நீதி  அறியாதவர்கள் பிறரது
நின்மதியை விரும்பாதவர்கள்
சாதிக்க நினைப்பவை யாவும்
சர்வ நாசமாகும்!

மோதிப்பார் உலகினிலே
மோகத்தில் தழைத்தவர்கள்
பாதிப்பேர் அழியக் கண்டு
பரிகசிக்கும்  நன் மனங்களும் இன்று!

நீதிக்கே தண்டணையா!
இதை நிலவுலகம் தாங்கிடுமா!
பாதிப்பு அறியா மனமே
உன் நினைப்பு நிறைவேறாதிங்கே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12 comments:

  1. தர்மத்தின் வாது தனை சூது கவ்வும்
    தர்மம் மறுபடியும் வெல்லும்

    ReplyDelete
  2. /// நீதிக்கே தண்டணையா... ? ///

    சரியாகச் சொன்னீர்கள் அம்மா...

    ReplyDelete
  3. மிகவும் சரியான கருத்து .அருமை !!.மிக்க நன்றி சகோதரா
    வருகைக்கும் கருத்திற்கும் .

    ReplyDelete
  4. அதர்மத்தின் துணைகொண்டு தர்மத்தை அழிப்பீரோ?

    இறுதியில் தர்மமே வெல்லும். கவலை வேண்டாம்.

    ஆவேசமான ஆக்கம் அருமை. மேலும் ஊக்கம் தர நாளை மதியம் 2 மணிக்கு மேங்கோ ஜூஸ் தரப்பட உள்ளது. அதுவரை அமைதி, அமைதி. ;)

    ReplyDelete
  5. இதுவும் கடந்து போகும் அக்கா!

    ReplyDelete
  6. நீதி எங்கே வாழ்ந்தது?கண்ணகி சிலம்பிலா!
    வீழ்ந்தபின் எங்கே?ஆலயங்களிலா? ஆஷ்ராமங்களிலா?
    குற்றவாளிகள் தேர்தலில் வெற்றிபெறும் நாடு இது!
    நீதிமன்றத்தில் நீதி எங்கே?கற்பழித்த காமுகனுக்கு
    காலன் பயம் இல்லை.சப்தமின்றி சப்த ஆண்டு .ஈராண்டு /மூவாண்டு.
    விடுதலை!பத்திரப்பதிவேடு அலுவலகம் வாகன உரிமம் அலுவலகம்
    காளியின் அச்சமில்லை!நரசிம்மனின் உக்ரத்திற்கு அச்சமில்லை!
    அச்சமில்லை அநீதிக்கு!உண்மை சுடுகாடு காக்கும்.பொய்மை அரசாலும் வரலாறு. ஆண்டியாக இருந்தால் ஆண்டவன் அருள்.
    இதுதான் ஆன்மிகம்.

    ReplyDelete
  7. மனம் ---நீதியால் நிம்மதி,நிறைவு அடைகிறது.அனைத்து செல்வங்களில்
    மன நிம்மதி நிறைவு தருவது ஆன்மிகம்.லௌகீகம் உலக ஆசைகள் அடங்கியது.வரலாற்றில் நீதி எங்கே?தாங்குகிறது பூமி.நடந்ததெற்கெல்லாம் சாட்சிகள் இரண்டு ஒன்று மனம்.மற்றொன்று தெய்வம்.மனம் தரும் தண்டனையால் திருந்தினால் ஞானம். அருணகிரி பெற்றது. கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம்.அருமை.யான கருத்துக்கள். பாராட்டு.

    ReplyDelete
  8. நீதிக்கே தண்டணையா
    இதை நிலவுலகம் தாங்கிடுமா

    நிலை மாறட்டும்..!

    ReplyDelete
  9. வணக்கம்
    கவிதையில் அனல் பறக்கும் வார்த்தைகள்... அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. நீதி ஒருநாள் சூரியனைப் போல பிரகாசிக்கும் பொது இருள் விலகிவிடும்...!

    ReplyDelete
  11. நீதிக்கே தண்டனையா?

    நல்ல கேள்வி. விரைவில் நல்லது நடக்கட்டும்....

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........