கொஞ்சும் கிளியே கோல விழியே
கொண்ட துயரைப் போக்கு -எழில்
மிஞ்சும் அழகால் மீண்டும் வந்தே
மின்னல் போலே தாக்கு!
கொண்ட துயரைப் போக்கு -எழில்
மிஞ்சும் அழகால் மீண்டும் வந்தே
மின்னல் போலே தாக்கு!
கட்டிக் கொண்டால் காதல் தேடும்
காமன் பள்ளிக் கூடம் -அதை
விட்டுத் தள்ளி விரைந்து சென்றால்
வீணாய்க் கலையும் வேடம்!
காமன் பள்ளிக் கூடம் -அதை
விட்டுத் தள்ளி விரைந்து சென்றால்
வீணாய்க் கலையும் வேடம்!
உன்னை என்னை உணர்ந்தால் போதும்
உலகம் சொர்க்கம் ஆகும் -இதில்
தன்னைத் தானே வருத்திக் கொண்டால்
தானாய் உள்ளம் வேகும்!
உலகம் சொர்க்கம் ஆகும் -இதில்
தன்னைத் தானே வருத்திக் கொண்டால்
தானாய் உள்ளம் வேகும்!
அன்பே உன்றன் அழகைக் கண்டு
அடிமை ஆனேன் அன்று -அதை
முன்பே உணர முடிந்தால் ஏன்தான்
முட் டா ளானேன் இன்று!
அடிமை ஆனேன் அன்று -அதை
முன்பே உணர முடிந்தால் ஏன்தான்
முட் டா ளானேன் இன்று!
கண்ணே மணியே காலம் தோறும்
காதல் கீதம் பாடு -உன்னை
எண்ண மறந்து இருப்பே னானால்
இதயக் கதவை மூடு!
காதல் கீதம் பாடு -உன்னை
எண்ண மறந்து இருப்பே னானால்
இதயக் கதவை மூடு!
பஞ்சும் நெருப்பும் பக்கம் வந்து
பற்றிக் கொண்டால் போதும் -உயிர்
தஞ்சம் உன்றன் நெஞ்சம் என்று
தானே இங்கு ஓதும்!
பற்றிக் கொண்டால் போதும் -உயிர்
தஞ்சம் உன்றன் நெஞ்சம் என்று
தானே இங்கு ஓதும்!
அழகான கவிதை. நன்றி.
ReplyDeleteவணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.
ReplyDeleteநலமா? வெகு நாட்களுக்கு பிறகு அழகான காதல் பாட்டு.
நன்றாக இருக்கிறது.
கண்ணே மணியே காலம் தோறும்
ReplyDeleteகாதல் கீதம் பாடு -உன்னை
எண்ண மறந்து இருப்பே னானால்
இதயக் கதவை மூடு!..
அருமை.. அழகு!..
அருமை! பாராட்டுக்கள்!
ReplyDeleteஅருமை. பாராட்டுகள்.
ReplyDeleteஅருமை அம்மா...
ReplyDeleteகவிதை அருமை!நலமா!?
ReplyDeleteவணக்கம் அன்பு உள்ளங்களே!
ReplyDeleteவருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!
#அழகைக் கண்டு அடிமை ஆனேன் அன்று#முட்டாளானேன் இன்று!#
ReplyDeleteகாதல் படுத்தும் பாடு அருமை :)