9/17/2013

செத்தும் சிவனடி சேராதார்



அற்ப மாயை உலகினில் பிறந்து 
அன்பைத் தவிர அனைத்தையும் உணர்ந்து  
சர்ப்பம் போல வயிறு வளத்தோர்
சாவிலும் நின்மதி அடைந்தது இல்லை !!...

முற்றும் துறந்த முனிவர்கள் எங்கே
முரண்பட வாழ்ந்த மனிதர்கள் எங்கே
கற்றும் நன்நெறி  தழுவிட மறந்தோர்
கயமை உணர்வினில் தான் திறன்பட நின்றார் ...

வற்றிக் கிடக்கும் வயிற்றைப் பார்த்ததும்
வளைந்து நெளிந்த பாதையை நோக்கும்
அற்பப் பிறவிகள் உயர்வதைக் கண்டு
அகம் அது இறைவனை வெறுப்பதும் நன்றோ ...!!!!

முன்வினைப் பயனதை மூட்டியே செல்லும் தன்
வினைப் பயனதை அறுப்பவன் இறைவன்...........
எவ்விதை இங்கே விதைத்து நின்றாயோ 
அவ்விதை அறுத்திட மறு பிறப்பது தோன்றும் !!

செய்வினை சூனியம் செய்திடத் துடிக்கும்
உன் மன வலிமை உறங்கிடும் பொழுதில்
தன்வினைப் பயனதை உணர்த்தி நிர்ப்பானே
சங்கரன் திருவடி தான் 
அசைந்திடும் சக்கரம் இப்புவி காண் .....!!!!!!


                                                                               
ஓம் நமசிவாய... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

13 comments:

  1. வணக்கம்

    செய்வினை சூனியம் செய்திடத் துடிக்கும்
    உன் மன வலிமை உறங்கிடும் பொழுதில்
    தன்வினைப் பயனதை உணர்த்தி நிர்ப்பானே

    அருமையான கருத்துள்ள வரிகள் பதிவு அருமை மேலும் பல படைப்புக்கள் மலர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் !

      Delete
  2. அம்பாளடியாள் உங்க கைகளை கண்களில் ஒற்றிக்கொள்கிறேன்பா.. ப்ரதோஷம் இன்று.. பொருத்தமான கவிதை.. சிவனுக்கான பாமாலை ஆஹா ஆஹா எத்தனை அற்புதம்...

    சிவனுக்கு அழிக்கும் சக்தி இருக்கிறது. அதே சமயத்தில் வேண்டிடும் வரங்கள் நியாயமாக இருந்தால் அதை நிறைவேற்றிடும் சக்தியும் கொண்டவர்.. ருத்ரம் நிறைந்தவர்...
    கோபக்கண்களால் நக்கீரனை சாம்பலாக்கியவர்...

    அற்ப மானிடப்பிறவியாய் சிற்றின்ப சுகத்தில் தன்னை கரைத்துவிடாமல் வினைப்பயன் வழியே வாழ்ந்து விடாமல்.... இறைவனையே சதா நினைத்து அவனடி போற்றி வணங்குவோம் என்றுரைத்த அருமையான பாடல் வரிகள் அம்பாளடியாள்....

    ReplyDelete
  3. உயித் தோழி என் உணர்வினில்
    பொங்கிக் களித்தாயே
    நற் கருத்தென்னும் செந்தேனை !
    மனம் மகிழ்ந்தேன்
    இறைநாமம் சொல்லும் கரத்தால்
    இட்ட கருத்தினைக் கண்டு .
    இறைவனது சித்தம் மனிதனது வாழ்வு என்றே
    வாழும் மனத்தாலே வாழ்த்துகின்றேன்
    வாழ்க பல்லாண்டு உன்றன்
    மனம் போல் என்றென்றும் .............

    ReplyDelete
  4. 'செத்தும் சிவனடி சேராதார்' தலைசிறந்த தலைப்பு ;)
    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    //ப்ரதோஷம் இன்று.. பொருத்தமான கவிதை.. சிவனுக்கான பாமாலை ஆஹா ஆஹா எத்தனை அற்புதம்...//

    மஞ்சூஊஊஊஊ!

    நினைவூட்டலுக்கு மிக்க நன்றிம்மா ;) - கோபு அண்ணா

    ReplyDelete
  5. முற்றும் துறந்த முனிவர்கள் எங்கே?..
    முரண்பட வாழ்ந்த மனிதர்கள் எங்கே?..

    பட்டை தீட்டப்பட்ட வைர வரிகள்!.. மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!..

    ReplyDelete
  6. என்ன ஒரே பக்திமயமா இருக்கே..

    ReplyDelete
  7. ////////
    முன்வினைப் பயனதை மூட்டியே செல்லும் தன்
    வினைப் பயனதை அறுப்பவன் இறைவன்...........
    ///////////

    வாழ்க்கையின் நியதி

    ReplyDelete
  8. எல்லோராலும் சிவனடி சேர்ந்திட முடியுமோ?:) அது என்னைப்போன்ற ஒரு சிலரால் மட்டுமே முடியும்:) ஹையோ ஏன் கலைக்கிறீங்க.. இல்ல இல்ல சொல்லிடுறேன்ன்.. அழகிய கற்பனையில் அழகான ஒரு கவிதை.

    ReplyDelete
  9. பிரதோஷத்தன்று
    முக்கண்ணன் பற்றிய முழு உணர்வு
    மெய் சிலிர்க்க வைத்தது. '


    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  10. எவ்விதை இங்கே விதைத்து நின்றாயோ
    அவ்விதை அறுத்திட மறு பிறப்பது தோன்றும் !!

    பிறவாமை தேடி
    பெரும்பேறை நாடி
    அறத்தின் பால் வாழ்தல்
    அவனடியில் சேர்க்கும்,,!

    அருமை அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அன்பைத் தவிர அனைத்தையும் உணர்ந்தோருக்கு ஏது நிம்மதி?

    ReplyDelete
  12. கற்றும் நன்நெறி தழுவிட மறந்தோர்
    கயமை உணர்வினில் தான் திறன்பட நின்றார் ...

    அருமை அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........