8/09/2015

மும்மண்டில வெண்பா !

                                                 
நான் ஏன் வந்தேன் !

மண்ணில்நான் ஏன்வந்தேன் கண்ணேநீ  பார்என்றேன்
வண்டமிழாள் தேன்தந்தாள் எண்ணமெல்லாம் !-வண்ணமய
மீன்நீந்தக்   கண்டிடுவாய் வான்மயங்கும் பண்ணொளியில்
தேன்சுவையுள் பெண்ணழகு மான் !

ஏன்வந்தேன்   கண்ணேநீ  பார்என்றேன் வண்டமிழாள்
தேன்தந்தாள் எண்ணமெல்லாம் வண்ணமய !-மீன்நீந்தக் 
கண்டிடுவாய் வான்மயங்கும் பண்ணொளியில் தேன்சுவையுள்
பெண்ணழகு மான்மண்ணில் நான் !

கண்ணேநீ பார்என்றேன் வண்டமிழாள் தேன்தந்தாள்
எண்ணமெல்லாம் வண்ணமய மீன்நீந்தக்  !-கண்டிடுவாய்
வான்மயங்கும் பண்ணொளியில் தேன்சுவையுள் பெண்ணழகு
மான்மண்ணில் நான்!ஏன்வந் தேன் !



இலக்கண விளக்கம்

மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம்     சீர்களை 
முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!

இந்த வெண்பாவினை முறைப்படி கற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும் !

http://bharathidasanfrance.blogspot.ch/2015/08/blog-post.html
                                                     

                                           

                                                    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

28 comments:

  1. வெண்பா இலக்கணத்துடன் அருமை அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா !

      Delete
  2. அருமையான பாடல். படமும் அழகு.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  3. சகோதரி வாசித்ததுமே புரிந்து விட்டது மும்மண்டில வெண்பா...விளக்கம் அருமை. சுட்டியைச் சொடுக்கி கற்றுக் கொள்கின்றோம்.

    பா அருமையாக இருக்கின்றது. எப்படி இப்படி எல்லாம் அழகாக சுவையான தமிழில் எழுதிக் கலக்குகின்றீர்கள் சகோதரி! வியந்து ரசிக்கின்றோம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரா !
      தங்களின் இந்தப் பாராட்டைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இருப்பினும் இந்தப் பெருமை எல்லாம் என்னுடைய ஆசான் கி .பாரதிதான்
      ஐயாவையே சேரும் !மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  4. தளம் திறந்து விடுகின்றது டிடி.. ஓட்டுப் பெட்டியைத்தான் காணவில்லை....

    ReplyDelete
  5. வணக்கம் தோழி!

    முயற்சியைக் காட்டும்மும் மண்டில வெண்பா!
    உயற்சியாய் உள்ள(து) ஒளிர்ந்து!

    மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      இனியன கூறியே இன்பத்தை ஊட்டும்
      கனியது உன்றன் கருத்து !

      மிக்க நன்றி தோழி !

      Delete
  6. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் !

      Delete
  7. அண்மையில் இப்பதிவு வந்து நானும் ஒஉ பின்னூட்டமிட்டதும் பதிவு திடீரென்று காணாமல் போனதும் என் பின்னூட்டமும் காக்கா ஊச்....?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      மன்னிக்க வேண்டும் ஐயா வெண்பாவில் தவறு இருந்ததால் அதனை மீண்டும் சரி செய்து வெளியிட்டபோது தங்களின் கருத்தும் விடுபட்டு விட்டது !

      Delete
  8. வணக்கம் கவிஞரே!

    அதற்குள் அடுத்த மும்மண்டிலம்.

    வியக்க வைக்கிறீர்கள்.

    வாழ்த்துகள்! வாழ்த்துகள்!


    மும்மண் நிலமெங்கும் அம்பா ளடியார்சீர்
    எம்மில் இலதாகச் செம்மொழியே – வெம்பி
    நடுநடுங்கி உம்‘தாள் உருகிவிழ நீவா
    கிடுகிடென எம்கைச் சிறகு

    நிலமெங்கும் அம்பா ளடியார்சீர் எம்மில்
    இலதாகச் செம்மொழியே வெம்பி – நடுநடுங்கி
    உம்‘தாள் உருகிவிழ நீவா கிடுகிடென
    எம்கைச் சிறகுமும் மண்!

    ( எம் கைச் சிறகும் உம் மண் )

    அம்பா ளடியார்சீர் எம்மில் இலதாகச்
    செம்மொழியே வெம்பி நடுநடுங்கி – உம்தாள்
    உருகிவிழ நீவா கிடுகிடென எம்கைச்
    சிறகுமும் மண்நிலமெங் கும்!

    ( எம் கைச் சிறகு உம்மண் நிலமெங்கும்)


    இன்னும் எனக்கான பரிசு வரவில்லை.

    எம்மும்மண்டிலத்தில் ஏதும் பிழையிருந்தால் பழைய பாக்கியில் குறைத்துக் கொள்ளலாம்.:))

    த ம 1

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ !

      தங்கத்தை அன்பளிப்பாய்த் தந்திடத்தான் ஆசையுண்டு
      வங்ககடல் தாண்டி வருவதார்? !எங்கும்
      துலங்கட்டும் உன்பாடல்!தூயதமிழ் வாழ்த்த
      உலகத்தில் ஒங்கப் புகழ்!

      எழுதுங்கள் எழுதுங்கள் கண்ணை மூடித் திறப்பதற்குள்
      எல்லா வகையான வெண்பாவினையும் பொழியும்
      வானத்துக்குப் பரிசு கொடுப்பதற்கு யாரால் முடியும் ?.:)
      (அம்பாளடியாள் என்னும் மீன் மெல்ல நழுவிச் சென்று விட்டது :) )

      Delete
    2. தங்கத்தை அன்பளிப்பாய்த் தந்திடத்தான் ஆசையுண்டு
      வங்ககடல் தாண்டி வருவதார்? !-எங்கும்
      துலங்கட்டும் உன்பாடல்!தூயதமிழ் வாழ்த்தும்
      உலகத்தில் ஒங்கப் புகழ்!

      Delete
  9. அருமை தோழி..நான் எழுத ஆரம்பித்து அப்படியே வைத்திருக்கிறேன். உங்கள் அளவு எளிதாக வரமாட்டேன்கிறது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      வரும் வரும் முயற்சியுங்கள் வெற்றி நிட்சயம் கிட்டும் அதற்காக
      தங்களிற்கு என் வாழ்த்துக்கள் தோழி !

      Delete
  10. அருமை சகோ வாழ்த்துகள் தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா .

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. மிக்க நன்றி சகோதரா !

    ReplyDelete
  13. நீர்முகம் காட்டுமும் மண்டல வெண்பாவில்
    சீர்மொழி காண சிறப்பு !

    அருமை வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies

    1. வணக்கம் !
      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !

      Delete
  14. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. வணக்கம் தோழி!
    மன்னிக்கவும் தாமத வருகைக்கு.
    அழகான மும்மண்டில வெண்பா தங்களுக்கும் வசமானதில் மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
    வெண்பா கொத்தும் எழுதியிருப்பீர்களே?

    ReplyDelete
  17. முமண்டில வெண்பா அருமை அம்மா...
    படமும் அழகு.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........