8/20/2015

பதினான்கு மண்டிலம் !

                                         
                                                 என்னுயிரே! பொன்மனமே!

(1)
என்னுயிரே! பொன்மனமே! இன்னருள்செய் இன்றெனக்கு
உன்னருளால் நன்மைபல நின்றொளிரும்!-என்னகத்தின்
இன்னலும்போம்  அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்
இன்பமயம்  மின்னிடும்   இன்று !

(2)
பொன்மனமே !இன்னருள்செய் இன்றெனக்(கு) உன்னருளால்
நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின்  !-இன்னலும்போம்
அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்
மின்னிடும்இன்(று) என்னுயி ரே!

(3)
இன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல
நின்றொளிரும் என்னகத்தின்  இன்னலும்போம்  !-அன்னையுன்றன்
புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்  மின்னிடும்இன்(று)
என்னுயிரே! பொன்மன மே!

(4)
இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல நின்றொளிரும்!
என்னகத்தின்  இன்னலும்போம்!  அன்னையுன்றன்  !-புன்முறுவல்
ஒன்றதனால்  இன்பமயம்  மின்னிடும்இன்(று) ! என்னுயிரே !
பொன்மனமே  இன்னருள் செய் !

(5)
உன்னருளால் நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின்
இன்னலும்போம்!  அன்னையுன்றன்  புன்முறுவல் !-ஒன்றதனால்
இன்பமயம்  மின்னிடும்இன்(று)! என்னுயிரே பொன்மனமே !
இன்னருள்செய் இன்றெனக் கு !

(6)
நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின்  இன்னலும்போம் !
அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்  !-இன்பமயம்
மின்னிடும்இன்(று) !என்னுயிரே! பொன்மனமே !இன்னருள்செய்
இன்றெனக்கு உன்னரு ளால் !

(7)
நின்றொளிரும் என்னகத்தின் இன்னலும்போம்!  அன்னையுன்றன்
புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்  !- மின்னிடும்இன்(று)!
என்னுயிரே பொன்மனமே இன்னருள்செய் இன்றெனக்கு
உன்னருளால் நன்மை பல !

(8)
என்னகத்தின் இன்னலும்போம்!  அன்னையுன்றன்  புன்முறுவல்
ஒன்றதனால்  இன்பமயம்  மின்னிடும்இன்(று) !-என்னுயிரே !
பொன்மனமே !இன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால்
நன்மைபல நின்றொளி ரும் !

(9)
இன்னலும்போம் !  அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்
இன்பமயம்  மின்னிடும்இன்(று)  என்னுயிரே !-பொன்மனமே !
இன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல
நின்றொளிரும் என்னகத் தில் !

(10)
அன்னையுன்றன்  புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்
மின்னிடும்இன்(று)! என்னுயிரே !பொன்மனமே !-இன்னருள்செய்
இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல நின்றொளிரும் !
என்னகத்தின்  இன்னலும் போம்  !

(11)
புன்முறுவல் ஒன்றதனால்  இன்பமயம்  மின்னிடும்இன்(று)
என்னுயிரே! பொன்மனமே! இன்னருள்செய்!- இன்றெனக்கு
உன்னருளால் நன்மைபல நின்றொளிரும்! என்னகத்தின்
இன்னலும்போம்  அன்னையுன் றன்  !

(12)
ஒன்றதனால் இன்பமயம்  மின்னிடும்இன்(று) என்னுயிரே !
பொன்மனமே இன்னருள்செய் இன்றெனக்கு!-உன்னருளால்
நன்மைபல நின்றொளிரும் என்னகத்தின் இன்னலும்போம்
அன்னையுன்றன்  புன்முறு வல் !

(13)
இன்பமயம்  மின்னிடும்இன்(று) என்னுயிரே பொன்மனமே
இன்னருள்செய் இன்றெனக்கு உன்னருளால்!- நன்மைபல
நின்றொளிரும் என்னகத்தின் இன்னலும்போம் அன்னையுன்றன்
புன்முறுவல் ஒன்றைத னால் !

(14)
மின்னிடும்இன்(று)  என்னுயிரே பொன்மனமே இன்னருள்செய்
இன்றெனக்கு உன்னருளால் நன்மைபல !-நின்றொளிரும்!
என்னகத்தின்  இன்னலும்போம் அன்னையுன்றன்  !புன்முறுவல்
ஒன்றைதனால் இன்பம யம் !


இலக்கணக் குறிப்பு

பதினான்கு மண்டிலம் என்பது  முதல் வெண்பாவின் முதல் சீர், இரண்டாம் வெண்பாவில் இறுதியாக வரும். இரண்டாம் சீர் முதல் சீராக வரும். இப்படியாகப் பதினான்குச் சீர்களும் முதல் சீராக வந்தமையப் பாடுவது. முதல் வெண்பாவில் உள்ள சீர்களைப் போன்றே, எழுத்துகளும் அனைத்து வெண்பாவில் வரவேண்டும். வல்லினம் மிகும் சொற்கள் இம்மண்டிலத்தில் வாரா!
http://bharathidasanfrance.blogspot.ch/2015/08/normal-0-21-false-false-false.html

                                                                    

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

13 comments:

  1. பதினான்கு மண்டிலமா?
    ஆத்தி! ஆச்சரியம் ஆனந்தம்.
    என்ன சொல்லி பாராட்ட சொற்கள் தேடுகிறேன்.
    வாழ்த்துகள் வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
  2. அருமை அருமை சகோதரி
    அன்னையின் அன்பிற்க்கு அடைக்கலமானோம். மிக்க நன்றி

    ReplyDelete
  3. பதினான்கு மண்டிலம் பற்றி அறிந்தோம். நன்றி.

    ReplyDelete
  4. யம்மாடியோவ்,,,,இப்படி நீங்க, சகோ விஜு எல்லோரும் கலந்து கட்டி பயமுறுத்துகின்றீர்களே! அஹஹஹ்ஹ் இல்லை இல்லை எங்களையும் எழுதத் தூண்டுகின்றீர்கள். ஆனால் என்ன எழுததான் வருவதில்லை....புரிந்தாலும்...

    அருமை அருமை சகோதரி! வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. வணக்கம் சகோ ரசித்தேன் தமிழ் மணம் 4

    ReplyDelete
  6. பதினான்கிலுமா என்னால் முடியாது அக்காச்சி! அருமையான வெண்பா கவியாளுமை அருமை.

    ReplyDelete
  7. வணக்கம் தோழி!

    பதினான்கு மண்டலம் பாக்கவே பக்திப் பரவசமாயுள்ளது!
    மிக அருமை! தங்களின் முயற்சி நிறைவைத் தந்துள்ளது!

    உளமார்ந்த வாழ்த்துக்கள் தோழி!

    த ம 6

    இப்பவெல்லாம் ஏன் நீங்கள் இளையநிலாப் பக்கம் வருவதில்லை?
    மூத்த கவிஞர் நீங்கள்! எங்கள் கவிதைகளையும் பார்த்துக் கருத்திட்டால் மகிழ்வாக இருக்குமே!
    வாருங்கள்!.. மிக்க நன்றி தோழி!

    ReplyDelete

  8. வணக்கம்!

    பொதினா சுவையாகப் பூந்தமிழ் ஏந்திப்
    பதினான்கு மாண்டிலம் பாடிப் - பதிவிட்டாய்!
    கண்டு மகிழ்ந்தேன்! கனிமரத் தோப்பாக
    உண்டு மகிழ்ந்தேன் உவந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  9. ஆஹா.... அருமை...
    வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  10. ஆஹா! மூன்றே இன்னும் எழுதவில்லை நான். மிக அருமை தோழி
    வாழ்த்துகள்!
    த.ம.9

    ReplyDelete
  11. உங்கள் முயற்சி ,மூக்கின் மேல் கை வைக்க வைத்து விட்டது:)

    ReplyDelete
  12. அருமையான பா மற்றும் குறிப்பு

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  13. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........