8/30/2015

ஈடு இணையற்ற நட்பேதான் வாடும் மனதிற்கும் வாழ்வு !



 
நட்போடு சேர்ந்திங்கு நாள்நகரும் போதுதான்
உட்பகையும் தன்னாலே ஓடிவிடும்  !-எட்டி
உதைத்தாலும் மன்னித்து உதவிடுக ! வாழ்வில்
இதைஏற்று வாழ்வீர் இனி !
                                                          
பட்டமரம் இன்பத்தைப் பாரினிலே கண்டதில்லை !
எட்டிநின்றால் வாழ்நாளும் எட்டிபோம் !நட்பும்
இருந்தால்தான் இன்பமிங்கே  !இல்லையெனில் என்றும்
மருந்தேதான் வாழ்வை மற!

கெட்டகுடி என்றெவரும் கேலிசெய்து போனாலும்
நட்பேதான்  வந்துதவும் நாட்டமுடன் !-சட்டம்
பலபேசி வாழ்நாளைப் பாழடிப்போர் முன்னால்
உலகத்தில் நட்பை உணர்த்து !

நட்புக்கு மிஞ்சியதோர் நல்லுறவு ஏதுமில்லை !
திட்டித்தான் தீர்த்தாலும் தேனென்பார் !-குட்டிக்
கதைபேசி வாழ்வெல்லாம் காத்துநிற்கும்  நட்பைச்
சிதைத்துப்பார்! உண்டோ சிறப்பு ?                                         

கண்ணாரக் காணாத கட்டுக்க தைக்கஞ்சி
எண்ணாத்தீர்  தப்பாக  எந்நாளும் !-மண்ணில்
பிணமாக நாம்வாழ்ந்தால்   பின்வம்சம் தோற்கும்!
இணைப்பீரே  நட்பை இனி !

பூக்கின்ற பூக்களெல்லாம் பூமிக்குத் தாமழகு !
வாக்களிப்போம் நட்பின்றி வாழ்வில்லை !-நோக்கும்
இடமெல்லாம் நட்பிருந்தால் ஈடேது !வாழ்க்கைத்
தடமெல்லாம் ஓங்கும் தழைத்து !
                                                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12 comments:

  1. அருமை.. நட்பைக் குறித்த முத்துக் கவிதைகள்..

    வாழ்க நட்பு!..

    ReplyDelete
  2. நட்புக்கு இணை எதுவுமில்லை. அதனை அனுபவித்தவர்கள் நன்கு உணர்வர். நான் அதிகம் உணர்ந்துள்ளேன். நன்றி.

    ReplyDelete
  3. ஆம் சகோதரி! உண்மையான அன்புடனும், தோழமையுடனும் ஆன நட்பு என்பது நட்பூ தான்! அதுவும் வாடா நட்பூ!!! அதைப் போன்ற ஒரு உன்னதமான உறவு வேறுண்டோ?!

    //நோக்கும்
    இடமெல்லாம் நட்பிருந்தால் ஈடேது !வாழ்க்கைத்
    தடமெல்லாம் ஓங்கும் தழைத்து !//

    உண்மை! உண்மை! சகோதரி! நட்பின் பெருமையைச் சொல்லும் அருமையான வரிகள்!

    ReplyDelete
  4. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. நட்புக்கு மரியாதை. அருமை.

    ReplyDelete
  6. #வாக்களிப்போம் நட்பின்றி வாழ்வில்லை #
    உங்கள் கருத்தே என் கருத்தும் ,இதோ,த ம . வாக்களித்துவிட்டேன் :)

    ReplyDelete
  7. அழகானவரிகள் கவிதை ரசித்தேன்.பட்டமரம் !!!

    ReplyDelete
  8. நட்பின் பெருமைகளை அனுபவித்து எழுதிய வெண்பாக்கள்!
    மிக அருமை! வாழ்த்துக்கள் தோழி!

    த ம +1

    ReplyDelete
  9. நோக்கும்
    இடமெல்லாம் நட்பிருந்தால் ஈடேது !வாழ்க்கைத்
    தடமெல்லாம் ஓங்கும் தழைத்து !

    உண்மை அருமை
    ந்ன்றி சகோதரியாரே
    தம 8

    ReplyDelete
  10. நட்பை எண்ணி வடித்த கவி அழகு நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  11. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. ;நட்பின் உயர்வை நயம் பட உரைத்தாய் மகளே!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........