10/09/2015

சிட்டாகப் பறந்துவாடி செல்லக் கண்ணே!

                                       

சிட்டாகப் பறந்துவாடி செல்லக் கண்ணே
.......சிங்கார உடைஉடுத்தி புதுகை  நோக்கி !
எட்டாத கனியென்று எண்ண வேண்டாம் !
......இனியதமிழ் காணட்டும்  உலகின் எல்லை !
பட்டிதொட்டி எங்கும்பார் பதிவர் பேச்சு !
......படைதிரட்டி நாமுமங்கே போனா போச்சு !
திட்டமிட்ட செயற்புரிந்து  மகிழ்ச்சி கொள்வோம்
......தித்திக்கும் உணர்வுகளைப்  பகிர்ந்து கொள்வோம் !

மங்காத நினைவாகும்!  மலர்கள் ஆடும்
.......மானாட்டம் மயிலாட்டம் காண வாடி!
தங்கத்தான் இடமுண்டு !உணவும் உண்டு !
.......தரமான நிகழ்ச்சிகளும் அங்கே  உண்டாம் !
எங்குமுள்ள உறவுகளை இணைக்கும் இந்த
......இனியவிழாக்  காணவாடி என்றன் தோழி !
பொங்குதமிழ் மாமறவர்  கூடும் இந்தப்
.......பொன்னான தருணம்போல் வேறு உண்டோ !

இத்தனைநாள் காத்திருந்தோம் எதற்கு இங்கே !
.......இனியதமிழ்  உறவுகளைக் காண வாடி !
பத்திரமாய்க்  காத்திடுவர் பதிவர் நம்மின்
.......பக்கபல மாயிருப்பர் உறவைப் போல !
இத்தரையில் எவருமில்லை என்ற எண்ணம்
.......எள்ளளவும் இனிவேண்டாம் இன்பம் பொங்க
அத்தனைபேர் மனங்களிலும் வாழும் எம்மை
......அரவணைப்பர்  அகம்மகிழ்வர் ஓடி வாடி !என் அருமை வலைத்தள உறவுகளே அனைவருக்கும் வாழ்த்துக்கள் விழாவில் பங்கேற்று அகம் மகிழ வேண்டும் !ஒப்பற்ற இவ்விழா சிறக்க
உழைக்கும் கரங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ! 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

18 comments:

 1. எங்குமுள்ள உறவுகளை இணைக்கும் இந்த
  இனியவிழாக் காணவாடி என்றன் தோழி!..
  பொங்குதமிழ் மாமறவர் கூடும் இந்தப்
  பொன்னான தருணம்போல் வேறு உண்டோ!..

  அருமை.. அருமை!..

  விழா சிறக்க நல்வாழ்த்துகள்..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
 2. முத்தான கவிதை! முக்கனியின் இனிமை!

  ReplyDelete
 3. அருமையான கவிதை சகோ வாழ்த்துகள் இதோ புறப்பட்டு விட்டேன்
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்
   அம்மா
   அற்புதமான கவிதை தந்தமைக்கு வாழ்த்துக்கள்... த.ம 4
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   Delete
 4. அருமை!.. அருமை!

  அழகான விருத்தத்தில் விருந்தே வைத்தீர்கள் தோழி!
  அழைப்பு மிகவும் சிறப்பு!

  புறப்பட்டுவிட்டீர்களா?.. இருங்கள் இதோ நானும் வருகிறேன் கூட..:)

  வாழ்த்துவோம்!.. வாழ்துகிறோம்!

  ReplyDelete
 5. சிறப்பான கவிதை.

  விழா சிறக்க நானும் இங்கிருந்தே வாழ்த்துகின்றேன்....

  ReplyDelete
 6. அருமை
  விழா சிறக்க உழைக்கும் கரங்களைப் போற்றுவோம்
  தம +1

  ReplyDelete
 7. வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 8. இதோ ,விடிந்ததும் புறப் படுகிறேன் ,கில்லர் ஜி யும் வருகிறாரா :)

  ReplyDelete
 9. நம் தலைவர் உழைப்பை நாம் பாராட்ட விட்டால் எப்படி? அன்பு கூருந்து வரும் சில வரிகளை அனுமதியுதங்கள். நன்றி!

  முத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!

  புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.

  முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!

  ReplyDelete
 10. வரவேற்புக் கவிதைக்கு வாழ்த்துக்கள். புதுக்கோட்டையில் சங்கமிப்போம்.

  ReplyDelete
 11. அருமையாக உள்ளது விருத்தமும் வரவேற்பும். அட இதோ வந்து விட்டதே இன்னும் சில மணித்தியாலங்கள் தான் ம்...ம் நாம தான் அங்க இல்ல ........இல்லையா தோழி . நன்றி வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் தோழி !அடுத்தவருடம் இதே வைபவத்தில் நாமும் இருப்போம் என்று நம்பிக்கை கொள்வோம் :)

   Delete
 12. வணக்கம் !
  அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ! நன்றி அன்பு உள்ளங்களே !

  ReplyDelete

 13. வணக்கம்!

  புதுக்கோட்டை இன்று பொழியும் தமிழால்
  மதுக்கோட்டை ஆகும் மகிழ்ந்து! - புதுமை
  வலைப்பதிவர் தம்மை வரவேற்கும் பாடல்
  கலைக்கதிரைக் காட்டும் கமழ்ந்து!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
 14. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 15. நலம்தானே தோழி? காணவில்லையே?

  உங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன். :)
  http://thaenmaduratamil.blogspot.com/2015/11/kadavulai-kanden-blogpost-chain.html

  ReplyDelete
 16. ஆழ் மன தமிழ்பற்றால் வந்த அருமையான கவிதை.

  தாமதமாக படிக்க வேண்டியதாயிற்று .
  வலைத்தொடர்பு சிக்கல்.விரைவுத் தொடர்பில் தடை.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........