5/31/2011

தீராத சுமை.....

கதிர் அறுக்கக் குனிந்த தலை
கை அறுத்து நின்றதடா!!!.........
சிந்திய இரத்தத் துளிகளினால்
சிவந்த மண்ணும் அழுததடா!....

களை எடுக்கும் கமக்காரன்
களங்கம் அற்ற உழைப்பாளி-அவன்  
நினைப்பு எங்கே போனதென்று
எமக்குமட்டும்தான்  தெரியும்.....//

சொல்ல வழி இல்லையடா....
எம் சொந்தங்களின் வலியதனை
அன்னை என நினைத்த பூமி
நல் அறுவடையைத் தந்த பூமி 

எம் வம்சமதை வளர்த்த பூமி 
வறுமை  நிலை துடைத்த பூமி 
நல் உறவுதனை துலைத்து விட்டு
உருக்குலைந்து நிற்பதனை

நெஞ்சமதில் நினைத்துவிட்டால்
இந்த நினைப்பு எங்கே போகுமடா...
கணக்கற்ற உயிர்ப்பலிகள் இங்கே
கருணையற்று நிகழ்ந்தபின்னால்  

எமக்கென ஒரு வாழ்வு அது இன்றும்                                                           இருட்டிநிலேதான் இருக்கு.....
இந்தக் கவலைமட்டும் இல்லையென்றால்
(காணும் )கண்களுக்கு ஏது தொல்லை.......//  


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/28/2011

காத்திருந்த விழிகள்....

முற்றத்து வெண்ணிலவே எம்மை
முதுகில்ச் சுமந்தவள் எங்கே?.......
பத்துமாதம் சுமந்தவள்
பாதியிலே உயிர்துறந்தாள்......

எம் மொத்த உறவுகளையும்
தன் முதுகின்மேல் சுமந்தவள் அன்று
முள் வேலிக்குள் அகப்பட்டாள்
இன்றும் கத்திக் கத்தியே எம்
காலங்களும் வீணானதே!!!............

கலங்குகின்றோம் வருந்துகின்றோம்..
கண்ணீரில் தினம் குளித்தும்  
தணியாத உயர் வெப்பத்தால் இதயம் 
கருகியே உருகிடும் இந்நிலை மாறுமோ...

கிட்டிப்புல்லு விளையாடும்போது 
எட்டி எட்டி அளந்த கரம் உன்னை 
விட்டுப் பிரிந்த நாள்முதலாய் 
தொட்டுத் தழுவத் துடிக்கிறதே.....//

ஏக்கம் கொண்ட நெஞ்சத்தில் 
தூக்கம் கெட்டுப் போனதே...
மாற்றமின்றி எம் வாழ்க்கை
மயாணம் நோக்கிச் செல்வதா!...

பட்டி தொட்டி எங்கேயும் நாம் 
பாடித்திரிந்த காலங்கள்
நித்தம் மனதை வாட்டுதே
நீதி செத்துப் போனதே!!!!......... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/20/2011

கண்ணுக்குள் உலாவும் நிலா !......

                                                    
வைரங்கள் பதித்த இருவிழி
இவர் வார்த்தைகள் என்றும் தனிவழி  
கவியன்னை கொடுத்த தலைவன் நீ 
என் கண்ணுக்குள் உலாவும் கருநிலவும் நீ 

உலகத்தைப் பார்க்கிறேன் உன்னாலே 
நல் உணர்ச்சியைத் தூண்டிடும் கண்ணாலே 
வலைகள் நான் விரிக்கிறேன் வார்த்தைக்காய் 
வந்துதான் வீழ்ந்ததே விண் மீன்களாய்!............

மனமெனும் தொட்டியில் சிந்தனை ஊற்றெடுக்க
மடமட   மடவெனக்  குஞ்சுகள்தான் பொரிகக் 
கவிதையாய்க் கொட்டினேன் என்வார்த்தைகளைக்
கண்டாயோ கவியரசே உன்  அருமை !!!!!!...............

எம் செவிகளில் இன்பக் கவியுரைத்தாய்
சினந்திடும் நெஞ்சையும் மகிழவைத்தாய்
தினமும் உன்  நினைவினில் அலையவிட்டாய்
தித்திக்கும் வார்த்தைகளால் முத்தமிட்டாய் .......

ஒளியெனப்   பட்டுத் தெறித்தது பலகவிதை
அதை உணர்த்திட வார்த்தைகள் போதவில்லை 
பல தலைமுறை காத்த எம் மொழியதனைத்
தாங்கியே நிற்கும் ஆலமரம் உனைத் தழுவியே  
விழுதென நாமும் தளைத்தோங்க வாழ்த்திடு 
உந்தன் தலைமுறை என்றும் வாழ்ந்திடவே..... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/16/2011

பேச்சு.....

நெஞ்சம் எனும் சிலகூவத்திலே
நிழல்ப் படமாய்க் கிடக்கும் வார்த்தை
தஞ்சமென வந்து குடியேறும் நாக்கினிலே 
தன்னடக்கம் இல்லையென்றால்க்
கொல்லும் அந்த  வார்த்தை ஜாலம்
சொல்லும் விதம் கேட்கையிலே
பொல்லால் அடித்தாலும் உயிர்
பிழைத்துவிடும் ஆங்கே இவர் 
சொல்லால் அடித்தால் மாண்டிடுவார்!...
அன்பான வார்த்தை பேசி 
ஐந்தறிவு ஜீவனையும் 
தன்வசப்படுத்தும் நாக்கு இதன் 
பண்புநிலை தவறிவிட்டால் 
பாரினில் இவர்க்கு ஏது செல்வாக்கு....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/13/2011

நான் கண்ட கனவு...

தங்கத் தேர் அசைந்து வர
தரை எங்கும் மக்கள் வெள்ளம் 
தேவர்கள் மலர் தூவ அங்கெ 
நீதி தேவதை மனம் மகிழ 

சுதந்திரப் பறவைகள் எங்கும் 
சுயமாய்ப் பறந்திடவே 
உலகெங்கும் வேட்டுச் சத்தம் 
உன்னதமான பாட்டுச் சத்தம் 

ஒளிவெள்ளம் பொங்கக் கண்டு 
உள்ளத்தில் இன்பம் பொங்க 
இருவிழி திறந்து பார்த்தேன் 
இது கனவு என்றுணர்ந்தேன்!..  

பொய்யென மறுத்து மீண்டும்
போர்வைக்குள் நுழைந்தேன்
அந்த இன்பத்தைப் பெறவே
நான் ஏக்கத்தை   வரவழைத்தேன்..

ஆகா தூக்கத்தில் வந்த கனவே
துயர் போக்க இந்த உலகெங்கும் 
நிஜமாக நீ வந்தால் ஆகாதா 
உயிர்கள் நிம்மதியாக வாழாதா!....தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

தரைமீது நானுறுண்டேன்

தரைமீது நானுறுண்டேன்
தலைமீது தீச்சட்டி
பாற்குடமும் நான் எடுத்தேன் 
மாரியம்மா... என்னைப் பார்க்காமல்
ஏனிருந்தாய் மாரியம்மா                                                                                                       
உலகெங்கும் உன் புகழை
ஓயாமல் நான் கேட்டும்
உனக்காக ஏங்கி நின்றேன்
மாரியம்மா.....உந்தன்                                                                                            உருவத்தைத் தாங்கி நின்றேன்
மாரியம்மா.......உந்தன்                                                                                          உருவத்தைத் தாங்கி நின்றேன்
மாரியம்மா........

ஒருகோடி ஜென்மங்கள்
உலகத்தில் நான் ஜெனித்தாலும் 
உன் நாமம் ஓத வேண்டும் 
மாரியம்மா.........நான் உனக்காக                                                                       வாழ வேண்டும் மாரியம்மா...........

கருமாரி அம்மா உன் 
கால் தொட்டு நான் பெற்ற 
பேரின்பம் பெற வேண்டும் 
மாரியம்மா......அன்பு குறையாத 
தாயே நீ வாடியம்மா... அன்பு
குறையாத தாயே நீ வாடியம்மா.... 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/10/2011

துணிவே என்றும் துணை!...

வெற்றிக்கு வித்திடும் சவால்களை
விரும்பியே ஏற்று நீ கற்றுவந்தால்
சட்டென வரும் பகைதனில் நின்று 
உற்ற நண்பனைப்போல் அது காத்திடும் 

ஒதுங்கியே நின்று நீ ஓதிடும் வேதங்களும் 
பதுங்கிப் பதுங்கி பகை விலக்கி வாழ்தலும் 
நிரந்தரமாகக் காத்திடும் வழிமுறை அல்ல 
பகை வரும் வரும்போது காப்பது துணிவு!...

சென்று நீ வரவழைக்காத போதும் அங்கே 
வந்த பகையை விட்டகன்று ஓடினாலும் 
இந்த துயரம் உன்னை விட்டகன்றதுண்டோ 
நீ ஏற்க்கமறுத்தாலும் வலிய வருவதே கலகம்

வந்த கலகத்தை வெல்ல முடியாதவன் 
உலகில் அன்றே இறந்த சவம் இங்கு 
நின்று நீ தொழுத தெய்வமும் வந்து 
உந்தன் துயர் தீர்க்கவிலையே என எண்ணி 

அந்த கணமே உந்தன் மனதை மாற்றுவது தவறு 
தும்பு தடுக்க அடங்கும் கடலலையைக்
கண்டதுண்டோ சொல் மனமே- அவன் 
அன்று வகுத்ததை ஆக்கி முடிப்பதே 
இதுவரை நாம் கண்டுணர்ந்த விதியே!...

உந்தன் மதியே உன்னைக் காத்திடும் 
உண்மை இதை உணர்வாய் மனமே 
கன்று இளங்கன்று அதுஎன்றும்  பயமறியாது
நன்று நீ செல்லும் பாதை எனில் மனத்தால் 
கன்றுபோல் துணிதல் என்றும்  நன்றே......


   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/09/2011

காலம் மாறிப் போச்சு!............

(இன்றய)நாகரீகக் கதவுகளை
நாளும் திறந்து பார்க்கையிலே
பெரும் பெரும் பூதங்களே எழுகிறது 
இதனால் புவியினில்  இன்பம் குறைகிறது!....

வாழை மரங்கள் தினம் கருக
கள்ளி மரங்கள் செழிப்புற
பொய்மழை பொழியுது பூமியிலே
புதுயுகம் கண்ட வாழ்வு இதே!......

ஏழையாக இருக்கையிலும்
இரந்து உணவை உண்ணயிலும்
மானம் பெரிதென வாழ்ந்த இனம்
மண் புழுவாக மாறியதேன்!........

ஈனத்தனத்தின் உச்சத்தில் நின்று
இரவு பகலாய்ப்  பாடுபட்டு  
ஏற்ரங்கண்ட எம் உறவுகளே
நீ இழந்த சுகத்தை நினைத்துப் பார் ...

சுற்றத்தாரைத்  தள்ளி வைத்து 
உன் சொந்த பந்தம் நீ மறந்து 
கட்டி வைத்த மாளிகைக்குள் 
கருடனும் பாம்புமே உன் உறவு என்றால்

அன்பு என்ற சொல்லுக்கே பின் 
அர்த்தம் மறந்து போகாதா ?......
சண்டை செய்யும் கொடிய இனம் 
சமத்துவம் அறிய வைக்காதே .....

புரிந்துணர்வு எனும் கொள்கைக்கே 
தம்மைப்  புதிதாய்ப் பார்க்கும் உறவுகளின் 
அறிவுரையைக்  கேட்டு அதன் மயக்கத்தில் 
அநீதியை நீயும் இழைக்காதே-இதனால் 

ஆத்திரம் கொள்கிறான் ஞானியும் 
அவனியில் இன்று உன்னால்தான் துயரம் 
சரி எது பிழை எது என நின்றுபார்
சத்திய வழிதனில் வந்து பார்!!!............
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.