8/31/2011

யாரிடம் துதிபாட வந்தாய் ........

மொழியதன் பற்றில் உறைந்து 
வண்டொன்று என் முன்னே வந்து 
இரைந்து சென்றது இக்கணம்........!!!
அட மதிகெட்ட வண்டே உனக்கு 
என்னதான் புரிகிறது சொல் இங்கே 

அழகிய பூவிடம் பெற்ற தேன்தமிழுக்கு 
இணையானதொரு மொழியுமுண்டோ .....!!!
தன் தாய் மொழி மறந்து உழறும் 
கீழ்த்தர வண்டே நீ சொன்னதைக் கேட்டு 

என் புலமையை அடைவு வைக்க நான் 
இப் புவிதனில் உன்போல் ஏழை இல்லையே 
அடுத்தவன் கழட்டிவிட்ட ஆடைமேல் 
உனக்கேனோ இத்தனை மோகம்............!!!!

சருகென நினைத்தாயோ செந்தமிழைக் 
கொளுத்தி விளையாடப் புறப்பட்ட கோழையே
எனக்கு விலைமதிப்பற்ற பொருள் இதைவிட 
வேறொன்றும் இல்லை என்பதை அறிவாயோ....

சரக்கடித்து உன் புத்தி மழுங்கிப் போனதோ!...
வெள்ளையர் கூட்டத்துக்கு விருந்து சமைக்கும் ஆடே
எட்டப்பனாக இருந்தபோதே உன் கணக்கு முடிந்ததடா 
நீ எமக்கு எவனோ என்று ஆனபின்னால் 
எம் தமிழைப் பழிக்க உனக்கென்ன அதிகாரம்........//

யார் என்று நினைத்துக்கொண்டாய் என்னை!.... 
கலங்கரை விளக்கேடா நானும் என் தமிழுக்கு
வெள்ளையனை வெளியேற்றிய என் தாய்மண்மீது  
தமிழைப் பழிக்கவந்தாயோ தரம் கெட்டவனே........


வெட்டொண்டு துண்டு இரண்டு 
என் வார்த்தைகளில் இனி மாற்றம் இல்லை
இன்னும் சற்றுநேரம் என்முன் நின்று 
கொச்சைத் தமிழ் பேசுவாயானால்

அந்த முத்தமிழ்மீது ஆணையாகச் சொல்கின்றேன் 
உன்னைக் கொன்றுவிடுவேன் இக்கணமே................
பிறமொழி போற்றித்  துதிபாட வந்த வண்டே
சென்றுவிடு என் முன் நின்று 
என் கோவம் கட்டவிழும் முன்னே
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/30/2011

உள்ளம் உருகி உன்னைத் தொழுகிறேன் .....

ஏட்டிக்குப் போட்டியாய் இங்கே 
உயிர்ப்பலி எடுப்பதற்கு ஏனோ 
மனிதனை மனிதன் நாடும் 
மனிதாபிமானம்  அற்ற செயல்கள்.....!!!

இங்கே இன்னும் மனிதநேயம் வாழ்கின்றதா....
இதைக் கேட்கத் தகுதி இல்லையா எமக்கு ....
புதிதாய்ப் பிறப்பெடுக்கும் கொலைக் கலைகளால் 
இந்தப் பூமியில் இனி உய்வு வருமா சொல்லுங்கள் ....

மனிதனை மனிதன் கொல்லும் காலம் பெருக 
மரங்களே எம்மைப் பார்த்துச் சிரிக்குமே.....!!!!
புத்தன் எங்கே!.. அந்த சித்தன் எங்கே.............!!!! 
இவர்களெல்லாம் கற்றுத்தந்த போதனைகள்தான் எங்கே........//

அத்தனையும் செத்து விட்டனவா மானிடனே 
நீங்கள் கற்ற வித்தைகள் எங்கே...!!! உங்கள் 
கருணை நிறைந்த நெஞ்சங்கள் எங்கே......!!!
விற்றுவிட்டீர்களா அதையும் கடைத்தெருவில்...!!!

வேடிக்கையாகத் தெரிகிறது மனிதனின் போதனை 
உயிருக்கு உயிரே பலி என்பது உண்மையானால் 
இனித் தமிழனுக்கு விடிவுகாலம் கிட்டிவிட்டதா!......
பலலட்சம் உயிர்களைக் கொன்றவன் இனி மாள்வானா...!!!

அதற்கும் இந்தப் பலிபீடங்கள் ஒத்துழைக்குமா........!!!
இல்லையேல் ஓரவஞ்சனையால் விட்டுத்தள்ளுமா....
என்றே கொந்தளிக்கின்றது பலரது இதயங்களும்
இதைச் சிந்தித்துப் பார்ப்பவர்கள் யார்தான் இங்கே....!!!

சீர்கெட்டுப் போன இந்த உலகத்தில் தர்மம் பிளைக்குமா....
கலக்கமும் கவலையும் கண்நீரும்கொண்டு இங்கே
உயிர்களெல்லாம் உயிர்ப்பிச்சை கேட்க்கும் இந்த
அவலநிலை மாறுமோ நீதிதாயே உன்னை வணங்குகிறேன் 

தர்மத்தின் தவப்புதல்வன்   நான் 
உன்னிடத்தில் யாசிக்கின்றேன் 
இந்தக் கருணை மனுவை ஏற்றுக்கொள் 
நீதித்தாயே அறியாமை என்ற பேதைமை நீக்கி 
நல்லுயிர்களைக் காத்து அவர்களை வாழவை ....

வலுவிழந்த  மனிதர்களுக்கு நீயே 
வழித்துணையாய் நின்று வெற்றி கொடு
தர்மத்தை நிலைநாட்டித்  தரணி எங்கும் 
மனிதர்களை மனம் மகிழ வைத்துவிடு தாயே 
மனிதர்களை மனம் மகிழ வைத்துவிடு.........//
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/29/2011

யார் வருவார் எம்குறை தீர்க்க......

வயிறு பசிக்குதையா வாய்விட்டு 
அழணும்போல் இருக்குதையா..........
வயசு தடுக்குதையா நம்ம 
வாழ்க்கை எப்போ முடியுமையா .....!!!


கஞ்சிக்கும் வழியில்லாமல் 
கமக்காறன் குடும்பம் ஏங்குதையா
வறண்ட பூமி சிரிக்குதையா 
இங்கு வந்த வினையைப் பாருமையா.....!!!


மழை அத்துப் போனதையா 
மரங்கள் செத்துப் போனதையா
யுத்தத்தின் தழும்பு மட்டும் 
நித்தம் நித்தம் பெருகுதையா ......!!!


குண்டும் குளியுமாய்ப் போன நிலத்தில் 
குப்பற விழுந்து எழும்பி இங்கே 
நிமிர்ந்து நிற்க முடியவில்லை 
எமக்கு நின்மதியான வாழ்வும் இல்லை .....


கஞ்சல் குப்பை சேர்ந்து இதற்குள் 
கருநாகக் குட்டிகளும் பெருகிடிச்சு 
படுத்து உறங்க முடியவில்லை
பக்கத்தில் இயமன் நிக்கிறப்போ ......!!!


செஞ்சொலையாய் இருந்த பூமி
சின்னா பின்னம் ஆகிடிச்சு சாமி 
வயிறு பத்தி எரியிற எமக்கு
வாய்க்கரிசியாவது போடு சாமி....


பெண்ணுக்குப் பாதுகாப்பை 
பெத்தவங்கள் தந்த காலம்போய் இப்போ 
பெத்தவங்களுக்கும் பாதுகாப்பத்து
பெண்மானம் போகுதையோ....................//


உயிரோடு செத்துச் செத்து
உருப்படியா வாளுதெப்போ ...
உள்ளதைச் சொல்லிப்புட்டேன்
உனக்கு இதாவது புரிகிறதா சாமி......


கண்கெட்டுப் போகும்முன்னும் நமஸ்காரம் 
கண்கெட்ட பின்னாலும் நமஸ்க்காரம் 
கைகட்டி நிற்கும் இந்தப் பாவிகளுக்கு 
கடவுளே இனியாவது வந்து உதவு ...........
  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/28/2011

நான் படிக்கப் போகணும்............

பழைய நினைப்புத்தான் மாமா 
எனக்கு பழைய நினைப்புத்தான்
பாட்டி சொன்ன கதையைக்கூட 
நான் இன்னும் மறக்கவே இல்ல!....

வலைய விரிக்குற நீயோ எனக்கு
வலைய விரிக்குற.....................!!!!¨
வயசுப்பெண்ணா நினைச்சுக்கிட்டு 
றொம்பத்தான் வலைய விரிக்குற!.....

சின்னவயசில திருமணம்தான் 
செஞ்சுக்கலாமா மாமா செஞ்சுக்கலாமா..
அப்புறம் சிக்கல்வந்து பிரிஞ்சுப்புட்டா 
மனசு தாங்குமா மாமா மனசு தாங்குமா.......

கல்விக்கூடம் செல்லும் வயசில் 
கர்ப்பம்தாங்கினால் நானும் 
களத்துமேட்டில் உன்னுடன்தான் 
காலம் தள்ளனும் மாமா காலம்தள்ளணும்

என்ன இந்த உலகத்திலே இருக்குதென்றேதான்
ஏறெடுத்தும்  பார்க்காத வாழ்க்கை வாழணும்
இதனால் நம் சந்ததிகள் அத்தனையும் சங்கடப்படும் 
இந்த சனத்தொகையைப் பெருக்கிக்கிடா போதுமா மாமா..

பாரதியின் புதுமைப் பெண் பாட்டிலேதானா 
மாமா வெறும் பாட்டிலேதானா!......  உனக்கும்
பக்குவமா சொன்னா இதக் கேட்டுக்கோ மாமா 
அட நீயாவது இதைக் கேட்டுக்கோ மாமா.........!!!

வயிறுமட்டும் நிறஞ்சால் இங்கே போதுமா மாமா...
நாம் வந்ததற்கும் ஒண்ணு ரெண்டு கத்துக்கலாமே 
அறிவுப்பசி எடுத்து நானும் ஓடுகின்றபோ நீயோ
அதன் நடுவில் வந்து நின்று வலையை விரிக்குறாய்.....!!!

கருவிபோல வாழ எனக்கு இஸ்ரமே இல்ல
மாமா எதில் எனக்கு இஸ்ரமே இல்லை.............//
இந்தக் கஸ்ரம் நஸ்ரம் புரிசுக்காம நீதான் 
வலைய விரிக்குற எனக்கு இங்க வலைய விரிக்குற...!!!

சொந்தம் பந்தம் பாத்துக்கிட்டா போதுமா மாமா உனக்கு
அந்த சொத்துப்பத்து வேணுமுன்னா நீயே வச்சுக்கோ மாமா
தூத்துக்குடி பட்டினத்தில் நானும் கல்வி பயிலனும் அந்த
துறைமுகத்தில் என்னை நீயும் இறக்கிவிடு மாமா.........:)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/27/2011

கனவாய்ப் போகும் பல நினைவுகள் .....

கொளுந்துபறிக்கும் நெஞ்சினிலும் 
ஆயிரம் ஆசைகள் குடியிருக்கும் ஆனால் 
இவர்கள் வருந்தி உழைக்கும் உழைப்புக்கு 
இதுவரை வந்த கூலி வெறும் பனித்துளியே...!!!

கொளுத்தும் வெயிலிலும்  கூடைகள் முதுகினில்
இவர்கள் குழந்தைகள் அழுகுதுபார் மரத்தடியில் 
பறித்த கொழுந்தொடு பாசமும் கருகுது இன்றும் 
இந்தப் பாவிகள் மனதை யார்தான் அறிவார் .........

வருந்தி உழைக்கும் மலையாக மக்களின் 
வாழ்க்கையில் என்றுதான் விடிவு வரும் !....
இவர்கள் கடந்து செல்லும் பாதையில் இதுவரை
கண்டது எல்லாம் பெரும் துன்பங்களே...............!!!

நிரந்தரம் அற்றது வாழ்க்கை என்பதை 
எம்போல் நித்தமும் உணரும் மக்களடா 
இருந்தும் கறந்தபாலை முலைக்கினி ஏற்றக் 
காத்திருப்பதில்  பயனில்லை என்று அங்கே 

வந்த கூலிக்கு வருந்தித் தினமும்
வாழ்க்கைப் படகை ஓட்டுகின்றார் !........
இந்த இடத்துக்கு எஜமான் எவனோ 
அவனும் ஏப்பம் விட்டு மகிழ்கின்றான் ....!!!

தேயிலையின் சுவையைத் தினமும் 
தேடியறிந்து அருந்தும் தனவான்களே அதில்
இந்தப் பாவிகளின் கண்ணீரும் கலந்திருக்கும்
பக்குவம் அதனை என்றும் அறிவீரோ.............// 
                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/26/2011

வலைத்தளங்களும் தமிழும் வாழ்க வாழ்க வாழ்கவே ...


நான் நானாக இல்லையடி என் தோழி 
என்னை நல்வழிப்படுத்துதெந்தன் மொழி 
இது கூலியின்றி ஓடுகின்ற (வலைத்தளம்)தோணி
இந்தக் குற்றாத்தில் வந்து நீயும் குளி............//

முத்தான (கவிதை )நீர்த்துளிகள் பட்டுந்தன் 
முழுமன வேதனையும் தீர்ந்திடுமே .......
நாம் கற்வித்தை அத்தனையும் கொண்டிங்கே
துயரைக் களைந்தெறிய வந்தோமே நாள்தோறும் ....

அடுப்பங்கரையிலே அடைந்து கிடந்தவள் 
ஒரு ஆறுதலின்றி மனம் அலுத்துப்போனவள் 
இன்று வலைத்தளம் வந்ததால் வாழுகின்றேன் 
இந்த வாழ்க்கயில்த்தானடி பேரின்பம் கண்டேன்!.....

அடிக்கடி செய்திகள் கவிதைகளும் இங்கே 
அழகியபாடல்கள் ,பட விமர்சனங்களும் 
நகைச்சுவை ஜோதிடம் தொழில்நுட்பம்
நம்திறமை அத்தனையும் காட்டிடவே 

வலைச்சரம் போலொரு வசதியுண்டோ 
வந்துபார் புரியும் இதன் அருமை.............
எடுத்ததற்கெல்லாம் கட்டணமாம் 
எவர் இங்கு இவர்கள்போல்  இலவசமாய் 

நம் கருத்தினில் உதித்த நல் ஆக்கங்களைக்
காப்பகப்படுத்தி வெளியிடுவார்..................!!!!!
சுதந்திரம் நிறைந்ததும் வலைச்சரம்தான் 
சுந்தரம் ஆனதும் இங்கே வலைச்சரம்தான்!....

அவரவர் மனம்போல் நல்ஆக்கங்களை
அள்ளியே தெளிக்கும் உறவுகள் முன் 
blogspot டின் தயவால் இதுவரை நான்
இன்ட்லியில் ,தமிழ் 10 ல் ,தமிழ்மணத்தில் 

என் இடுக்கைகள் யாவையும் பகிர்ந்துவந்தேன்
இன்றிந்த மகிழ்வை நான் உணர்ந்ததனால் 
தமிழ் அதன்  வளர்ச்சிக்குத் தோள்கொடுக்கும் 
தரம் நிறைந்த இந்த வலைத்தளங்களுக்கும் 
பலமுறை எனது வாழ்த்துக்களைப் பகிர வந்தேன்..... 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/25/2011

மரணம் என்ற வலையில் விழுந்து.....

மரணம் என்ற வலையில் விழுந்து 
மனிதன் எரிந்து கருகும்போது 
மனதில் உள்ள துயரை என்றும் 
மறைத்து வைக்க முடியாதன்பே....//

எதிரிகூட நண்பன் ஆவான் 
இறந்தபின்னால் தெய்வம் ஆவான்
உடலைவிட்டு உயிர் பிரிந்தால் 
உயர்ந்த குணங்கள் நெஞ்சை வாட்டும்....

கருணை உள்ள தெய்வம் நீயே 
கண்ணிறைந்த கணவன் நீயே
இயமன்  அழைத்துச் சென்றபோது
எவரை நினைத்துத் துடித்தாய் அன்பே!.....

வரும்பகலில் பாதை மாறும் 
வாழ்க்கை என்ற ஓடம் தாழும்
பிறக்கும்போதே இறப்பின் கணக்கை 
படைத்தவன்தான் வகுத்தான் இங்கே....

வலுவிழந்த மனிதன் எல்லாம் 
மண்ணில் விழுந்து புரண்டாலும் 
அழுது அழுது கண்கள் வீங்கி 
ஆறு குளமாய் ஓடினாலும் 

சென்ற உயிர் திரும்பாதென்று
வந்த உயிர் அறிந்த உண்மை 
நன்று நாமும் வேதனையை 
மென்று துயர் கடப்பதன்றோ....

அதனால் வந்த துயர் மறந்து நீயும் 
வாழ்வில் இன்பம் காண வேண்டும் 
அட எந்த நிலை வந்தபோதும் 
ஏற்றங் கண்டு வாழவேண்டும்...........
ஏற்றங் கண்டு வாழவேண்டும்..........

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/24/2011

யாரிடம் விளையாட நினைக்கின்றாய் மூடரே....!!!!

உ ந்தன் கவிதைகளை எப்போதும் 
எவர் இங்கு எடுத்தாள நினைத்தாலும் 
அவரைப் பஞ்சாய் எரித்திடுவேன் பின் 
அந்தப் பாதகரைக் காட்டிக் கொடுத்துவிடுவேன்....!!!!

அம்பாள் அடியவனிற்கு அவசர புத்தி கூடாது 
என்று பொறுத்திருந்தால் நீயோ இதனால் 
இன்னும் ஏற்றம் அடைய நினைத்தாயோ.....!!!
காக்கைக்கு வெள்ளை அடித்தால் அது கொக்கா....

கல்வியில் கற்புக்கு இலக்கணம் என்றுமே 
கவிதைகள் திருடாமல் இருக்கணும் .......//
சொந்த மூளையில் வந்த கவிதைகளை எழுதணும்
அல்லது கண்ட கவிதைகளையும்  வாசித்து மகிழணும்...
                                                        
அதைவிட்டுப் பிரதி எடுத்தலும் -பின் இதை வைத்துப் 
பிரபலம் ஆக நினைத்தலும் முறையோ ................!!!
அற்ப குணத்திற்குக் கவிஞன் என்று பட்டம் வேறோ....!!!
இது அழகோ.....அறிவோ.....நற்பண்போ ..........!!!!!!!¨

அந்தரத்தில்க் கூடுகட்டி நாமோ 
அதன் நடுவே முட்டைகள்  இட்டு 
குஞ்செனப் பொரித்து இங்கே 
குருவியாகப் பறப்பதுதான் இந்த இடம் இதிலும் ........ 
(வலைத்தளம் )

வஞ்சகர் கூட்டம் எம்மை வருத்திட நினைத்தாலோ 
எம் கவிதைகள் புத்தகமாய் கட்டுக்கட்டாய் வெளி வரும் 
இதனால் ஓசியில் காணும் இந்த ஒரு வாய்ப்பு இழந்து பின்
காசு இல்லாதவன் கண்களுக்கும் இதனைக்  காணும் வாய்ப்பை 
தடுத்து நிறுத்த நினைக்காதே தரித்திரமே கெட்ட புத்தியால் ....

திருட்டுக் கூட்டம் உங்கள் திறமையைத் திருடவந்தால் 
கண்டுபிடித்து அவரின் கயமையை வெளிக்காட்டி விடு 
ஒற்றுமையால் எத் தளங்களிலும் ஒன்று கூடி நிற்பவர் நாம் 
விட்டுக் கொடுத்தல் ஆகாது எம் திறமை வீணாய் போகக்கூடாது ...

தளங்களில் உங்கள் ஆக்கங்களைத் தரவு இறக்கி விட்டவுடன் 
பிரதி எடுத்து வைத்திடுவீர் பின் எப்போதும் இது பயன் பெறும்
இரவுவுதோறும் விழித்திருந்து நல்ல படைப்புகளை படைத்துவிட்டு 
கடமை முடிந்ததென்று களைத்துப்போய் தூங்கிவிடாதே உறவுகளே 

எதிர்காலம் என்னவாகும் இது எவருக்கும் தெரியாது .......!!!!!
முடிந்தவரைப் பதிவை இடு முன் எச்சரிக்கையாய் என்றும் இரு......

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/20/2011

இது ஒரு நட்பின் வேண்டுகோள்.........

கரும்பாறை என நான் இருந்தேன் 
கண்கவர் சிலையாய் எனை மாற்றினாய் !...
இருந்தாலும் இது போதாதென்று 
இன்னுயிர் தந்து என்னை வாழவைத்தாய்....!!!

பின் இதை விருபாதவர் சொல்லைக் கேட்டு 
வீதியில் நீயே என்னை விட்டெறிந்தாய்....
அரும்பாடுபட்டு உன்னிடத்திற்கு  அன்று
ஆயிரம்முறை நான் வந்தபோதும் 

திருந்தாதது என்றும் உன் தவறே ....
என் கதை தீர்ந்தபின் அழுவதில் பயனில்லை
வருதாதிரு என் நெஞ்சமே இனியேனும் 
வரும் வதந்தியைக்கேட்டு ஏமாராதே...//

உள்ளதை மறைத்து உண்மையை சிதைத்து 
சொன்னதையே சொலிச் சொல்லி என்றும்
உன்னைச் சோதிப்பவர் முன்னிலையில் 
நல்லது கெட்டது எதுவென  அறிந்து நீ 

பொய்யரின் உறவுக்கு புறமுதுகு காட்டி  
நல்லவரை எப்போதும் நல்லபடி  நம்பி 
உள்ளதை ஒழிவின்றி உள்ளபடி உரைத்து 
அன்போடு வாழ்ந்திரு அதை என்றும் நான் ரசிப்பேன் ...

வள்ளலாக இருந்தாலும் சந்தேகம் கூடாது ..
வலுவிழந்து போனாலும் வால்ப்பிடிக்கக் கூடாது
உள்ளன்பு வைத்தால் ஒருபோதும் மறத்தல் ஆகாது ..
கள்ளத்தனம் இருதால் நட்பு கடசிவரையும் தொடராது

நான் சொல்வதைக் கேட்டு இனி சொன்னபடி நட 
நடந்ததை மறந்து நல்லபடி வாழ்ந்திடவே 
அகத்தினில் தூய்மையை அடிக்கடி பேணு 
வம்பளக்கும் உறவுகளின் வழிக்கு என்றுமே போகாதே!.....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/18/2011

எம்மை யாரென்று நினைத்தாய்.....

மல்லு வேட்டி கட்டிக்கிட்டு அதோ 
என் மாமன் வாறான் வண்டியில....
சொன்னபடி நாள்க் குறிச்சு 
சொக்க வைப்பான் என் மனச .....!!!

பட்டணத்து இராஜா உந்தன் 
பகல்க் கனவு முற்றுப்பெற 
எட்டி உதை உதைத்தான் என்றால் 
நீயும் என்னை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாய் ...

கட்டிலுக்கு ஆசைப்பட்டு இங்கு 
களுகு போல வந்தவனே 
புத்திகெட்ட என் அப்பன்கிட்ட 
புளுகுக்கதை சொன்னவனே 

பட்டிக்காடா பட்டணமா.......
அதையும் பார்த்துக்கோடா லட்சணமா!....
எச்சி இலையில்  சாதம் கேட்டு இப்போ 
எங்க ஊருக்கு  வந்தவனே...

ஒருமுறை எச்சில் பட்டால் போதுமடா 
எவனையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டாள் 
இந்த ஊரு பெண்ணைப் பார்த்தால்
உனக்கு ஏனமாய்த் தேரியுதோடா.......//

சிங்கக் கொடி புடித்தவனே நீயும் 
சிலப்பதிகாரம் படித்ததுண்டோ......
அந்தக் கண்ணகி பரம்பரை எம்மை 
இன்று காசுக்கு விலை பேசுகின்றாய்.....

வங்கக் கடலும் கொதித்தெழும்பும்
இவளொரு வார்த்தை இங்கே உரைத்துவிட்டால் 
உந்தன் அங்கம் புழுதியில் விழுந்து சிதறும் முன்னே
அரக்கனே அகன்றுவிடு இவ்விடம் விட்டு.............

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/15/2011

இயற்கையே இதைக் கொஞ்சம் ஆதரி .....

குன்றிலிட்ட தீபமாய் 
குமுறுதடி பல தாய்மனசு!....
வண்டுகள் அரித்த புது மலர்போலே 
வாடி விழுந்த தன் சேய்கண்டு.......

அன்புருவானவள் அகத்தினிலே 
பல்லாயிரம் துன்பங்கள் குடிபுகவே 
இனி சண்டைகள் செய்தும் பலனில்லை..
என்று சாக்கடை ஓடும் வீதியில் நின்று 

மென்று தணித்தாள் வேதனையை 
தன் மேனியைக் கொல்லும் நோய் மறந்து 
என்று தணியுமோ இந்த சோதனை .........!!!!
பல இடர்களில் நின்று பெண்களைக் காக்க..

அன்றுதொட்டு நாம் இன்றுவரை
அனைவரும் கேக்கும் ஒரு கேள்வி...
ஆலம் விழுதுபோல் நாளும் தழைத்திடும் 
காமத் தீயை அணைத்திடவே இனியேனும் 
காற்றோடு கலவாதோ எம் கன்னியர்கள் விடும்  
பேரு மூச்சு.......................!!!!


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/12/2011

நானாக நானில்லைத் தாயே!.............

அண்டங் கடந்து சென்றாலும் 
ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும் 
உந்தன் பாதம் எட்டி உதைத்தாலும் 
ஊரார் என்னைப் பழித்தாலும் 
எந்த நிலையிலும் உனக்காக 
என் ஏக்கம் குறையாமல்க் காத்திருப்பேன் !....

பெற்ற தாயே உன்னை நான் அன்று 
போற்றிக் காக்க மறந்தேனே ............//
நான் கற்ற வித்தை அத்தனையும் 
இன்று கண்ணில் நீராய் ஓடுதடி 
உற்று இதனை நீகண்டுணர்ந்தால்
என் உள்ளம் அமைதி கொள்ளுமடி.....

தாயே என்னைத் தாங்கிய மடியைத்  
தவிக்கவிட்ட பாவியடி நான்
தூங்கும்போதும் விழித்திருந்து
காத்த கண்களை மறந்தேனே!......
நாய்கள்கூட என்னைப் பார்த்து 
நன்றிகெட்டவன் என்றபோது 
வாழும்போதே சாகும் இந்த 
வாழ்க்கை எனக்குப் போதுமடி ....

பெற்று வளர்த்த உறவுகளைப்
போற்ற மறந்த பிள்ளைகளா நீங்கள் ...
சற்று என்னிலை பாருங்கள் 
என் சங்கடத்தைக் கேளுங்கள் 
வாழும்போது தெரிவதில்லை சில
வறட்டுக் கௌரவம் விடுவதில்லை..
இவர்கள் மாண்டபின்னால் வரும் துயரை 
மண்டியிட்டும் போக்க முடிவதில்லை!!!.....

ஈன்றெடுத்த பெற்றோரை 
இறுதிவரைக்கும் காத்திடுங்கள் 
நாங்கள் வளர்ந்து வருவதற்கும் 
நல்ல பெயரை எடுப்பதற்கும் 
தேய்ந்து தேய்ந்து முடமான 
தெய்வம் இவர்களை உணருங்கள்.........//

வறுமை என்ற சொல்லைப்போக்கி 
வாடிய முகத்தைத் தேடியேவந்து
அன்னம் இட்ட கைகள் இதனை 
அன்பு செய்யப் பாருங்கள்.........
ஆயிரம் உறவுகள் வந்தாலும் அவை 
அன்னை தந்தைக்கிணையில்லை
கோவிலும் குளமும் நமக்கெதற்கு 
இவர்கள் கொண்டதுயரை மறந்து விட்டால்.....

பாவிகள் என்று யாருமில்லை  
பாசம் அதனைத் துறக்காவரைக்கும்
மேதினில் எம்குறை போக்கிடும் மனிதரே 
மேன்மை தங்கிய செல்வமடா ............
எம் ஆவியைச் சுமந்த அன்னை அவளின் 
ஆசை எதுவோ அதைத் தீர்திடடா 
கட்டிய மனைவியின் பேச்சைக் கேட்டு
உன் கடமை எதுவோ அதை மறவாதே!.......
  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/11/2011

சாக்கடையில் பூக்களைத் தூவாதே........

மனம் விட்டுப் பேசும் ஒரு 
மணவாழ்க்கை அமையாமல் 
பிணம்போல வாழ்ந்தவள்தான் 
பிள்ளை பெற்றாள் வாழை மரம்போல!....

உறவெல்லாம் புத்தி சொல்லி 
ஒடுக்கிவைத்த  அவள் மனதில் 
ஓராயிரம் கற்பனைகள் அதில் 
ஒன்றுகூட நிறைவேறவில்லை....//

பிறருக்காய்த்  தன் வாழ்வை இங்கே  
புறக்கணித்தவள் முன்னிலையில் 
தன் கணவர்க்குச் சேவை செய்யும்
கன்னியர்கள் கூட்டம் கண்டு !.........

எவரம்ம பொறுப்பார் இதனை (இன்றும்) 
எரிகின்றார் பல சீதைகள் நெருப்பினிலே!...

தவறான வாழ்க்கைத் துணைவன் 
தன்னாட்சி புரியும் ஒருவன் 
அவன் சொன்ன வார்த்தைக்கிணங்கி 
அடிமாடாய் உழைக்கும் பெண்கள்....

தனியாகச் சென்றால்க்கூட வாழும்போது 
அவள் பெயர் தரம்கெட்டுப் பொகுமம்மா...
பின் அந்த அநியாயக்காறர் வார்த்தைஜாலம் 
கேட்க என்றும் அழகாகத் தோன்றுமம்மா!....

எவர்கண்டார் மனதின் அழகை
இது வெறும் ஏமாற்றும் உலகமம்மா!.....

மகளுக்குத் திருமணமா இப்போ 
மாங்கல்யம் தேடணுமா...............
அறிவோடு அழகும் பொருளும் 
ஆடம்பரமான வாழ்வைவிட்டு 

அன்போடு பண்பும் நல்ல 
அடக்கமான குடும்பம் தேடு 
மரியாதை நிறைந்த குடும்பம்
இவள் மணவாழ்வில் இணைந்துவிட்டால் 
மனதுக்குத் துன்பம் இன்றி 
மணவாழ்க்கை இனிக்குமம்மா.......//

கலியாணத் தரகன் கையில் 
காசு பணம் கொடுத்துவிட்டு 
அவன்சொன்ன கதையைக் கேட்டும் 
அவசர தாலி கட்டாதீர்கள்.............//

வருவாயின் நிமிர்த்தம் அங்கே 
வார்த்தையில் பொய் கலந்திருக்கும் 
பலநூறுதரம் கடைந்து நீயும் 
பக்குவமாய் அந்தத்  துணையைத் தேடு
  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/10/2011

அரசே இதைக் கொஞ்சம் யோசி .....

ஆறாறு முப்பத்தாறு 
ஆண்டுகளும் ஓடிப்போச்சு....
வேறாரும் அறியாமல் இவள் 
வேதனையும் உக்கிப்போச்சு!....

தீராத துன்பம் வந்து இதயம் 
தீக்கிரையாய் ஆகிப்போச்சு 
ஈடேற எண்ணம் இவளின் 
இளமையைக் கொண்டுபோச்சு!...

கரைசேரும்வரைக்கும் இங்கே 
கன்னியர்க்குத் துன்பமடா ....
பனங்காட்டு நரிகள் எல்லாம் 
பரிசம்போடத் தவிக்குமடா ....//

கிழவனுக்கும் ஆசைவந்து 
கிண்டலடிக்கத் தோன்றுமடா..
தலைப்புள்ளை இவள் என்றால் 
தாய் வயிறும் எரியுமடா !!!...........

அடுத்தவன் கேள்விக்கெல்லாம் 
அலுக்காமல் பதில் சொல்லும் 
அப்பனுக்கும் மனசு வேகுமடா ..
தங்கச்சி வாழ்வுக்கும் பின் 
தடைக்கல்லாய் இவள் இருப்பாள் ...

அக்காச்சி கதையைத்தான்  
அயலவரும் கதைப்பார்கள்
வயிற்றைப்  பிரட்டுதென்றால்ப் போதும்
வாய்விட்டுச் சிரிப்பார்கள் !........

கண் மூக்கு காது வச்சு
கதை எங்கோ போகுமடா பின்
சுன்னாகச் சந்தையில் கேட்டால் 
சுறுட்டு விப்பவனும் சொல்வானடா!.....

நம்ம அண்ணாச்சிமாருக்கு
இது எங்கே புரியுமடா ...........//
அள்ளி அள்ளிப் போட்டாலும் 
அலுக்காமல் கேட்பாரே.....

வரதட்சணைக் கொடுமை இதை 
வாய்கிழியக் கத்தினாலும் 
இனி வாங்குபவன் விடுவானோ 
வந்து துலைந்ததே புது விலைவாசி !.....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/09/2011

நெஞ்சு பொறுக்கவில்லை.........

எடு கணையைத் தொடு வில்லை 
இருண்டகண்டம் பிளவுபெற .......
அடிமை என்ற வாசகங்கள் 
அடியோடு கருகிவிட 
மனித சுதந்திரம் எல்லா மனிதர்க்கும் 
இங்கே சம உரிமை சாசனமாய் 
சகலரும் மகிழ்ந்திடவே 
பொதுநலம்கருதி மிக பொறுப்புடனே 
தன்னலம் துறந்து சாதிமத பேதமின்றி 
சஞ்சலங்கள் தவிர்க்கும் நல்ல 
போதனைகள் நிறைந்த 
பொது நீதிச் சட்டத்தை 
பொதுமக்கள் ஏற்க்கும்வண்ணம் 
ஆண் என்றும் பெண் என்றும்
அடக்குமுறை தவிர்த்திங்கே 
ஆயுளைக் கூட்டி நல் ஆனந்தம் பெருக்கும்
தேவை மிகுந்த எம் தெய்வீகச் சடங்கிருக்க
மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளிவைத்து இனி 
என்றோ எழுதிவைத்துப் பழிவாங்கும் 
இன்றும் எம் மனதைக் கொச்சைப்படுத்தும் 
விச வித்தில் முளைத்த நச்சுச் செடிகளை 
நல் அறிவெனும் அரிவாள்கொண்டு
அழித்துவிடு மானிடனே .....
அமைதிப் பூங்காக்களின் 
ஆயுளை விருத்தி செய்து
அன்போடும் பண்போடும் ஆனந்தமாய் 
ஆண்களும் பெண்களும் 
அகமகிழ்ந்து வாழ்ந்திடவே 
மூட நம்பிக்கைகளும் எமை 
முடமாக்கும் வாசகங்களும் 
இனி எங்கு தேடியும் கிடையாதென்று 
பொங்குதமிழ்க் கடல் அலைகளினால் அடித்து 
இந்தப் புவி கடக்கச் செய்துவிடு புனிதரே !.......
புத்தியுள்ள ஜீவன்கள் இனியும் 
புறமுதுகுகாட்டி ஓடமுடியாது.....
வலுப்பெற்ற சத்தியங்களை இனியும் சாக்கடையில் 
வெறும் சாணமாய்க் கரைத்துவிட  முடியாது....
எங்கள் உத்தமிகள் கொண்ட நற்பெயர்கெட்டு
வெறும் உலோகங்களாய் வாழ முடியாது....//
கோரைப் புல்லுக்கும் வாழ்வளிக்கும் சில 
 அறுகம் புற்களின் அருவருப்பான செயலைக்கண்டு 
கற்பூரச் செடிகள் இனியும் கண்ணீரில்  
 அழுகிப்போகும் நிலையை ஆதரிக்க முடியாது....
தவறான நட்பினால்த் தழைத்த குறிஞ்சிப் பூக்களை 
குப்பைமேட்டிலே குத்துயிராய்க் களைந்தெடுக்கும் 
கொடுமை இதனை இனியும் பொறுக்க முடியாது...
வெட்டவெளியிலே கற்பை விப்பதும் பணத்தை 
விட்டுவாங்க்கியே அந்த நட்பைத் தொடர்வதும் 
புத்திகெட்ட இந்த ஜீவன்களுக்குப் புதிய பாடம் புகட்டிடவே
எடுகணையைத்  தொடு வில்லை 
இருண்டகண்டம் பிளவுபெற
புத்தனுக்கும் ஞானம் தந்த போதிமரம் தளைத்ததுபோல்
சத்திய நூல்கள் புதிதாய்த் தளைத்து 
இந்தச் சாக்கடைகளை நறுமணம் வீசும் 
பூக்கடைகளாய் மாற்றட்டும்..........//

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/08/2011

எதைப் பேசுவாள் இவள் எப்படிப் பேசுவாள்!.....

                       

                               
கருங்கூந்தல் விரிந்தாடக் 
கண்மை கரைந்தோட  
உண்மைக்குச் சாட்சி இன்றி 
ஒரு பெரும் துயரம் கொண்டாள்


வஞ்சியிவள் நடை மேலிந்ததேனோ!......
மனதை வாட்டிடும் துயர் அறிவார் யாரோ!..
பெண்ணினம் வாய்திறந்து பேசாதோ....
பேசினால் இப் புவியினில் துயர் என்றும் தீராதோ...

மனக் கண்களில் எழுகின்ற கேள்வி 
உன் மனதினை வாட்டுவதேனடி என் தோழி..
உனிரு விழிகளும் குளமாகி இங்கே 
ஊத்திடும் கண்ணீரில்  துயர் கண்டேன் !....

இன்னமும் உன் மனதை அறியமுடியாமல் 
இருதலைக் கொள்ளி ஏறும்பானேன் 
பெண்ணே நீ பேசு பொறுமையுடன் 
போதிய அறிவுரை கிட்டும்வரை 

நாம் சொல்வதைக் கேட்டும் அழுகின்றாய் 
உன் சோகத்தின் காரணம் புரியவில்லை!..
அன்பே உனக்கு என்னகுறை.....
ஆதரிக்க நாமிங்கு உள்ளவரை ...

பெண்ணவள் பேசத் தொடங்கியதும் 
தன் பேச்சினில் மாற்றத்தைக் காட்டுகின்றார் 
இல்லறத் துறவி இவள் நெஞ்சினிலே 
இருப்பதை எல்லாம் சொல்லிவிட்டால் 

அண்ணனும் தம்பியும் என்னசெய்வார் 
அளந்தது இவ்வளவுதான் பெண்ணுக்கென்றால்
சொன்னதைச் சொல்லியே உறவுகளை 
சோகத்தில் தள்ளிடும் புத்தி பெண்ணுக்கில்லை.. 

வீரியம்கொண்ட பெண்ணினத்தை என்றும்
 வேதனை தீண்டாமல் சென்றதில்லை 
மணமாலையினால் கருகிடும் பூக்களிதனை 
மனம்துறந்து பேசச் சொல்வதில் அர்த்தமில்லை...//

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.