10/31/2011

பண்பு தவறினால் பாதை மாறாதா!......

இனமது புலம்பெயர்ந்தபோதிலும் 
மனமது புலம்பெயராதவரை 
எம் வாழ்க்கை எங்கும் சொர்க்கமே!...
இதில் என்னதான் ஆச்சரியம்!.......

அவரவர் நடைமுறை அது என்றும் 
அவரவர்க்கேற்றது அதை தினம் பார்த்து நீ 
அவசியம் என இங்கு மாற்றினால் உன் 
நடைமுறை தவறிய வாழ்க்கை நரகமாய்த் தோன்றுமே!...

இடி வரும் பின்னால் மழை வரும் என்பது 
இயற்கையில் என்றும் பொது விதியே இதையே 
கடன்படும் அனைவரும் கருத்தினில்க் கொண்டால்க் 
கண்ணீர் எமக்கு இல்லையே !........................

பல தலைமுறை கண்ட உறவுகள் இங்கே 
பாதை மாறிப் போகையிலே நம்மைத் 
தழுவிடும் சந்ததி சந்தியில் நின்றால் அதுவும்  
தம்மால்த்தான் என்பதும் உண்மையே.........

இதில் புலம்பெயர் மண்ணோ 
புகுந்திடும் புது உறவோ சரி இல்லை என்றால் 
நாம் சொல்லும் காரணம் அத்தனையும் 
என்றும் ஏற்ரிடமுடியா உண்மையே !.....

தனதுணர்வதை அடக்கித் தரமுடன் வாழ 
தன்னைத் தானே ஊக்குவித்தால் இதில் 
வரும் இடரினில் நின்று தவறிடும் பண்பு 
எம் எல்லோர்க்கும் இங்கு வந்துவிடும்......

கலைகளை ரசிக்கும் மனக் கண்ணினைக் கொஞ்சம் 
கட்டுப்பாட்டில் நாம் வைத்துக்கொண்டால் 
மனித உணர்சியத் தூண்டும் பிற காட்சிகள் எல்லாம் 
எம் மனதில்ப் பதிய மறுத்துவிடும் அதிலும் 

உறவுகள் விட்டு நம் உரிமைகள் விட்டு 
ஏனோ இங்கு வந்தோம் என்றும்
எம் கடமைகள் என்ன..கனவுகள் என்ன 
இதையும் கொஞ்சம் கருத்தில்க் கொண்டால் 

உழைத்திடும் பண்பும் உயர்ந்திடும் பண்பும் 
எம் உள்ளும் புறமும் எளிதில் வந்துவிடும் இதை விட்டு 
உருப்படியாகா வழியினில் சென்றால் உனக்கு வாழ்க்கை எங்கு சென்றிடினும் நரகம் நரகம் நரகமே!....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/28/2011

சொன்னால் புரிஞ்சுக்கோ ....

தீண்டாமை ஒழிக எனக் கோஷமிட்டார் 
பின் தீண்டியே பல பெண்களை நாசம் செய்தார்!...
வேண்டாமெடி பெண்ணே இவர்கள் பேச்சை நம்பி 
வழுக்கி விழுந்தவர்கள் வாழ்வில் பின் எழுந்ததில்லை!...

ஆண்டாண்டு தோறும் இங்கு பல பெண்களுக்கு 
இந்த அவமானச் சின்னங்களால்த்தான் பேரிழுக்கு...
நாம்  பாடும் பாட்டு இங்கு அது எதற்கு..........!!!
நாள்தோறும் பெண்ணே உன்னைக் காப்பதற்கு...

மீன்போன்ற உன் விழியை மதிப்பவரும் உண்டு 
மீளாத துயர் தந்து ரசிப்பவரும் உண்டு !.............
தேள்போல கொட்டித் தினமும் வெறி தீர்ப்பவரும் உண்டு 
தேனாகப் பாலாக எண்ணி மகிழ்பவரும் உண்டு.........

யார் கண்டார் யார் இங்கு நல்லவர் என்று 
இயம பாதகம் செய்வோரும் இப் பாரினில் உண்டு 
வீணாக உன் மனதில் இந்த ஆசை எதற்கு ......
விடு பெண்ணே உன் பெற்றோர்க்கும் கடமை இருக்கு!...

ஊர்கூடி மகிழும் ஓர் வாழ்வை அமைக்க இனி 
உதவாமல்ப் போனால் அதுதான் உன் தலை எழுத்து!....
ஆளானப் பட்டவரும் இதில் ஏமாந்ததுண்டு 
அடி பெண்ணே நான் சொல்வதைக் கேள் 
இதனால் உனக்குப் பல நன்மையும்  உண்டு !................ 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/27/2011

நான் சொல்லிக் கேக்கவா போறீங்க!......ஏதும் அறியாத முல்லை அவள் 
எடுத்து விட்டாள் நாலு சொல்லை 
யாவரும் இன்று அவள் பின்னே!...
யாம் இருக்குறோம் என்றார் உதவ ...


இதுதான் காதல் செய்யும் லீலை 
இதற்குக் கண்டிப்பாகத் தோல்வி இல்லை 
மானம் காக்கும் சேலை அதற்காக
மண்ணில் புரள்வதும் நீதி  இல்லை...

வீரம் தீரம் உள்ளவர்க்கும் இந்த 
விவேகம் என்பது கொஞ்சம் தேவை 
பாசம்மட்டும் இருந்தால்ப் போதாது 
அதைப் பகிர்ந்துகொள்ளத் தெரிய வேண்டும் 

ஈரலிப்பான வார்த்தைகளால் என்றும் 
இளகா மனமதும் இளகிவிடும் !...........
இவர்கள் தூர தேசம் பிரிந்து சென்றாலும் 
தொடரும் உறவது உறுதி பெறும்...........

காலம் நேரம் அறியாமல்க்
கண்ணில்த் தூசி விழுந்ததுபோல் 
எடுத்தெறிந்து பேசும் வார்த்தைகளால் 
எவர்தான் இங்கே இன்பம் கண்டார்!...

தீதோ நன்றோ பிறர் அறிய நாம்
பேசும் வார்த்தையில் சுத்தம் வேண்டும் 
காதில் விழுந்த சொற்க் குடைச்சல் பின் 
எந்தக் காலம் சென்றும் அழியாது .......

வாரம் ஒருமுறையேனும் தியானம் செய் உன் 
வார்த்தையில் திருத்தம் அதைத் தினமும் செய் 
தவறின் மானம் உள்ளவர் பொறுக்க மாட்டார் 
பின் மண்ணடி இட்டாலும் மன்னிக்க மாட்டார்!.......

இதனால் நாளும் பொழுதும் உன் பெயரை 
அவர்கள்  கனவில்க்கூட வெறுக்க வைக்கும்
அந்த ஈனத்தனமான பேச்சதர்க்கு முடிந்தால் 
இன்றே நீயும் வெள்ளை அடி.....................  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/26/2011

எதுக்கு இந்தக் கொலை வெறி .....!!!

சாவடிச் சந்தியில் சில 
சனத்தொகை பாரடி!......
இவர்கள் கூடிடும் காரணம் 
வெறும் மனக் குழப்படிதானடி....

யாரவர் யாருடன் ஓடினார் என்பதே 
நாளுமோர் தலைப்பிலே நகைச்சுவை கேளடி!...
தேறுமோ இவ்வினம் திருந்திடாக் கல் மனம்...!!!
கூறிடும் வார்த்தைகள் கொலைக்களம்தான் புகும்...

மானமும் கல்வியும் மனிதனின் உயிர் என 
வாழ்பவர் நெஞ்சிலே வீழ்ந்திடும் கல் இவை...
தோற்றிடும் துன்பமோ.... அதை எழுதிட 
என் தூரிகை தோற்றிடும் இவ்வுலகினிலே!....

காற்றினில் பரவிடும் வதந்திகளால் பலர் 
கண்களில் கங்கையை நாம் கண்டதுண்டு...
ஆற்றிட  முடியாத் துயர்கொண்டு தினம் 
அழுதவர் குரல்களையும்  நாம் கேட்டதுண்டு!....

சேற்றினில் பதித்த கால் எடுத்து 
செந்தாமரை இதழ்களின் மேல் மிதித்து 
ஆற்றிடும் கொடுமைக்கு எல்லை இல்லை 
இந்த அற்பரின் செயலைக் கண்டாயோ!.....

மூக்கினில் மின்னி ஒன்று கண்டால் 
முழு உடலிலும் கண்டேன் தங்கம் என்பார்!..
காற்றினில் விலகிய சேலை கண்டால்ப் போதும் 
அவர்கள் கற்பனைக் குதிரை எங்கோ ஓடும்...!!¨

சில சொற்பன சுந்தரிகள் அருகினிலே 
சுகம் பல தேடி அலைபவர்கள் இங்கே 
தம் தப்பினை மறைக்க வேசமிட்டு 
தாவுவார் குரங்குபோல் நல்ல மனிதர்கள் மேல்...

இதனால் எத்தனை எத்தனை துன்பமடி!....
எவர் அவர் தடுப்பார் இவர்(கள்)மனதை ...!!!
நல்லதைப் பேசியே நாம் வாழ்ந்தால் 
நாளுமோர் இன்பம் எமைத் தேடி வரும் ...

இன்னலைக் கொடுக்கும் உறவுகளாய் 
நாம் இருப்பதை விட மேல் மரணம் என்பேன்...
அன்னலின் வார்த்தைக்கு அடிபணிந்து 
இன்றும் அகிலமே தழுவுது அவர் பெயரை..!!!

நல்லவர் மனதை யார் மறப்பார் ..............
யாவுமே இங்கு பொய்யானபின்பும் 
உள்ளத்தின் அன்பிற்கு இணையேது !....
இதுபோல் உருப்படியானதொரு வழியைத் தேடு.... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/22/2011

இந்த வயசில இது தேவையா ..............

                                           கணவன் மனைவி கொண்ட காதல் 

வயசு சடுகுடு ஆட்டம் ஆடிடும்போதும் 
மனதினில் காதல் பொங்குமே -இங்கே 
ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் 
அது உயிருள்ளவரைக்கும் தொடருமே !.....

இரு உடலது கொண்ட சுகமது பெரிதென 
நினைப்பவர் காதல் நின்று போனாலும் 
பல கலைகளை ரசித்திடும் கிழவனின் மனதில் 
கிழவி கனி மொழியாள் வார்த்தை என்றும் இனிக்குமே!..

இது தவறென நினைப்பவர் தந்திடும் ஒப்பனை 
அதை இயந்திரம்கூட மறுக்குமே இன்றும் 
மறைவினில் நின்று தம் மனதினைப் பகிரும் 
உறவுகள் பலகோடி எங்கும் இருக்குதே ........

இதில் சரி எது பிழை எது பார்ப்பவர் எல்லாம் 
சத்தியம் ஒன்றை அறிவாரோ !......................
துணையதை இழந்த மனிதரின் வாழ்க்கைச் 
சுமையத்தை என்றும் உணர்வாரோ !........

நடுநிலை வாதம் தவறிய கோணம் 
நல்லவர் மனதைப் புண் படுத்தாதா.......
இளமையில்க் கொடுமையை உணர்ந்தவர் நெஞ்சம் 
முதுமையில் மனம் மகிழ்ந்தால் என்ன பஞ்சம்!....
                                                   நண்பர்கள் கொண்ட காதல்
கிழவனும் கிழவியும் கொண்ட காதல் 
கேவலம் என்று நினைப்பவரே 
உங்கள் அறிவினில் நிகழ்ந்திடும் 
தவறினைக் கொஞ்சம் அன்புடன் 
திருத்தப் பாருங்கள் .........................//

முதியவர் பாவம் முனங்குகின்றார் தினம் 
முதுமையில் அன்பை முறிப்பான் ஏன்! ........
கவலைகள் அற்றுக் கதை பல பேசியே 
கனிவுடன் வாழ நாமும் அனுமதிப்போம் ....

டிஸ்க்கி :-இந்த வயசில இது தேவையா ?....இதென்ன 
கேணைத்தனமான கேள்வி ?...இப்படிக் கேக்குறவங்க கொஞ்சம் 
உணரணும்.காதலின் புனிதமான உணர்வை நாம் கற்றுகொள்ள 
வேண்டிய இடமே இந்த இடம்தான் .இத்தனை வயதிலும் எத்தனை 
பாசம் !....இவங்கள றேசன் கடைக்கும்,அடுப்பங் கரைக்கும் ஓட 
ஓட விரட்டுறதில குறியா இருக்குறவங்க இங்க செம்பத் தூக்கினால் 
செம்பு நெளியாது கிளியும் .காரணம் இந்த இடத்தில என் நம்பிக்கை 
ட்சத்திரங்கள் இரண்டுபேரை நான் காவலுக்கு போட்டுள்ளேன் .
அதில்  ஒருத்தர் நம்ம சென்னைப் பித்தன் ஐயா .இரண்டாவது நம்ம 
இராமானுஜம் ஐயா .இவங்களத்  தாண்டிச் செம்பை எடுத்தால் 
நிர்வாகம் அதற்குப் பொறுப்பு இல்லை . இது எப்படி ஹி..ஹி ..ஹி ...வாழ்த்துக்கள் உறவுகளே இன்றைய பொழுது இன்பமாய் மலர .
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/21/2011

சிதைந்து போகும் உயிர்ச் சித்திரங்கள்.......

கேட்டால் ஒரு வரம் 
கேட்பவர்க்கு இல்லை என்றாய்!...
கேட்க்காமல்க் கிடைத்த வரமும் 
கேள்விக்குறி ஆனதென்ன .......!!!

காட்டாற்று வெள்ளம் அது 
கண்களிலே தினம் துள்ளும் 
மீண்டும் ஒரு துயர் தந்து 
என் மேனி அதைக் கொல்வதென்ன !....

இனி நாட்டம் இல்லை என் இறைவா 
எனக்கொரு நல்ல சேதி சொல்லிவிடு 
காற்றடித்த பந்து என்னைக் 
கல்லில் முள்ளில் ஏன் அலையவிட்டாய் ...//

ஒட்டுமொத்த தோல்வியையும் 
என்போன்ற ஒருத்தி மட்டும் சுமக்க என்று 
எத்தனை நாள்க் கனவு கண்டாய் 
ஏன் இறைவா எமைப் படைத்தாய் ............

அற்புதங்கள் நீ நிகழ்த்தும் 
அழகான இவ்வுலகில் 
கற்புடைய நங்கையரின் 
கற்புக்கொரு காவலில்லை......!!! 

எச்சியிலையாய் எமை நினைக்கும் 
இரக்கமற்ற மனிதர்களால் 
விட்டில்ப் பூச்சிபோல் வெந்து தணியும் 
இந்த வேதனையான வாழ்வெதற்கு!......

நட்ட நடு ராத்திரியில் 
நல்ல தூக்கம் போகையிலே 
எட்டி நரிகள் பார்க்கிறதே 
தன்  ஏக்கம் தீர்க்கத் தவிக்கிறதே.........

இந்த ஏழைக் குடிசை வாசி எம்மை 
உலகம் ஏளனமாய் நினைக்குறதே!...
காலைப் பொழுது விடியும் பொழுது 
இதைக் காணக் கண்கள் கூசுறதே!.....

ஆசை இல்லை என்றால் அது பொய் 
அதையும் அடக்கும் எமக்கேன் இத்தனை துன்பம் 
காசைப் பெரிதாய் மதிக்கும் ஜென்மம் 
நம் கர்ப்பைத் தூசாய் நினைக்குறதே.....!!!

சுற்றம் இல்லை இங்கே எமக்கொரு 
சொந்தம் இல்லைக் காப்பதற்கு  
நாம் கற்ற வித்தை எதுவும் இல்லை 
எம்மைக் கைவிட்டால் உனக்கும்தான்  
கருணை இல்லை என் இறைவா!.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/10/2011

மீனாட்சி அருளாலே .......

மீனாட்சி அருளாலே 
அந்தக் காமாட்சி அருளாலே 
நான் பாட்டுப் பாடுகின்றேன் 
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....

வாராயோ மகமாயி ...........
வந்து குறை தீராயோ மகமாயி 
நாம் ஏறாத மலையில்லை
இனி எங்களுக்கோர் துணை இல்லை ...

மீனாட்சி அருளாலே 
அந்தக் காமாட்சி அருளாலே 
நான் பாட்டுப் பாடுகின்றேன் 
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....

ஆறோடும் வீதி எங்கும் 
அடி ஆத்தாடி உன் முகத்தை 
நாள்தோறும் தேடுகின்றோம் 
நமக்கொரு நல்ல வழி காட்டாயோ .....

பௌர்ணமி தினத்தின்று உனக்கொரு 
பட்டுடுத்திப் பார்க்கவென்று 
பச்சை இலைபோல் மனமும் இங்கே 
உன் பக்க துணை தேடுதடி .............

நட்ட நடு ராத்திரியில் 
நல்ல சோதி ஆனவளே............
எட்டி அடி வைத்து இங்கே 
எழுந்தருளி வாருமம்மா ...........

மீனாட்சி அருளாலே 
அந்தக் காமாட்சி அருளாலே 
நான் பாட்டுப் பாடுகின்றேன் 
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
இங்கு நல்லோர்கள் வாழ்த்துரைக்க ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/06/2011

வடபழனி அம்மன் ஆலயம் ...........

வடபழனி அம்மன் ஆலயம் 
அங்கு வந்தாரை வாழவைப்பாள் 
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....
மனம் தொழுதே தினம் தொழுதே....
அவள் மகிமைகளைச் சொல்லிடவா...
இறைவனில்லை இறைவனில்லை 
என்றவரும் தொழுதனரே ...............

வடபழனி அம்மன் ஆலயம் 
அங்கு வந்தாரை வாழவைப்பாள் 
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....

சிலையென இருப்பவள் நிஜ அம்மனென்றோ..
எம் சிந்தையை மயக்கிடும் செல்வியன்றோ 
அழுபவர் விழிகளைத் துடைக்கின்றாள்
நல் ஆறுதல் தந்து அணைக்கின்றாள்.....

அடியவர் கூட்டம் மனம் மகிழ்ந்து 
ஆடிடப் பாடிட நான் கண்டேன் 
சிறியவர் பெரியவர் முதற்கொண்டு 
தேவியின் பாதம் தொக்கண்டேன் 

வடபழனி அம்மன் ஆலயம் 
அங்கு வந்தாரை வாழவைப்பாள் 
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....

என் கனவினில் நினைவினில் தாயவளின் 
கரம்தொடும் உணர்வினை நான் கண்டேன் 
ஒருமுறை கண்ட விழியிரண்டும் 
பலமுறை காணத் துடிப்பதென்ன ................

சருகெனக் கிடந்த என் வாழ்வில் இன்று 
சாதிக்கப் பல வழி தெரிந்ததென்ன ....
அருள்மொழி கூறிடும் அவள் முகத்தில் 
ஆயிரம் நிலவொளி நான் கண்டேன் ......

வடபழனி அம்மன் ஆலயம் 
அங்கு வந்தாரை வாழவைப்பாள் 
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....
ஒருமுறைதான் சென்றேன் அங்கே 
என் உணர்வுகளை வென்றாள் அம்மை....
                                
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10/03/2011

உருகுது உருகுது மனமிங்கே.........

உருகுது உருகுது மனமிங்கே 
வெள்ளிப் பனி போலே ............
நனையுது நனையுது விழி இங்கே 
உன்னால்த்தான் அன்பே ...........

அன்னைபோலே வந்தவளே 
அன்புருவாய் நின்றவளே 
என்னைவிட்டு எங்கு சென்றாய் 
என்னருகே வந்துவிடு .....................

உருகுது உருகுது மனமிங்கே 
வெள்ளிப் பனி போலே ............
நனையுது நனையுது விழி இங்கே 
உன்னால்த்தான் அன்பே ...........
உன்னால்த்தான் அன்பே .......

சோலைக் குயில் பாடவில்லை 
 உன் சொந்தங்களும் தூங்கவில்லை 
காலைமுதல் மாலைவரைக் 
கண்கள் இங்கே மூடவில்லை 
ஆலை இட்ட செங்கரும்பாய் 
ஆனதெடி என் மனசும் ...................

தாலி செய்யக் கூலி அதைத் 
தந்தவன் நான் வாடுகின்றேன் ....
ஏழை எந்தன் நெஞ்சுக்குள்ளே 
இன்று வந்த துன்பம் என்ன! ...
வேலை வெட்டி ஓடவில்லை 
உன் வெள்ளிச் சதங்கைச் சத்தம் எங்கே? ....

உருகுது உருகுது மனமிங்கே 
வெள்ளிப் பனி போலே ............
நனையுது நனையுது விழி இங்கே 
உன்னால்த்தான் அன்பே ...........
உன்னால்த்தான் அன்பே ...........

எண்திசையும் சுற்றி வந்தேன் 
எங்குமில்லை உன்னுருவம் 
வெண்ணிலவைத் தூதுவிட்டேன் 
வீதி எங்கும் தேடவிட்டேன் 
செண்பகமே செண்பகமே ஒரு 
சேதி சொல்லு காற்றிடத்தில்....
செண்பகமே செண்பகமே ஒரு 
சேதி சொல்லு காற்றிடத்தில்....


உருகுது உருகுது மனமிங்கே 
வெள்ளிப் பனி போலே ............
நனையுது நனையுது விழி இங்கே 
உன்னால்த்தான் அன்பே ...........
உன்னால்த்தான் அன்பே ........... 
உன்னால்த்தான் அன்பே ........... 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.