9/28/2013

அன்பால் என்னைக் கட்டிப் போட்டு பேரறிவால் நீயோ...



அன்பால் என்னைக் கட்டிப் போட்டு
பேரறிவால் நீயோ திட்டம் தீட்டு
வெண்பா எழுதி முடிப்பதற்குள்
உன்பால் என்னைச் சேர்த்து விடு ...

மண்ணும் பொன்னும்
மதியை மயக்கும்
உன்னை எண்ணும் பொழுதில்
உலகை மறக்கும் !!.........

தன்னந் தனிமையில் நின்றுகொண்டே
நான் தரையைப் பார்த்துப் பேசுகின்றேன்
எண்ணம் முழுதும் இறை நாமம் அதை
அதை எண்ணிக் களிக்குது என் சாமம் ...

விண்ணைச் சேரவும் பாதையில்லை
உன்னைக் காணவும் யோகமில்லை
என்னை ஏனோ சீண்டுகின்றாய்
எதை எதையோ எழுதச் சொல்லித் தூண்டுகின்றாய் !!

பொன்னில் வடித்த சிலை தானோ நீ
பேசாதிருந்தால் விடுவேனோ ......
அன்னப் பறவை போலுன்னை
அறியத் தந்த இறைவா சொல் !.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8 comments:

  1. எண்ணக் கதவிதனைத் திறந்தேநல்
    வண்ணக் கவிதனை எழுதிவிட்டாய்
    மின்னும் பொழுதுக்குள் அவனருளால் நாம்
    பண்ணிய பாவங்கள் தொலையட்டுமே!

    அற்புதமான கருத்தாழமிக்க வரிகள் தோழி!
    யாவர்க்கும் நல்லதே நடக்கட்டும்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான கருத்திற்கு மிக்க நன்றி தோழி .

      Delete
  2. //என்னை ஏனோ சீண்டுகின்றாய்
    எதை எதையோ எழுதச் சொல்லித் தூண்டுகின்றாய் !!//

    ஆசைப்பட்டு மேங்கோ ஜூஸ் கேட்டதனால் மட்டுமே தூண்டும் படி ஆனது. ;)))))

    சிறப்பான படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அப்போ இந்த ஒரு வார விடுமுறையைக் கூடவா நான் அனுபவிக்க முடியாது ?...:))) இதெல்லாம் மாம்பழ யூசின் மகிமை தான் ஐயா .என் செய்வேன் .கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றானதே என் நிலைமை !! :)))))))))

      Delete
  3. அருமை....

    மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  4. மனதின் ஆழத்தில் அதிரும் எண்ணங்கள் இங்கே மென்மையாய் ஒலிப்பதாக நினைக்கின்றேன்!..

    அன்னப் பறவை போல் அவனை அறிந்த பின்னும் // தீர்க்கமான வரிகள்.. கவிதையின் தனித்தன்மையில் மனம் நெகிழ்கின்றது!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா இனிமையான நற் கருத்திற்கு .

      Delete
  5. “தன்னந் தனிமையில் நின்றுகொண்டே-நான்- தரையைப் பார்த்துப் பேசுகின்றேன்” என்கிறீர்கள். பேசுவது நனறாகக் கேட்கிறது எங்களுக்கு. இன்னும் பேசுங்கள்! - கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னையிலிருந்து.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........