என் தேகம் பட்டுப் போனாலும்
இந்த சந்தேகம் விட்டுப் போகாது!
அதைச் சொல்லு சொல்லு சொல்லு மன்னா
எனை அள்ளு அள்ளு அள்ளு கண்ணா
உயிர்த் தீயில் தீயில் நீயே தானே
உருவாகி நின்றாய் தேனே தேனே...
என் தேகம் பட்டுப் போனாலும்
அந்த சந்தேகம் விட்டுப் போகாது ...
பஞ்சணை என்று நெஞ்சினிலே
தூங்கத் துடிக்கின்றாய்
பகலும் இரவும் என் விழியைப்
பார்த்தே ரசிக்கின்றாய்!
கொஞ்சிடும் போது இதழ்களை வருடிக்
கோலம் போடுகின்றாய்!
விஞ்சிடும் போது விரல்களைப் பிடித்தே
விருப்பைத் தொடருகின்றாய்!
இது ஏனோ ஏனோ!
பிடிவாதம் தானோ!
விடை கூறு கண்ணா?
விழி தேடும் மன்னா!
இது காதல் தானடி பெண்ணே என் மீது
கருணை காட்டடி கண்ணே!
சிற்றிடை மீது பற்றிய தீயைத்
தீண்டித் தணிகலாம் வா....
ஒத்தையில் வந்தால் முத்தமாய்த் தந்து
உயிரைக் குடிக்கலாம் வா .........
பெண்
இது ஆசை ஆசை பொல்லாதது
அந்தம் ஏதும் இல்லாதது
இழந் தென்றல் உன்னால் சூடானது ...
இனி எங்கும் முன்னே நில்லாதிது
ஆண்
உன் தேகம் பொன்னானது
என் மோகம் என்னாவது ?
சந்தேகம் உண்டானது இதில்
சந்தோசம் சதிராடுதே!.....
(என் தேகம் பட்டுப் போனாலும் ...)
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மணம் 1
கன்னல் சுரக்கின்ற காதல் கவிபடித்தால்
இன்னல் வருமோ இனி?
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
என்ன பாட்டியம்மா இந்த தள்ளாத வயதிலும் நல்லாவே காதல் பாட்டு பாடுறீங்க....இப்படி பாடி பாடியே இளமனசை (என் மனசு} கெடுக்கிறீங்க இந்த பாட்டை பாடி அமெரிக்க பெண்ணைமயக்கலாம் என்று பார்த்தால் அவள் என்னை கிறுக்கனாக பார்க்கிறாள் சரி இந்திய பெண்ணிடம் பாடினால் ஹிந்தி ஹிந்தி என்று சொல்லுகிறாள் சரி தமிழ் பெண்ணிடம் பாடினால் மூஞ்சை பாரு மூஞ்சை என்று காரித் துப்புகிறாள். பாவம் அந்த பொண்ணுக்கு இந்த பாட்டு புடிக்கலை போல இருக்கு.....தமிழ் பொண்ணுக்கு பிடிச்ச பாட்டா பாடுங்க
ReplyDeleteஅருமை சகோதரியாரே
ReplyDeleteதம 3
சரியான போட்டிக்கவிதை. பதிலுக்கு உடன் பதில். ரசிக்கும்படி உள்ளது.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteத.ம. +1
சிறந்த பாவடிகள்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
காதலின் அழகு வரிகளில் தெரிகிறது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
என்பக்கம் கவிதையாக -நீநெஞ்சில்தந்த காயங்கள்
வாருங்கள் அன்புடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
#சிற்றிடை மீது பற்றிய தீயைத்
ReplyDeleteதீண்டித் தணிக ? லாம் வா ......#
சென்சாரில் கட் செய்யப்பட வேண்டிய வரிகள் இவை ,நீங்கள் சில எழுத்துக்களை மட்டுமே கட் செய்தது போலிருக்கே !))))
த ம 5
காதலின் சங்கீதம் காலத்தை வென்றிடும்
ReplyDeleteமோதல் பெருக்கும் மொழி !
அருமை அருமை சகோ அம்பாள்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
6
சரளமாக வந்து விழும் வார்த்தைகள்
ReplyDeleteஉள்ளம் கவர்ந்து போகிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 8
ReplyDeleteசகோதரி இப்படியெல்லாம் காதல் கவி புனைந்தால்....ம்ம்ம்ம் உள்ளம் கொள்ளை கொள்கின்றது!...ரசித்தோம்!
ReplyDelete